பைபிளில் இருக்கும் புதையல்கள் | எசேக்கியேல் 6–10
தப்பிப்பிழைப்பதற்கான அடையாளத்தை நீங்கள் பெறுவீர்களா?
எசேக்கியேல் பார்த்த தரிசனம், எருசலேம் அழிக்கப்பட்டபோது முதல்முறையாக நிறைவேறியது. அந்தத் தரிசனம் நம் காலத்தில் எப்படி நிறைவேறும்?
செயலாளருடைய மைப் பெட்டியை வைத்திருந்தவர் இயேசு கிறிஸ்துவைக் குறிக்கிறார்
அடித்து நொறுக்குவதற்கான ஆயுதத்தை வைத்திருந்த ஆறு பேர் கிறிஸ்துவின் தலைமையின்கீழ் இருக்கிற பரலோக படையைக் குறிக்கிறார்கள்
மிகுந்த உபத்திரவத்தின்போது திரள் கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் செம்மறியாடுகளாக நியாயந்தீர்க்கப்படுவார்கள். அப்போது இந்த அடையாளத்தைப் பெறுவார்கள்