பாடம் 1
கடவுள் எதைத் தேவைப்படுத்துகிறார் என்று நீங்கள் எப்படி கண்டறியலாம்
பைபிளில் என்ன முக்கியமான தகவல் அடங்கியிருக்கிறது? (1)
பைபிளின் நூலாசிரியர் யார்? (2)
நீங்கள் ஏன் பைபிளைப் படிக்க வேண்டும்? (3)
1. கடவுளிடமிருந்து கிடைத்த மதிப்புமிக்க ஒரு பரிசு பைபிள். ஓர் அன்பான தகப்பனிடமிருந்து அவருடைய பிள்ளைகளுக்கு வந்த ஒரு கடிதத்தைப் போன்றது அது. கடவுளைப் பற்றிய சத்தியத்தை—அவர் யார், மேலும் அவருடைய தராதரங்கள் என்னென்ன என்பவற்றை—அது நமக்குச் சொல்லுகிறது. பிரச்சினைகளைச் சமாளிப்பது எப்படி என்றும் உண்மையான மகிழ்ச்சியைக் கண்டடைவது எப்படி என்றும் அது விளக்குகிறது. கடவுளைப் பிரியப்படுத்துவதற்கு நாம் என்ன செய்ய வேண்டும் என்று பைபிள் மட்டுமே நமக்குச் சொல்லுகிறது.—சங்கீதம் 1:1-3; ஏசாயா 48:17, 18.
2. பொ.ச.மு. 1513-ல் தொடங்கி, 1,600 வருட காலப்பகுதியில் சுமார் 40 வித்தியாசமான மனிதரால் பைபிள் எழுதப்பட்டது. அது 66 சிறிய புத்தகங்களால் ஆனது. பைபிளை எழுதியவர்கள் கடவுளுடைய ஆவியால் ஏவப்பட்டவர்கள். அவருடைய எண்ணங்களை அவர்கள் எழுதினார்கள், தங்கள் சொந்த எண்ணங்களை அல்ல. ஆகவே பரலோகத்தில் உள்ள கடவுள் தாமே பைபிளின் நூலாசிரியர், பூமியிலுள்ள எந்த மனிதனும் அல்ல.—2 தீமோத்தேயு 3:16, 17, NW; 2 பேதுரு 1:20, 21.
3. பைபிள் திருத்தமாக நகலெடுக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டதாய் இருக்கும்படி கடவுள் நிச்சயப்படுத்திக் கொண்டார். வேறு எந்தப் புத்தகத்தையும்விட பைபிள்கள் அதிகமாக அச்சிடப்பட்டிருக்கின்றன. நீங்கள் பைபிளைப் படிப்பதைக் குறித்து எல்லாரும் மகிழ்ச்சி அடையமாட்டார்கள்; ஆனாலும் அது உங்களை நிறுத்திவிட அனுமதிக்காதீர்கள். எவ்வித எதிர்ப்பின் மத்தியிலும் நீங்கள் கடவுளை அறிவதையும் அவருடைய சித்தத்தைச் செய்வதையும் சார்ந்தே உங்களுடைய நித்திய எதிர்காலம் இருக்கிறது.—மத்தேயு 5:10-12; யோவான் 17:3.