பாடல் 5
ஏசு நமக்கு முன்மாதிரி
அச்சடிக்கப்பட்ட பிரதி
1. யெ-கோ-வா-வின் அன்-பே எல்-லை-யில்-லா அன்-பே;
ஆ-சை ம-க-னை த்யா-கம் செய்-தா-ரே!
ம-க-னும் உ-யி-ரை த-ர முன்-வந்-தா-ரே;
நித்-ய வாழ்-வுக்-கே வ-ழி செய்-தா-ரே!
2. தே-வ-னின் மா-பெ-யர் பு-னி-தப்-ப-ட-வே,
விண்-ணின் ஆ-ளு-கை இங்-கு வ-ர-வே,
தே-வ-னின் சித்-தம்-தான் நி-றை-வே-றி-ட-வே,
ஏ-சு போ-தித்-தார் ஜெ-பம் செய்-ய-வே!
3. அ-ரும் சத்-தி-ய-மே ஏ-சு கற்-பித்-தா-ரே;
அண்-டி-ய ஆட்-டை தூக்-கிக்-கொண்-டா-ரே!
ராஜ்-ய வே-லை-யி-லே மா-தி-ரி வைத்-தா-ரே,
பின்-பற்-றி-னா-லே த்ருப்-தி காண்-போ-மே!
(காண்க: மத். 6: 9-11; யோவா. 3:16; 6: 31-51; எபே. 5: 2.)