பாடல் 49
யெகோவா நம் தஞ்சமே!
அச்சடிக்கப்பட்ட பிரதி
1. யெ-கோ-வா நம் தஞ்-ச-மே,
நம்-பும் நம் நெஞ்-ச-மே.
அ-வர் நம் வான் கு-டை-யே,
நிற்-போம் அ-தன் கீ-ழே!
ந-மக்-க-வர் க-வ-ச-மே;
காண்-போம் அ-வர்-தம் ப-ல-மே.
நம் கோட்-டை யெ-கோ-வா-வே,
என்-றும் த-ரு-வார் தஞ்-ச-மே!
2. மாந்-த-ரில் ஆ-யி-ர-மோ
பத்-தா-யி-ரம் பே-ரோ
வீழ்ந்-தா-லும் உன் முன்-னா-லே,
காண்-பாய் பா-து-காப்-பே!
பொல்-லாப்-பிற்-கு ந-டுங்-கா-தே,
பே-ரா-பத்-திற்-கு அஞ்-சா-தே.
தே-வ-னின் செட்-டை கீ-ழே
என்-றும் பு-கு-வாய் தஞ்-ச-மே!
3. நீ போ-கும் பா-தை-யெல்-லாம்
கற்-கள் இ-ருந்-தா-லே,
தே-வன்-தாம் நீக்-கு-வா-ரே,
உன் கால் இ-ட-றா-தே!
சிங்-கம் கண்-டு அஞ்-சி-டா-யே,
பாம்-பைக் கா-லால் மி-திப்-பா-யே.
நம் கோட்-டை யெ-கோ-வா-வே,
என்-றும் அ-ளிப்-பார் தஞ்-ச-மே!
(காண்க: சங். 97:10; 121:3, 5; ஏசா. 52:12.)