வீடியோக்களைப் பயன்படுத்தி கற்பியுங்கள்
ஆபிரகாமுக்கும் எரேமியாவுக்கும் ஒரு முக்கியமான விஷயத்தைத் தெரிவித்தபோது யெகோவா வெறுமனே அதை வார்த்தைகளில் சொல்லவில்லை, பொருத்தமான ஒன்றைக் காண்பித்து விளக்கினார். (ஆதி. 15:5; எரே. 18:1-6) நாமும் நம்முடைய பைபிள் மாணாக்கர்கள் பைபிள் சத்தியத்தை நன்கு புரிந்துகொள்வதற்கு படங்கள், பொருள்கள், வீடியோக்கள் போன்றவற்றைக் காண்பித்து அவர்களுக்குக் கற்பிக்கலாம். ஒருவேளை அந்த மாணாக்கர்களுக்கு ஆங்கிலம் தெரிந்திருந்தால் அமைப்பு வெளியிட்டுள்ள ஆங்கில வீடியோக்களைக் காட்டலாம். அல்லது, அவருக்குத் தெரிந்த மொழியில் வீடியோக்கள் இருந்தால் அதைக் காட்டலாம். நம்மிடம் இருக்கும் வீடியோக்களை எப்போது காட்டலாம் என்பதற்குச் சில ஆலோசனைகள் கீழே உள்ளன. ஒவ்வொரு மாணாக்கருக்கு ஏற்றாற்போல் இந்த ஆலோசனைகளைப் பயன்படுத்தலாம்.
பைபிள் கற்பிக்கிறது புத்தகம்
◻ அதிகாரம் 1: பாரா 17-ஐ சிந்தித்தபின், அற்புதப் படைப்பு கடவுளின் மகிமையை வெளிப்படுத்துகிறது (ஆங்கிலம்) வீடியோவைக் காட்டுங்கள்.
◻ அதிகாரம் 2: இதன் முடிவில், பைபிள்—நவீன காலத்திற்கு ஏற்ற மிகப் பழமையான புத்தகம் (ஆங்கிலம்) வீடியோவைக் காட்டுங்கள்.
◻ அதிகாரம் 9: பாரா 14-ஐ சிந்தித்தபின், யெகோவாவின் சாட்சிகள்—நற்செய்தி அறிவிக்க ஒழுங்கமைக்கப்பட்டோர் (ஆங்கிலம்) வீடியோவைக் காட்டுங்கள்.
◻ அதிகாரம் 14: இதன் முடிவில், பைபிள்—உங்கள் வாழ்க்கையில் அதன் செல்வாக்கு (ஆங்கிலம்) வீடியோவைக் காட்டுங்கள்.
◻ அதிகாரம் 15: பாரா 10-ஐ சிந்தித்தபின், நம் சர்வதேச சகோதரத்துவம் (ஆங்கிலம்) வீடியோவைக் காட்டுங்கள்.
‘கடவுளது அன்பு’ புத்தகம்
◻ அதிகாரம் 3: பாரா 15-ஐ சிந்தித்தபின், இளைஞர் கேட்கின்றனர்—நல்ல நண்பர்களைத் தேர்ந்தெடுப்பது எப்படி? (ஆங்கிலம்) வீடியோவைக் காட்டுங்கள்.
◻ அதிகாரம் 4: இதன் முடிவில், யெகோவாவின் அதிகாரத்திற்கு மரியாதை காட்டுங்கள் (ஆங்கிலம்) வீடியோவைக் காட்டுங்கள்.
◻ அதிகாரம் 7: பாரா 12-ஐ சிந்தித்தபின், இரத்தமில்லா சிகிச்சை—மருத்துவம் இந்தச் சவாலைச் சந்திக்கிறது (ஆங்கிலம்) வீடியோவைக் காட்டுங்கள்.
◻ அதிகாரம் 9: பாரா 6-ஐ சிந்தித்தபின், நம்மை எச்சரிக்கும் உதாரணங்கள் (ஆங்கிலம்) வீடியோவைக் காட்டுங்கள்.
◻ அதிகாரம் 17: இதன் முடிவில், ‘கண்ணால் காண்பதன்படி நடக்காமல் விசுவாசத்தின்படி நடங்கள்’ வீடியோவைக் காட்டுங்கள்.
உங்கள் பைபிள் மாணாக்கர் பார்த்துப் பயனடைய உதவுகிற வேறு வீடியோக்கள் இருக்கின்றனவா? உதாரணத்திற்கு, மாணாக்கர் எதிர்ப்பைச் சந்தித்தால் சோதனைகளின் மத்தியிலும் உண்மையாயிருத்தல்—சோவியத் யூனியனில் யெகோவாவின் சாட்சிகள் (ஆங்கிலம்) வீடியோ அல்லது யெகோவாவின் சாட்சிகள்—நாசி தாக்குதலுக்கு எதிராக உறுதியாய் நிற்கிறார்கள் (ஆங்கிலம்) வீடியோ அவருக்கு உற்சாகமளிக்கலாம். இளைஞர் கேட்கின்றனர்—வாழ்க்கையில் என் லட்சியம் என்ன? (ஆங்கிலம்) வீடியோவைப் பார்த்தால் இளைஞர்கள் பயனடையலாம். ஒரு வீடியோவை மாணாக்கருக்கு எப்போது காட்டலாம் என்பதை நினைவில் வைக்க உங்களுடைய பைபிள் கற்பிக்கிறது புத்தகத்திலும், ‘கடவுளது அன்பு’ புத்தகத்திலும் அந்தந்த அதிகாரத்திலுள்ள பாராவின் பக்கத்தில் குறித்து வைத்துக்கொள்ளுங்கள். புதிய புதிய வீடியோக்கள் வெளிவரும்போது அதை எப்போது காட்டினால் பைபிள் மாணாக்கரின் இருதயத்தைத் தொடும் என்று யோசித்துப் பாருங்கள்.—லூக். 24:32.