அறிவிப்புப் பலகையைத் தவறாமல் பார்க்கிறீர்களா?
சபையில் தங்களுக்கு எப்போது நியமிப்பு இருக்கிறதெனத் தெரிந்துகொள்ள மூப்பர்களும் உதவி ஊழியர்களும் மற்றவர்களும் அறிவிப்புப் பலகையைத் தவறாமல் பார்க்கிறார்கள். என்றாலும், சபையார் அனைவருமே சில முக்கியமான தகவல்களைத் தெரிந்துகொள்ள அறிவிப்புப் பலகையைப் பார்ப்பது நல்லது. ராஜ்ய மன்றத்தைச் சுத்தம் செய்யும் பொறுப்பு உங்கள் தொகுதிக்கு எப்போது நியமிக்கப்பட்டிருக்கிறது? வட்டாரக் கண்காணியிடமிருந்தோ கிளை அலுவலகத்திடமிருந்தோ ஏதாவது முக்கியமான கடிதம் வந்திருக்கிறதா? பைபிள் மாணாக்கருக்குச் சொல்ல இந்த வார பொதுப் பேச்சின் தலைப்பு உங்களுக்குத் தெரியுமா? கூட்டம் நடைபெறுகிற நேரத்தில் அல்லது உங்கள் ஊழியத் தொகுதியில் ஏதாவது மாற்றம் செய்யப்பட்டிருக்கிறதா? இதுபோன்ற தகவல்கள் கூட்டங்களில் அறிவிக்கப்படுவதில்லை. இதையெல்லாம் மூப்பர் ஒவ்வொரு பிரஸ்தாபியிடம் வந்து தெரிவிப்பதும் சாத்தியமில்லை. எனவே, நாம்தான் போய் அறிவிப்புப் பலகையைத் தவறாமல் பார்க்க வேண்டும். அப்படிச் செய்தால் ‘எல்லாக் காரியங்களும் கண்ணியமாகவும் ஒழுங்காகவும் நடைபெறும்.’—1 கொ. 14:40.