உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • be படிப்பு 43 பக். 234-பக். 235 பாரா. 3
  • நியமிக்கப்பட்ட தகவலை பயன்படுத்துதல்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • நியமிக்கப்பட்ட தகவலை பயன்படுத்துதல்
  • தேவராஜ்ய ஊழியப் பள்ளியிலிருந்து பயனடையுங்கள்
  • இதே தகவல்
  • மாணாக்கர் பேச்சுக்களைத் தயாரித்தல்
    தேவராஜ்ய ஊழியப் பள்ளியிலிருந்து பயனடையுங்கள்
  • தயாரிப்பின் மதிப்பு
    தேவராஜ்ய ஊழியப் பள்ளி துணைநூல்
  • சபை பேச்சுக்களைத் தயாரித்தல்
    தேவராஜ்ய ஊழியப் பள்ளியிலிருந்து பயனடையுங்கள்
  • குறிப்புத்தாளை தயாரித்தல்
    தேவராஜ்ய ஊழியப் பள்ளியிலிருந்து பயனடையுங்கள்
மேலும் பார்க்க
தேவராஜ்ய ஊழியப் பள்ளியிலிருந்து பயனடையுங்கள்
be படிப்பு 43 பக். 234-பக். 235 பாரா. 3

படிப்பு 43

நியமிக்கப்பட்ட தகவலை பயன்படுத்துதல்

நீங்கள் என்ன செய்ய வேண்டும்?

நியமிக்கப்பட்ட பொருளை சுற்றியே பேச்சை அமையுங்கள். எதிலிருந்து தகவலை எடுக்க வேண்டுமென குறிப்பிடப்பட்டிருந்தால், அதிலுள்ள வேதவசனங்களையும் முக்கிய குறிப்புகளையும் பயன்படுத்துங்கள்.

ஏன் முக்கியம்?

பேச்சு தயாரிப்பதற்கு நியமிக்கப்பட்ட தகவலை பயன்படுத்தும்போது, உண்மையும் விவேகமுமுள்ள அடிமை வகுப்பால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள போஷாக்குத் திட்டத்திற்கு மரியாதை காட்டுகிறோம்.

கிறிஸ்தவ சபையை மனித உடலுக்கு பைபிள் ஒப்பிடுகிறது. ஒவ்வொரு அங்கமும் அவசியம், ஆனால் “அந்த உறுப்புகளெல்லாம் ஒரே செயலைச் செய்வதில்லை.” இதற்கு இசைவாக, நமக்கு எந்த சிலாக்கியம் கொடுக்கப்பட்டாலும் அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். எந்த பேச்சு நியமிப்பையும் நன்கு புரிந்துகொண்டு கவனமாக தயாரிக்க வேண்டும், வேறு சில பொருள்கள் அதிக சுவாரஸ்யமாக இருக்கும் என நினைத்துக்கொண்டு சிலவற்றின் முக்கியத்துவத்தை குறைவாக மதிப்பிடக் கூடாது. (ரோ. 12:4-8, பொ.மொ.) “ஏற்ற வேளையிலே” ஆவிக்குரிய உணவை வழங்கும் பொறுப்பு உண்மையும் விவேகமுமுள்ள அடிமை வகுப்பாருக்கு இருக்கிறது. (மத். 24:45) நமக்கு கொடுக்கப்பட்ட அறிவுரைகளின்படி பேச்சுக்களைத் தயாரிப்பதற்கு தனிப்பட்ட திறமைகளைப் பயன்படுத்தும்போது, இந்த ஏற்பாட்டிற்கு நம்முடைய போற்றுதலை காட்டுகிறோம். முழு சபையும் இடையூறின்றி இயங்குவதற்கு இது பங்களிக்கிறது.

எதை சேர்ப்பது. தேவராஜ்ய பள்ளியில் உங்களுக்கு ஒரு பொருள் நியமிக்கப்படும்போது, வேறொன்றில் அல்ல ஆனால் அந்தப் பொருளிலேயே பேச்சை தயாரியுங்கள். பெரும்பாலான சந்தர்ப்பங்களில், தகவலை எதிலிருந்து எடுக்க வேண்டும் என்பது தெரிவிக்கப்படும். எதை அடிப்படையாக கொண்டு உங்களுடைய பேச்சை தயாரிக்க வேண்டும் என்பது சொல்லப்படவில்லை என்றால், உங்களுடைய விருப்பத்திற்கேற்ப எதிலிருந்தும் தகவல்களை சேகரிக்கலாம். ஆனால் பேச்சு தயாரிக்கும்போது, நியமிக்கப்பட்ட பொருளை சுற்றியே முழு பேச்சும் அமைந்திருக்க வேண்டும் என்பதை மறந்துவிடாதீர்கள். எதை சேர்ப்பது என்பதை தீர்மானிக்கும்போது, உங்களுடைய சபையாரையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

பேச்சு கொடுப்பதற்கு நியமிக்கப்பட்ட தகவலை கவனமாக படித்து, அதிலுள்ள வேதவசனங்களை ஆராயுங்கள். பிறகு, சபையாருடைய நன்மைக்காக அதை எவ்வாறு மிகவும் திறம்பட்ட விதத்தில் பயன்படுத்தலாம் என்பதை சிந்தித்துப் பாருங்கள். உங்களுடைய பேச்சில் முக்கிய குறிப்புகளாக பயன்படுத்துவதற்கு அச்சிடப்பட்ட தகவலிலிருந்து இரண்டு அல்லது மூன்று குறிப்புகளைத் தேர்ந்தெடுங்கள். அதைப் போலவே, வாசித்து கலந்தாலோசிக்க திட்டமிடும் வேதவசனங்களையும் நியமிக்கப்பட்ட தகவலிலிருந்து தேர்ந்தெடுங்கள்.

எவ்வளவு தகவலை நீங்கள் பேச்சில் அளிக்க வேண்டும்? உங்களால் திறம்பட பயன்படுத்தக்கூடிய அளவு மட்டுமே. ஏகப்பட்ட தகவல்களை திணிப்பதற்காக நன்கு போதிக்கும் முறைகளை பலிகடா ஆக்கிவிடாதீர்கள். உங்களுடைய பேச்சின் குறிக்கோளிற்கு சில தகவல்கள் பொருந்தவில்லை என்றால், அந்த இலக்கை அடைய உதவும் பகுதிகள் மீது கவனத்தை ஒருமுகப்படுத்துங்கள். தகவல் நிறைந்ததாகவும் சபையாருக்கு அதிக பிரயோஜனமாகவும் இருக்கும் விஷயங்களையே நியமிக்கப்பட்ட தகவல்களிலிருந்து பயன்படுத்துங்கள். இந்தப் பேச்சு ஆலோசனை குறிப்பில் உழைக்கையில், நீங்கள் எவ்வளவு தகவலை பேச்சில் அளிக்க முடியும் என்பதை அறிவது அல்ல, ஆனால் நியமிக்கப்பட்டதைப் பயன்படுத்தி பேச்சை அமைப்பதே உங்களுடைய குறிக்கோளாக இருக்க வேண்டும்.

நியமிக்கப்பட்ட தகவலை சுருக்கமாக சொல்வதே உங்களுடைய பேச்சு என எண்ணிவிடாதீர்கள். சில குறிப்புகளை விளக்குவதற்கும், அவற்றின் சம்பந்தமாக கூடுதலான விவரங்களைக் கொடுப்பதற்கும், உதாரணத்துடன் தெளிவாக்குவதற்கும், அவற்றை பொருத்துவதற்கு ஓர் உதாரணத்தைப் பயன்படுத்துவதற்கும் திட்டமிட வேண்டும். உங்களுக்கு நியமிக்கப்பட்ட தகவலை மாற்றுவதற்குப் பதிலாக அதிலுள்ள முக்கிய குறிப்புகளை விரிவாக்குவதற்கு கூடுதலான கருத்துக்களைப் பயன்படுத்த வேண்டும்.

போதகர்களாக நன்கு தகுதிபெற்ற சகோதரர்கள், ஊழியக் கூட்டத்தில் போதிப்பதற்கு சிலசமயங்களில் வாய்ப்பளிக்கப்படலாம். நியமிக்கப்பட்ட தகவலை மாற்றுவதற்குப் பதிலாக, அதை திறம்பட பயன்படுத்த வேண்டிய அவசியத்தை அவர்கள் புரிந்திருக்கிறார்கள். அதைப் போலவே, பொதுப் பேச்சுக்கள் கொடுக்கும் சகோதரர்கள் குறிப்புத்தாள்களைப் பின்பற்ற வேண்டும். இவை ஓரளவு வளைந்து கொடுப்பதற்கு அனுமதிக்கிறபோதிலும், படிப்படியாக விரிவாக்க வேண்டிய முக்கிய குறிப்புகளையும், விவாதத்திற்குப் பொருத்தமான ஆதாரங்களையும், பேச்சிற்கு அஸ்திவாரமாக அமையும் வேதவசனங்களையும் அவை தெளிவாக சுட்டிக்காட்டுகின்றன. நியமிக்கப்பட்ட தகவலை ஆதாரமாக வைத்து போதிக்க கற்றுக்கொள்வது வேறு சில பேச்சு நியமிப்புகளுக்கு தயாராவதில் முக்கிய பாகம் வகிக்கிறது.

பைபிள் படிப்புகளை திறம்பட நடத்துவதற்கும் இந்தப் பயிற்சி உங்களுக்கு உதவும். படிப்பிற்குரிய தகவலின் மீது உங்களுடைய கவனத்தை ஒருமுகப்படுத்த கற்றுக்கொள்வீர்கள்; பொருளை புரிந்துகொள்வதற்கு அவசியமில்லாத ஆனால் கேட்பதற்கு சுவாரஸ்யமாக இருக்கும் வேறு விஷயங்களைச் சொல்ல மாட்டீர்கள். என்றபோதிலும், இந்தப் பாடத்தின் முக்கிய நோக்கத்தை நீங்கள் புரிந்துகொண்டால், நியமிக்கப்பட்ட தகவலை மட்டும் அப்படியே கொடுத்துவிட்டு மாணாக்கருக்குத் தேவைப்படும் கூடுதலான விளக்கத்தைக் கொடுக்காமல் இருந்துவிட மாட்டீர்கள்.

எப்படி செய்வது

  • நியமிக்கப்பட்ட பொருளுக்கு நேரடியாக தொடர்புடைய தகவலை மட்டுமே பயன்படுத்துங்கள்.

  • அச்சிடப்பட்ட தகவலை உங்களுடைய பேச்சிற்கு ஆதாரமாக பயன்படுத்த வேண்டியதாக இருந்தால், முக்கிய குறிப்புகளையும் வேதவசனங்களையும் அதிலிருந்தே தேர்ந்தெடுங்கள், வேறெதிலிருந்தும் எடுக்காதீர்கள்.

பயிற்சி: தினவசனத்தை மூன்று வெவ்வேறு நாட்களில் படிக்கும்போது, கலந்தாலோசிக்கப்படும் பொருளை அடையாளம் காட்டும் வார்த்தையை அல்லது சொற்றொடரை வட்டமிட்டுக் கொள்ளுங்கள். அந்தப் பொருளோடு நேரடியாக தொடர்புடைய சுருக்கமான ஓரிரண்டு குறிப்புகளை அடிக்கோடிட்டுக் கொள்ளுங்கள். பிறகு, குறித்து வைத்த வசனத்தையும் குறிப்புகளையும் பயன்படுத்தி அந்தப் பொருளின் பேரில் உங்களுடைய சொந்த வார்த்தைகளில் குறிப்பு சொல்லுங்கள்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்