ஊழியத்தில் திறமைகளை மெருகூட்ட... வியாபாரம் செய்யும் இடங்களில் ஊழியம்
ஏன் முக்கியம்? இன்று நிறைய பேரை வீட்டில் பார்ப்பதே கஷ்டமாக இருக்கிறது. வேலை செய்யும் இடத்தில்தான் ரொம்ப நேரம் இருக்கிறார்கள். வேலை செய்யும் இடங்களில் ஊழியம் செய்தால் அவர்கள் எல்லாரிடமும் கடவுளுடைய ஆட்சியைப் பற்றி பேச முடியும். வியாபாரம் செய்யும் இடங்களில் ஊழியம் செய்யும்போது, கடையில் யாரும் இல்லை என்று திரும்பி வரவேண்டிய அவசியம் இருக்காது. நாமும் கடையில் ஏதோ வாங்க வந்திருக்கிறோம் என்று நினைத்து அன்பாக பேசுவார்கள். அதனால், நிறையப் பேரை பார்த்து பேசின திருப்தியும் சந்தோஷமும் கிடைக்கும். வியாபார இடங்களில் ஊழியம் செய்யும்போது யோசித்து பேச வேண்டும், கவனமாக நடந்துகொள்ள வேண்டும். அப்போதுதான் நன்றாக கேட்பார்கள். அதோடு, நம் உடையும் தோற்றமும் அடக்கமாக இருக்க வேண்டும். (2 கொ. 6:3) வியாபாரம் செய்யும் இடங்களில் யாரெல்லாம் ஊழியம் செய்கிறார்கள் எப்போதெல்லாம் செய்கிறார்கள் என்பதை சபையின் ஊழியக் கண்காணி கவனித்துக்கொள்ள வேண்டும்.
இந்த மாதம் செய்து பாருங்கள்:
வியாபாரம் செய்யும் இடங்களில் பேசுவதுபோல் அடுத்த குடும்ப வழிபாட்டில் நடித்துப் பாருங்கள்.