வாழ்க்கையும் ஊழியமும் கூட்டத்துக்குத் தயாரிக்க தேவையான தகவல்கள்
பிப்ரவரி 4-10
பைபிளில் இருக்கும் புதையல்கள் | ரோமர் 1-3
“மனசாட்சிக்குத் தொடர்ந்து பயிற்சி கொடுத்துக்கொண்டே இருங்கள்”
கடவுளுக்கு முன் நல்ல மனசாட்சியோடு இருங்கள்
6 யெகோவாவைப் பற்றித் தெரியாதவர்களுக்குக்கூட சில விஷயங்கள் சரி, சில விஷயங்கள் தவறு என்று தெரியும். அவர்களாகவே “யோசித்துப் பார்த்து, தாங்கள் குற்றமுள்ளவர்களா குற்றமில்லாதவர்களா என்பதைத் தாங்களே தீர்மானித்துக்கொள்கிறார்கள்” என்று பைபிள் சொல்கிறது. (ரோமர் 2:14, 15) உதாரணத்துக்கு கொலை செய்வது, திருடுவது போன்ற விஷயங்கள் தவறு என்று பெரும்பாலான ஆட்களுக்குத் தெரியும். எப்படி? எது சரி, எது தவறு என்பதைப் பற்றிய உணர்வை, அதாவது மனசாட்சியை அவர்களுக்குள் யெகோவா வைத்திருக்கிறார். அதனால்தான், அவர்களை அறியாமலேயே அந்த மனசாட்சி சொல்வதைக் கேட்டு நடக்கிறார்கள். அதோடு, கடவுள் கொடுத்திருக்கும் நியமங்களின்படி, அதாவது வாழ்க்கையில் நல்ல தீர்மானங்களை எடுப்பதற்கு யெகோவா நமக்குக் கொடுத்திருக்கும் அடிப்படை உண்மைகளின்படி நடக்கிறார்கள்.
கடவுளுக்கு முன் நல்ல மனசாட்சியோடு இருங்கள்
8 தங்களுடைய விருப்பத்தின்படி செய்வதுதான் மனசாட்சியின்படி நடப்பது என்று சிலர் நினைக்கிறார்கள். தங்களுடைய மனதுக்குச் சரியென படுகிற எதை வேண்டுமானாலும் செய்யலாம் என அவர்கள் நினைக்கிறார்கள். ஆனால், நாம் பாவிகளாக இருப்பதால், நம் விருப்பங்கள் நம்மைத் தவறாக வழிநடத்திவிடலாம். அவற்றை நிறைவேற்றியே ஆக வேண்டுமென்ற ஆசை நமக்குள் தீவிரமாக இருக்கும்போது, நம் மனசாட்சி பாதிக்கப்படலாம். “எல்லாவற்றையும்விட மனுஷனுடைய இதயமே நயவஞ்சகமானது; அது எதையும் செய்யத் துணியும். அதை யாரால் புரிந்துகொள்ள முடியும்?” என்று பைபிள் சொல்கிறது. (எரேமியா 17:9) அதனால், தவறான ஒரு விஷயத்தைக்கூட சரியானது என நாம் நினைத்துவிடலாம். உதாரணத்துக்கு, பவுல் ஒரு கிறிஸ்தவராக ஆவதற்கு முன், கடவுளுடைய மக்களைப் பயங்கரமாகத் துன்புறுத்தினார். தான் செய்வது சரி என்று அவர் நினைத்தார். அவரைப் பொறுத்தவரை, அவருக்கு நல்ல மனசாட்சி இருந்ததாக அவர் நினைத்தார். ஆனால், “என்னை நியாயந்தீர்ப்பவர் யெகோவாதான்” என்று பிற்பாடு சொன்னார். (1 கொரிந்தியர் 4:4; அப்போஸ்தலர் 23:1; 2 தீமோத்தேயு 1:3) பவுல், தான் செய்துகொண்டிருந்ததைப் பற்றி யெகோவா எப்படி உணர்ந்தார் என்பதைத் தெரிந்துகொண்டபோது தன்னை மாற்றிக்கொள்ள வேண்டும் என்பதைப் புரிந்துகொண்டார். அப்படியானால், ஒரு விஷயத்தைச் செய்வதற்கு முன் நம்மையே இப்படிக் கேட்டுக்கொள்ள வேண்டும்: ‘நான் என்ன செய்ய வேண்டுமென்று யெகோவா விரும்புகிறார்?’
9 ஒருவர்மீது நமக்கு அன்பு இருந்தால் அவருக்குப் பிடிக்காத எதையும் நாம் செய்ய மாட்டோம். யெகோவாமீது நமக்கு அன்பு இருப்பதால் அவருக்குப் பிடிக்காத எதையும் செய்ய நாம் விரும்புவதில்லை. அவருக்குப் பிடிக்காததைச் செய்துவிடுவோமோ என்ற பயம் நமக்குள் இருப்பது ரொம்பவே முக்கியம். நெகேமியா இதற்குச் சிறந்த உதாரணம். தன்னுடைய ஆளுநர் பதவியைப் பயன்படுத்தி பணக்காரராக ஆக வேண்டுமென்று அவர் நினைக்கவில்லை. “கடவுளுக்குப் பயந்து நடந்ததால் அப்படிச் செய்யவில்லை” என்று அவரே சொன்னார். (நெகேமியா 5:15) யெகோவாவுக்குப் பிடிக்காத எதையும் செய்துவிடக் கூடாது என்ற பயம் நெகேமியாவுக்கு இருந்தது போலவே நமக்கும் இருக்க வேண்டும். பைபிளை வாசிக்கும்போது, யெகோவாவுக்கு என்னென்ன விஷயங்கள் பிடிக்கும், என்னென்ன விஷயங்கள் பிடிக்காது என்பதை நம்மால் தெரிந்துகொள்ள முடியும்.—பின்குறிப்பு 6.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
ரோமர் புத்தகத்திலிருந்து சிறப்பு குறிப்புகள்
3:4. மனிதர் சொல்லும் விஷயங்கள் கடவுளுடைய வார்த்தைக்கு முரணாக இருக்கும்போது, பைபிள் சொல்வதை நம்பி, கடவுளுடைய சித்தத்திற்கு இசைவாக செயல்படுவதன்மூலம் “தேவனே சத்தியபரர்” என்று விளங்கப்பண்ணுகிறோம். ராஜ்யத்தைப்பற்றி பிரசங்கிப்பதிலும் சீஷராக்குவதிலும் ஆர்வமாகப் பங்கெடுப்பதன்மூலம் கடவுள் நம்பகமானவர் என்பதைப் புரிந்துகொள்ள மற்றவர்களுக்கு உதவலாம்.
ரோமர் புத்தகத்திலிருந்து சிறப்பு குறிப்புகள்
3:24, 25—கிறிஸ்து இயேசு மீட்கும்பலியை அளிப்பதற்கு ‘முற்காலத்தில் நடந்த பாவங்களும்’ அந்த பலியின் அடிப்படையில் எப்படி மன்னிக்கப்பட்டன? ஆதியாகமம் 3:15-ல் பதிவு செய்யப்பட்டுள்ள முதல் மேசியானிய தீர்க்கதரிசனம் பொ.ச. 33-ல், இயேசு கழுமரத்தில் கொல்லப்பட்டபோது நிறைவேறியது. (கலா. 3:13, 16) யெகோவா அந்தத் தீர்க்கதரிசனத்தைச் சொன்னபோதே, அவருடைய பார்வையில் அந்த மீட்பின் விலை ஏற்கெனவே கொடுக்கப்பட்டதுபோல் இருந்தது. ஏனென்றால், கடவுள் செய்ய நினைத்ததை எதுவும் தடுத்து நிறுத்த முடியாது. ஆகவே, இந்த வாக்குறுதியில் நம்பிக்கை வைத்த ஆதாமின் சந்ததியார் அனைவரையும், வருங்காலத்தில் இயேசு கிறிஸ்து கொடுக்கவிருந்த பலியின் அடிப்படையில் யெகோவாவால் மன்னிக்க முடிந்தது. கிறிஸ்துவுக்கு முன்னான காலத்தைச் சேர்ந்தவர்கள்கூட உயிர்த்தெழுதலைப் பெறுவதற்கு இந்த மீட்கும் பலி வழிவகுக்கிறது.—அப். 24:15.
பிப்ரவரி 11-17
பைபிளில் இருக்கும் புதையல்கள் | ரோமர் 4-6
“கடவுள் நம்மீது அன்பைக் காட்டினார்”
கடவுள் நம்மீது அன்பை வெளிக்காட்டினார்
5 அதைக் குறித்து பவுல் இவ்வாறு சுருக்கமாகச் சொல்ல ஆரம்பித்தார்: “ஒரே மனிதனால் பாவமும் பாவத்தினால் மரணமும் இந்த உலகத்தில் வந்தது; இவ்வாறு, எல்லா மனிதர்களும் பாவம் செய்ததால் மரணம் எல்லா மனிதர்களுக்கும் பரவியது.” (ரோ. 5:12) இதை நாம் புரிந்துகொள்ள, மனித வாழ்வு ஆரம்பித்த விதத்தைப் பற்றிய பைபிள் பதிவு நமக்கு உதவுகிறது. யெகோவா முதன்முதலில் ஆதாமையும் ஏவாளையும் படைத்தார். படைப்பாளராகிய அவர் பரிபூரணர் என்பதால் நம்முடைய மூதாதையர்களான அந்த முதல் மனித ஜோடியும் பரிபூரணராக இருந்தார்கள். கடவுள் அவர்களுக்கு ஒரேவொரு கட்டளையைக் கொடுத்து, அதை மீறினால் மரண தண்டனை கிடைக்குமென்று குறிப்பிட்டார். (ஆதி. 2:17) என்றாலும், அவர்கள் கடவுளுடைய நியாயமான கட்டளையை மீறி, தங்களையே கெடுத்துக்கொண்டார்கள்; இவ்வாறு, சட்டத்தை இயற்றுபவரும் சர்வலோகப் பேரரசருமான அவரை நிராகரித்தார்கள்.—உபா. 32:4, 5.
கடவுள் நம்மீது அன்பை வெளிக்காட்டினார்
6 ஆதாம் பாவம் செய்த பிறகுதான் அவனுக்குப் பிள்ளைகள் பிறந்தன; ஆகவே, அவன் மூலம் அவர்கள் அனைவருமே பாவத்தையும் அதன் விளைவுகளையும் வழிவழியாகப் பெற்றார்கள். ஆனால், ஆதாமைப் போல் அவர்கள் கடவுளுடைய கட்டளையை மீறவில்லை; அதனால் அவன் சுமந்த அதே பாவத்தை அவர்கள் சுமக்கவில்லை; அதோடு, எந்தச் சட்டதிட்டமும் அவர்களுக்கு அதுவரை கொடுக்கப்படவில்லை. (ஆதி. 2:17) இருந்தாலும், ஆதாமுடைய வம்சத்தில் வந்த அனைவருமே பாவத்தை வழிவழியாகப் பெற்றார்கள். இவ்வாறு, கடவுள் இஸ்ரவேலருக்குத் திருச்சட்டத்தைக் கொடுத்த காலம்வரை பாவமும் மரணமும் ராஜாவாக ஆட்சி செய்ததெனச் சொல்லலாம்; அந்தத் திருச்சட்டம், அவர்கள் பாவிகள் என்பதைத் தெள்ளத்தெளிவாகக் காட்டியது. (ரோமர் 5:13, 14-ஐ வாசியுங்கள்.) வழிவழியாகக் கடத்தப்படும் பாவத்தின் விளைவை சில பரம்பரை நோய்களின் உதாரணத்தை வைத்து விளக்கலாம். ஒரு குடும்பத்தில் சில பிள்ளைகளுக்கு அப்படிப்பட்ட நோய் வந்தாலும் எல்லாப் பிள்ளைகளுக்கும் அது வராமலிருக்கலாம். பாவமோ அப்படியல்ல. ஆதாமிடமிருந்து கடத்தப்பட்ட பாவம் யாராலும் தவிர்க்க முடியாத ஒன்றாக ஆனது. ஆம், எல்லாருமே அதனால் பீடிக்கப்படுகிறார்கள். அதன் மரணப் பிடியிலிருந்து யாராலும் தப்பிக்க முடியாது. அது எந்தப் பிள்ளைகளையும் விட்டுவைப்பதில்லை. இந்த இக்கட்டான நிலையிலிருந்து விடுபட முடியுமா?
கடவுள் நம்மீது அன்பை வெளிக்காட்டினார்
9 ‘நீதிமான்களாக அங்கீகரிக்கப்படுதல்’ என்பதற்கான கிரேக்க வார்த்தைகளின் அர்த்தம் என்ன? பைபிள் மொழிபெயர்ப்பாளர் ஒருவர் இவ்வாறு விளக்கினார்: “அது ஒரு சட்டப்பூர்வ குறிப்பை எடுத்துக் காட்டும் ஒரு சட்டப்பூர்வ உருவகமாகும். அது, கடவுளுக்குமுன் ஒரு நபருடைய நிலைநிற்கை மாறுவதைக் குறிக்கிறது, அந்த நபரின் குணம் மாறுவதைக் குறிப்பதில்லை. . . . இந்த உருவகத்தில் கடவுள் ஒரு நீதிபதியாகச் செயல்படுகிறார்; ஏதோ அநியாயம் செய்ததாகக் குற்றம்சாட்டப்பட்டு அவருடைய நீதிமன்றத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ள நபருக்குச் சாதகமாகத் தீர்ப்பு வழங்குகிறார். அந்த நபரைக் குற்றமற்றவரென அறிவிக்கிறார்.”
10 நீதியுள்ள “சர்வலோக நியாயாதிபதி” எதன் அடிப்படையில் அநீதியுள்ளவர்களைக் குற்றமற்றவர்களென அறிவிக்கிறார்? (ஆதி. 18:25) இதற்கு முதற்படியாக, அவர் அன்போடு தமது ஒரே மகனை இந்தப் பூமிக்கு அனுப்பினார். இயேசு பல சோதனைகளையும் ஏளனங்களையும் பழிப்பேச்சுகளையும் எதிர்ப்பட்டபோதிலும் தமது தகப்பனின் சித்தத்தை அப்படியே செய்தார். கழுமரத்தில் சாகும்வரைகூட தமது உத்தமத்தைவிட்டு விலகாமல் இருந்தார். (எபி. 2:10) அவர் தமது பரிபூரண மனித உயிரைக் கொடுப்பதன் மூலம், ஆதாமின் சந்ததியாரைப் பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் விடுவிப்பதற்குரிய மீட்புவிலையைச் செலுத்தினார்.—மத். 20:28; ரோ. 5:6-8.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
ரோமர் புத்தகத்திலிருந்து சிறப்பு குறிப்புகள்
6:3-5—கிறிஸ்து இயேசுவுக்குள் ஞானஸ்நானம் பெறுவதும் அவருடைய மரணத்துக்குள் ஞானஸ்நானம் பெறுவதும் எதைக் குறிக்கின்றன? கிறிஸ்துவைப் பின்பற்றுகிறவர்களை தம்முடைய சக்தியால் யெகோவா அபிஷேகம் செய்யும்போது அதாவது தேர்ந்தெடுக்கும்போது அவர்கள் இயேசுவுடன் ஒன்றுசேருகிறார்கள். கிறிஸ்துவின் சரீரமாகிய சபையின் அங்கத்தினர் ஆகிறார்கள்; அந்த சபைக்கு கிறிஸ்துவே தலையாக இருக்கிறார். (1 கொ. 12:12, 13, 27; கொலோ. 1:18) கிறிஸ்து இயேசுவுக்குள் ஞானஸ்நானம் பெறுவது இதையே அர்த்தப்படுத்துகிறது. இவ்வாறு நியமிக்கப்பட்டவர்கள் தியாக வாழ்க்கை வாழ்கிறார்கள்; பூமியில் நித்திய ஜீவனைப் பெறும் நம்பிக்கையைத் துறந்துவிடுகிறார்கள். இதுவே அவர்கள் கிறிஸ்துவின் ‘மரணத்துக்குள்ளாக ஞானஸ்நானம் பெறுவதை’ அர்த்தப்படுத்துகிறது. எனவே, இவர்களுடைய மரணத்திற்கு மீட்கும் வல்லமை இல்லையென்றாலும் இயேசுவின் மரணத்தைப் போலவே தியாக மரணமாக இருக்கிறது. இவர்கள் மரித்து பரலோகத்திற்கு உயிர்த்தெழுப்பப்படும்போது கிறிஸ்துவின் மரணத்துக்குள் அவர்கள் பெற்ற ஞானஸ்நானம் முடிவடைகிறது.
w14-E 6/1 11 ¶1
என்னுடைய முன்னோர்களுக்கு என்ன நம்பிக்கை இருக்கிறது?
அநீதிமான்கள் உயிரோடு எழுப்பப்பட்ட பிறகு, அவர்கள் முன்பு செய்த தவறுகளுக்காகத் தண்டிக்கப்படுவார்களா? இல்லை. “இறந்தவன் தன்னுடைய பாவத்திலிருந்து முழுமையாக விடுதலை செய்யப்பட்டிருக்கிறான்” என்று ரோமர் 6:7 சொல்கிறது. அதனால், இறக்கும்போதே அநீதிமான்கள் தங்களுடைய பாவங்களுக்கான தண்டனையைப் பெற்றுவிடுகிறார்கள். அவர்கள் உயிரோடு எழுப்பப்பட்ட பிறகு எப்படி நடந்துகொள்வார்களோ அதன் அடிப்படையில்தான் நியாயந்தீர்க்கப்படுவார்கள்; இறப்பதற்கு முன்பு தெரியாத்தனமாகச் செய்த தவறுகளுக்காக அவர்கள் தண்டிக்கப்பட மாட்டார்கள். அதனால், அவர்கள் எப்படி நன்மை அடைவார்கள்?
பிப்ரவரி 18-24
பைபிளில் இருக்கும் புதையல்கள் | ரோமர் 7-8
“மிகவும் ஆவலோடு காத்திருக்கிறீர்களா?”
யெகோவா தரும் விடுதலையே உண்மையான விடுதலை
17 பூமியிலிருக்கும் ஊழியர்களுக்கு யெகோவா அளிக்கப்போகும் சுதந்திரத்தைப் பற்றி பவுல் குறிப்பிட்டபோது, “கடவுளுடைய மகன்களின் மகிமை வெளிப்படுவதற்காகப் படைப்பு பேராவலோடு காத்திருக்கிறது” என்று சொன்னார். ‘படைப்பு அழிவுக்குரிய அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கப்பட்டு கடவுளுடைய பிள்ளைகளுக்குரிய மகிமையான விடுதலையைப் பெறும்’ என்றும் பவுல் சொன்னார். (ரோ. 8:19-21) “படைப்பு” என்பது பூமியில் என்றென்றும் வாழும் நம்பிக்கையுள்ளவர்களைக் குறிக்கிறது. இவர்கள், பரலோக நம்பிக்கையுள்ள கடவுளுடைய மகன்களின் மகிமை ‘வெளிப்படும்போது’ பயனடைவார்கள். அந்த மகிமையான வெளிப்படுதல், கடவுளுடைய ‘மகன்கள்’ பரலோகத்திற்கு உயிர்த்தெழுப்பப்பட்டு... கிறிஸ்துவுடன் சேர்ந்து பூமியிலுள்ள பொல்லாதவர்களை ஒழித்துக்கட்டி... புதிய உலகில் ‘திரள் கூட்டமான மக்களை’ குடியேற்றும் சமயத்தில்... ஆரம்பமாகும்.—வெளி. 7:9, 14.
நம்பிக்கையில் சந்தோஷப்படுங்கள்
11 வாக்குப்பண்ணப்பட்ட “வித்து” மூலம் “பழைய பாம்பாகிய” பிசாசான சாத்தானிடமிருந்து மனிதகுலத்தை விடுதலை செய்யப்போவதாக யெகோவா வாக்குறுதி அளித்தபோது அந்த ‘எதிர்பார்ப்பை’ கொடுத்தார். (ஆதி. 3:15; வெளி. 12:9) அந்த ‘வித்துவின்,’ அதாவது ‘சந்ததியின்,’ முக்கிய பாகம் இயேசு கிறிஸ்து. (கலா. 3:16) பாவத்திலிருந்தும் மரணத்திலிருந்தும் மனிதர்கள் விடுதலை பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பை அவரது மரணமும் உயிர்த்தெழுதலும் அளித்தன. அந்த எதிர்பார்ப்பு, ‘கடவுளுடைய மகன்களின் மகிமை வெளிப்படுவதுடன்’ சம்பந்தப்பட்டுள்ளது. இந்த மகன்களே ‘சந்ததியின்’ இரண்டாம் பாகம். சாத்தானுடைய பொல்லாத உலகத்தை அழிக்க கிறிஸ்துவுக்கு உதவி செய்யும்போது இவர்கள் ‘வெளிப்படுவார்கள்.’ (வெளி. 2:26, 27) அதன்பின், மிகுந்த உபத்திரவத்திலிருந்து தப்பிப்பிழைக்கிற வேறே ஆடுகளுக்கு மீட்புக் கிடைக்கும்.—வெளி. 7:9, 10, 14.
நம்பிக்கையில் சந்தோஷப்படுங்கள்
12 கிறிஸ்துவின் ஆயிரவருட ஆட்சியில் மனித ‘படைப்புக்கு’ கிடைக்கப்போவது எப்பேர்ப்பட்ட விடுதலை! அந்தச் சமயத்தில், மகிமைப்படுத்தப்பட்ட ‘கடவுளுடைய மகன்கள்’ மற்றொரு விதத்தில் ‘வெளிப்படுவார்கள்’; கிறிஸ்துவுடன் சேர்ந்து குருமார்களாகச் செயல்பட்டு, அவரது மீட்புப் பலியின் நன்மைகளைப் பெற மனிதர்களுக்கு உதவி செய்வார்கள். அப்போது, பரலோக அரசாங்கத்தின் பூமிக்குரிய குடிமக்கள் பாவம் மற்றும் மரணத்தின் பாதிப்புகளிலிருந்து விடுதலையை ருசிக்க ஆரம்பிப்பார்கள். கீழ்ப்படிகிற மனிதர்கள் படிப்படியாக ‘அழிவுக்குரிய அடிமைத்தனத்திலிருந்து விடுவிக்கப்படுவார்கள்.’ ஆயிரவருட ஆட்சியிலும் அதன் முடிவில் வரும் இறுதிப் பரிட்சையிலும் உண்மையுடன் நிலைத்திருந்தால், அவர்களது பெயர் ‘வாழ்வின் சுருளில்’ நிரந்தரமாய் இருக்கும். அவர்கள் ‘கடவுளுடைய பிள்ளைகளுக்குரிய மகிமையான விடுதலையைப் பெறுவார்கள்.’ (வெளி. 20:7, 8, 11, 12) இது நிச்சயமாகவே மகிமையான எதிர்பார்ப்பு!
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
உங்களுக்கு நினைவிருக்கிறதா?
‘பாவ காரியங்களைப் பற்றி யோசிப்பதற்கும்,’ ‘கடவுளுடைய சக்திக்குரிய காரியங்களைப் பற்றி யோசிப்பதற்கும்’ என்ன வித்தியாசம்? (ரோ. 8:6)
‘பாவ காரியங்களைப் பற்றி யோசிப்பவர்கள்’ தங்கள் சுயநல ஆசைகளுக்குத்தான் முக்கியத்துவம் கொடுப்பார்கள், தங்களுக்கு ரொம்ப பிடித்த விஷயத்தைப் பற்றித்தான் எப்போதும் பேசுவார்கள். இவர்களுக்குக் கிடைப்பதோ மரணம். ‘கடவுளுடைய சக்திக்குரிய காரியங்களைப் பற்றி யோசிப்பவர்கள்’ யெகோவாவுடைய சக்தி தங்களை வழிநடத்த அனுமதிப்பார்கள். கடவுள் யோசிப்பது போல யோசிக்க கற்றுக்கொள்வார்கள். இவர்களுக்குக் கிடைப்பதோ வாழ்வும் சமாதானமும் ஆகும்.—w16.12, பக்கங்கள் 15-17.
w09 11/15 7 ¶20
உங்கள் ஜெபங்கள் உங்களைப் பற்றி என்ன சொல்கின்றன?
20 நம்முடைய தனிப்பட்ட ஜெபங்களில் என்ன சொல்வதென்றே சில சமயம் நமக்குத் தெரியாதிருக்கலாம். பவுல் இவ்வாறு எழுதினார்: ‘ஜெபம் செய்ய வேண்டிய சூழ்நிலையில் என்ன ஜெபிப்பதென்று நமக்குத் தெரியாதபோது, வார்த்தைகளில் சொல்லப்படாத நம் உள்ளக் குமுறல்களைக் குறித்து கடவுளுடைய சக்தி நமக்காகப் பரிந்து பேசுகிறது. இருதயங்களை ஆராய்ந்து பார்க்கிற கடவுள், அந்தச் சக்தியின் நோக்கம் என்னவென்று அறிந்திருக்கிறார்.’ (ரோ. 8:26, 27) பைபிளில் ஏராளமான ஜெபங்களைத் தமது சக்தியின் தூண்டுதலால் பதிவுசெய்யப்படும்படி யெகோவா பார்த்துக்கொண்டார். அதிலுள்ள விண்ணப்பங்களை நம்முடைய விண்ணப்பங்களாகவே கருதி, அவற்றுக்குப் பதிலளிக்கிறார். நம்மைப் பற்றி அவருக்கு நன்கு தெரியும், பைபிள் எழுத்தாளர்கள் பதிவுசெய்த ஜெபங்கள் எந்த நோக்கத்தோடு ஏறெடுக்கப்பட்டன என்றும் அவருக்குத் தெரியும். அவருடைய சக்தி நமக்காக ‘பரிந்து பேசும்போது’ நாம் ஏறெடுக்கும் மன்றாட்டுகளுக்கு அவர் பதிலளிக்கிறார். கடவுளுடைய வார்த்தையை நாம் அதிகமதிகமாய்த் தெரிந்துகொள்ளும்போது என்னென்ன விஷயங்களைக் குறித்து ஜெபம் செய்ய வேண்டுமென்பது சட்டென நம் மனதிற்கு வந்துவிடும்.
பிப்ரவரி 25–மார்ச் 3
பைபிளில் இருக்கும் புதையல்கள் | ரோமர் 9-11
“ஒலிவ மரத்தைப் பற்றிய உதாரணம்”
‘ஆ! கடவுளுடைய ஞானம் எவ்வளவு ஆழமானது!’
13 அப்போஸ்தலன் பவுல், ஆபிரகாமுடைய சந்ததியாக ஆகவிருந்தவர்களை ஓர் அடையாளப்பூர்வ ஒலிவ மரத்தின் கிளைகளுக்கு ஒப்பிட்டார். (ரோ. 11:21) இந்தத் தோட்டத்து ஒலிவ மரம், ஆபிரகாமிய ஒப்பந்தம் சம்பந்தப்பட்ட கடவுளுடைய நோக்கத்தின் நிறைவேற்றத்தைக் குறிக்கிறது. இந்த மரத்தின் வேர் அர்ப்பணிக்கப்பட்டதாக, அதாவது பரிசுத்தமானதாக, இருக்கிறது; அது, அடையாளப்பூர்வ இஸ்ரவேலரை உருவாக்குபவரான யெகோவாவைப் பிரதிநிதித்துவம் செய்கிறது. (ஏசா. 10:20; ரோ. 11:16) இதன் அடிமரம், ஆபிரகாமுடைய சந்ததியின் முதல் பாகமான இயேசுவைக் குறிக்கிறது. இதன் கிளைகள், ஆபிரகாமுடைய சந்ததியின் இரண்டாம் பாகமான 1,44,000 பேரைக் குறிக்கின்றன.
‘ஆ! கடவுளுடைய ஞானம் எவ்வளவு ஆழமானது!’
15 அப்படியென்றால், யெகோவா தம் நோக்கத்தை நிறைவேற்ற என்ன செய்தார்? தோட்டத்து ஒலிவ மரத்திலிருந்து வெட்டப்பட்ட கிளைகளுக்குப் பதிலாகக் காட்டு ஒலிவ மரத்தின் கிளைகள் ஒட்ட வைக்கப்பட்டதாக பவுல் விளக்குகிறார். (ரோமர் 11:17, 18-ஐ வாசியுங்கள்.) ஆகவே, பரலோக நம்பிக்கைகொண்ட புறதேசக் கிறிஸ்தவர்கள் இந்த ஒலிவ மரத்தில் அடையாளப்பூர்வமாக ஒட்ட வைக்கப்பட்டார்கள்; உதாரணத்திற்கு, ரோமாபுரிச் சபையிலிருந்த சிலர் அப்படி ஒட்ட வைக்கப்பட்டார்கள். இவ்வாறு, அவர்கள் ஆபிரகாமுடைய சந்ததியின் பாகமாக ஆனார்கள். ஆரம்பத்தில் அவர்கள் காட்டு ஒலிவ மரத்தின் கிளைகளைப் போல் இருந்தார்கள்; அதாவது, இந்த விசேஷ ஒப்பந்தத்தின் பாகமாக ஆகும் வாய்ப்பே இல்லாதிருந்தார்கள். ஆனால் அடையாளப்பூர்வ யூதர்களாக ஆகும் வாய்ப்பை யெகோவா அவர்களுக்குத் தந்தார்.—ரோ. 2:28, 29.
‘ஆ! கடவுளுடைய ஞானம் எவ்வளவு ஆழமானது!’
19 ஆம், “கடவுளுடைய இஸ்ரவேலர்” சம்பந்தப்பட்ட யெகோவாவின் நோக்கம் அருமையான விதத்தில் நிறைவேறி வருகிறது. (கலா. 6:16) பவுல் சொன்னபடி, “இஸ்ரவேலர் எல்லாரும் மீட்புப் பெறுவார்கள்.” (ரோ. 11:26) யெகோவாவுடைய குறித்த காலத்தில், “இஸ்ரவேலர் எல்லாரும்,” அதாவது அடையாளப்பூர்வ இஸ்ரவேலரின் மொத்த எண்ணிக்கையினரும், பரலோகத்தில் ராஜாக்களாகவும் குருமார்களாகவும் சேவிப்பார்கள். யெகோவாவின் நோக்கம் நிறைவேறுவதைத் தடுக்க யாராலும் முடியாது!
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
யெகோவா தரும் சிட்சை உங்களை வடிவமைக்கட்டும்
5 மாபெரும் குயவர் தங்களை வடிவமைக்க வேண்டாம் என்று மக்கள் பிடிவாதமாக மறுக்கும்போது, யெகோவா தம் அதிகாரத்தை எப்படிப் பயன்படுத்துவார்? ஒரு பாத்திரத்தைச் செய்ய முயற்சிக்கும்போது களிமண் வளைந்துகொடுக்கவில்லை என்றால் குயவர் என்ன செய்வார் என்று யோசித்துப் பாருங்கள். அதில் வேறொரு பாத்திரத்தைச் செய்வார் அல்லது அந்தக் களிமண்ணை தூக்கி எறிந்துவிடுவார்! பெரும்பாலும் இதற்குக் காரணம் குயவன் அந்தக் களிமண்ணை சரியான விதத்தில் வடிவமைக்காததுதான். ஆனால், மாபெரும் குயவர் விஷயத்தில் இது உண்மை அல்ல. (உபா. 32:4) யெகோவா வடிவமைக்கும்போது ஒருவர் வளைந்துகொடுக்கவில்லை என்றால் அதற்கு அந்த நபர்தான் முழு காரணம். மனிதர்கள் வளைந்துகொடுக்கும் விதத்தை வைத்து யெகோவா வடிவமைக்கும் விதத்தில் சில மாற்றங்களைச் செய்கிறார். அதற்கு ஒத்துப்போகிறவர்களை அழகாக வடிவமைக்கிறார். உதாரணத்திற்கு, ‘இரக்கத்திற்குரிய பாத்திரங்களாக’ இருக்கிற பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்களை ‘கண்ணியமான காரியத்திற்கான பாத்திரங்களாக’ வடிவமைத்திருக்கிறார். ஆனால், கடவுளை விடாப்பிடியாக எதிர்க்கும் ஆட்கள் ‘கடுங்கோபத்திற்கும் அழிவுக்குமுரிய பாத்திரங்களாக’ ஆகிவிடுகிறார்கள்.—ரோ. 9:19-23.
it-1-E 1260 ¶2
பொறாமை
தவறான பக்திவைராக்கியம். ஒருவர் உண்மை மனதோடு ஏதோவொரு விஷயத்தில் பக்திவைராக்கியத்தைக் காட்டலாம். ஆனாலும், அது தவறான பக்திவைராக்கியமாக இருக்கலாம், கடவுளுக்குப் பிடிக்காமலும் இருக்கலாம். முதல் நூற்றாண்டில் இருந்த நிறைய யூதர்கள் அப்படிப்பட்ட பக்திவைராக்கியத்தைத்தான் காட்டினார்கள். திருச்சட்டத்தின்படி நடந்துகொள்வதால் தாங்கள் நீதிமான்களாக ஆவார்கள் என்று நினைத்தார்கள். ஆனால், திருத்தமான அறிவு இல்லாததால் அவர்கள் தவறான விதத்தில் பக்திவைராக்கியத்தைக் காட்டியதாக பவுல் சொன்னார். அவர்கள் கடவுளுடைய பார்வையில் நீதிமான்களாக ஆகவில்லை. அவர்கள் திருச்சட்டத்தின் தண்டனைத் தீர்ப்பிலிருந்து விடுபட்டு நீதிமான்களாக ஆவதற்கு, தங்களுடைய தவறை உணர்ந்து, கிறிஸ்துவின் மூலம் கடவுளிடம் திரும்பிவர வேண்டியிருந்தது. (ரோ 10:1-10) தர்சு நகரத்தைச் சேர்ந்த சவுல் அப்படிப்பட்டவர்களில் ஒருவராக இருந்தார். அவர் யூத மதத்தில் அளவுக்கு மீறிய பக்திவைராக்கியத்தைக் காட்டியதால், “கடவுளுடைய சபையைப் பயங்கரமாகத் துன்புறுத்திக்கொண்டும் பாழாக்கிக்கொண்டும்” இருந்தார். திருச்சட்டத்தை மிக நுணுக்கமாகக் கடைப்பிடிப்பதில் ‘குற்றமற்றவராக இருந்தார்.’ (கலா 1:13, 14; பிலி 3:6) ஆனாலும், யூத மதத்தில் அவர் காட்டிய பக்திவைராக்கியம் தவறானதாக இருந்தது. அதேசமயத்தில், அவர் உண்மை மனதோடு பக்திவைராக்கியத்தைக் காட்டினார். அதனால், கிறிஸ்துவின் மூலம் யெகோவா அவருக்கு அளவற்ற கருணையைக் காட்டி, அவரை உண்மை வணக்கத்திடம் வழிநடத்தினார்.—1தீ 1:12, 13.