செப்டம்பர் 21-ல் ஆரம்பிக்கும் வாரத்தின் அட்டவணை
செப்டம்பர் 21-ல் ஆரம்பிக்கும் வாரம்
பாட்டு 130; ஜெபம்
சபை பைபிள் படிப்பு:
பைபிள் கதை 72 (30 நிமி.)
தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: 2 இராஜாக்கள் 19-22 (8 நிமி.)
எண் 1: 2 இராஜாக்கள் 20:12-21 (3 நிமிடத்திற்குள்)
எண் 2: ஏகூத்—தலைப்பு: யெகோவா அவருடைய மக்களை காப்பாற்றுவார்—நியா. 3:12-30 (5 நிமி.)
எண் 3: யெகோவாவின் சாட்சிகளுடைய ஆரம்பம்—பேச்சு பொருள் 39அ (5 நிமி.)
ஊழியக் கூட்டம்:
இந்த மாதத்திற்கான வசனம்: ‘நற்செய்திக்கு முழுமையாகச் சாட்சி கொடுங்கள்.’—அப். 20:24.
15 நிமி: போன ஊழிய ஆண்டில் என்ன சாதித்தோம்? ஊழிய கண்காணி கொடுக்கும் பேச்சு. சபையாக போன வருடம் எவ்வளவு ஆர்வமாக ஊழியம் செய்திருக்கிறார்கள் என்பதை சொல்லுங்கள். எந்தெந்த விஷயத்தில் நன்றாக செய்திருக்கிறார்கள் என்பதை சொல்லி பாராட்டுங்கள். வரும் ஆண்டில் முன்னேற வேண்டிய ஏதாவது ஒன்று அல்லது இரண்டு விஷயங்களை சொல்லி, அதை எப்படி செய்யலாம் என்பதையும் சொல்லுங்கள்.
15 நிமி: “அதிக மதிப்புள்ள நம் புத்தகங்கள்.” கலந்து பேசுங்கள். ஊழியத்தில் பார்க்கும் நபர்கள் நம் புத்தகங்களை ஆர்வமாக படிப்பார்களா என்பதை எப்படி கண்டுபிடிக்கலாம் என்று சொல்லுங்கள்.
பாட்டு 10; ஜெபம்