பைபிளில் இருக்கும் புதையல்கள் | நாகூம் 1–ஆபகூக் 3
ஆன்மீக ரீதியில் விழிப்பாகவும் சுறுசுறுப்பாகவும் இருங்கள்
பாபிலோனியர்கள் யூதாவை அழிப்பார்கள் என்று சொல்லப்பட்ட தீர்க்கதரிசனம் நிறைவேறாது என்பதுபோல் தோன்றியிருக்கலாம். ஏனென்றால், பலம்படைத்த எகிப்தியர்களுடைய ஆதிக்கத்தின்கீழ் யூதா இருந்தது. கல்தேயர்கள் எகிப்தியர்களைவிட பலம்படைத்தவர்களாக இருக்கவில்லை. அதோடு, எருசலேமும் அதன் ஆலயமும் அழிந்துபோவதற்கு யெகோவா விட மாட்டார் என்று நிறைய யூதர்கள் நினைத்தார்கள். இருந்தாலும், அந்தத் தீர்க்கதரிசனம் நிறைவேறவிருந்தது. ஆன்மீக ரீதியில் விழிப்பாகவும் சுறுசுறுப்பாகவும் இருப்பதன் மூலம் ஆபகூக் அதற்காகக் காத்திருக்க வேண்டியிருந்தது.
உலக அழிவு ரொம்பப் பக்கத்தில் இருப்பதை நான் ஏன் நம்புகிறேன்?
நான் எப்படி ஆன்மீக ரீதியில் விழிப்பாகவும் சுறுசுறுப்பாகவும் இருக்கலாம்?