அதிக மதிப்புள்ள நம் புத்தகங்கள்
1 யெகோவாவையும் இயேசுவையும் பற்றிய விஷயங்கள் பொக்கிஷம் போல் பைபிளில் புதைந்து கிடக்கிறது! இந்த ஆழமான விஷயங்களை உலகத்திலேயே நம்முடைய அமைப்பு மட்டும்தான் புத்தகங்கள் மூலம் மக்களுக்கு கொடுக்கிறது. (ரோ. 11:33; பிலி. 3:8) நம் புத்தகங்களுக்கு அதிக மதிப்பு இருக்கிறது! அதன் மதிப்பை நன்றாக புரிந்துகொள்கிறோம் என்பதை எப்படி காட்டலாம்?
2 புத்தகங்களை மதிக்கிறோம் என்பதைக் காட்டுவதற்கு ஒரு வழி நன்கொடை கொடுப்பது. நிறைய பேர் குடும்பமாகவும் தனித்தனியாகவும் மாதா மாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை “உலகளாவிய வேலைக்கான” நன்கொடை பெட்டியில் போடுகிறார்கள். நம் புத்தகங்களை மதிக்கிறோம் என்பதை காட்டுவதற்கு இன்னொரு வழி, ஊழியத்தில் பார்க்கும் நபர்களுக்கு புத்தகங்களை ரொம்ப கவனமாக கொடுப்பது. இந்தக் கேள்விகளை கேட்டுக்கொள்ளுங்கள்: ஊழியத்தில் பார்ப்பவர் என்னிடம் பேசுவதற்கு தயாராக இருக்கிறாரா? நான் பேசும்போது ஆர்வமாக கேட்கிறாரா? கேள்விகளுக்கு எப்படி பதில் சொல்கிறார்? பைபிளில் இருந்து வாசிக்கும்போது கவனிக்கிறாரா? இதையெல்லாம் அந்த நபர் செய்தால் தாராளமாக அவருக்கு ஏற்ற ஒரு புத்தகத்தை கொடுக்கலாம். நம்முடைய புத்தகங்களுக்கு ரொம்ப மதிப்பு இருக்கிறது, அதை மிகவும் கவனமாக பயன்படுத்த வேண்டும்.
3 ராஜ்ய மன்றத்திலும் வீட்டிலும் புத்தகங்கள் தேங்கிக் கிடப்பதால் எந்தப் பிரயோஜனமும் இல்லை. பழைய பத்திரிகைகள், புத்தகங்கள், சிற்றேடுகள், துண்டுப்பிரதிகள் இருந்தால், அவற்றையும் நன்றாக பயன்படுத்துங்கள். அவை எந்த நிலையில் இருக்கிறது? கிழிந்து போகாமல், ரொம்ப பழையதாக, பழுப்பு நிறமாக இல்லாமல் இருந்தால் ஊழியத்தில் கொடுக்கலாம். ஊழியத்தில் கொடுக்க முடியாத நிலையில் இருந்தால் நீங்களே வைத்துக்கொள்ளலாம் அல்லது தகுந்த விதத்தில் அப்புறப்படுத்தலாம். ஊழியத்தில், அந்தந்த மாதத்தில் கொடுக்க வேண்டிய புத்தகங்களை கொடுப்பது முக்கியம்தான். முடிந்தவரை பழைய புத்தகங்களையும் கொடுங்கள்.
4 ஊழியத்தில் எவ்வளவு பத்திரிகைகளை கொடுப்பீர்களோ அதை மட்டும் சபையில் இருந்து வாங்கிக்கொள்ளுங்கள். எக்கச்சக்கமான புத்தகங்களை வீட்டில் தேக்கி வைக்க வேண்டிய அவசியம் இல்லை. ஒவ்வொரு வாரமும் கூட்டங்களுக்கு போகும்போது தேவையான புத்தகங்களை வாங்கிக்கொள்ளலாம், தீர்ந்த பிறகு மீண்டும் வாங்கிக்கொள்ளலாம்.
5 நிறைய பேர் துண்டுப்பிரதிகளை விரும்பிப் படிப்பார்கள். அவர்களுடைய கேள்விகளுக்கு அதில் நேரடியான பதில் இருக்கும். அதனால், பொது ஊழியத்திலும் வீட்டுக்கு வீடு ஊழியத்திலும் துண்டுப்பிரதிகளை, பத்திரிகைகளை அல்லது சிற்றேடுகளை கொடுக்கலாம். பொது ஊழியத்தில், தூண்டுப்பிரதிகளுக்காகவும் சிற்றேடுகளுக்காகவும் தயாரிக்கப்படும் போஸ்டர்களைப் பயன்படுத்துங்கள். நற்செய்தி அல்லது மணவாழ்க்கை சிற்றேட்டை பயன்படுத்தி பைபிள் படிப்பு ஆரம்பிக்க முயற்சி செய்யுங்கள். அவர்கள் தொடர்ந்து ஆர்வம் காட்டினால் பைபிள் கற்பிக்கிறது புத்தகத்தில் இருந்தோ அவர்களுக்கு ஏற்ற வேறு புத்தகத்தில் இருந்தோ பைபிள் படிப்பை நடத்தலாம். ஒருவேளை, அவர் பைபிளில் இருந்து நிறைய கேள்விகள் கேட்டால் முதல் சந்திப்பிலேயே பைபிள் கற்பிக்கிறது புத்தகத்தில் இருந்து படிப்பை ஆரம்பிக்கலாம். முடிந்தவரை, jw.org-ல் இருக்கும் எலக்ட்ரானிக் புத்தகங்களை பயன்படுத்த முயற்சி செய்யுங்கள்.
6 நம்முடைய புத்தகங்களை ஞானமாக பயன்படுத்துவோம்! அதன் மதிப்பை புரிந்து நடந்துகொள்வோம்!!