வாழ்க்கையும் ஊழியமும் கூட்டத்துக்குத் தயாரிக்க தேவையான தகவல்கள்
ஏப்ரல் 1-7
பைபிளில் இருக்கும் புதையல்கள் | 1 கொரிந்தியர் 7-9
“திருமணம் செய்துகொள்ளாமல் இருப்பது—ஒரு வரம்”
மணமாகாதவர்களே—காலத்தை நன்கு பயன்படுத்திக்கொள்ளுங்கள்
3 மணமானவரைவிட மணமாகாதவருக்கு அதிக நேரம் கிடைக்கிறது, அதிக சுதந்திரமும் இருக்கிறது. (1 கொ. 7:32-35) ஊழியத்தில் அதிகமாக ஈடுபட... இதயக் கதவை அகலத் திறந்து மற்றவர்களிடம் அன்பு காட்ட... யெகோவாவிடம் அதிகமாக நெருங்கி வர... இது ஒரு நல்ல வாய்ப்பு. அதனால், அநேக கிறிஸ்தவர்கள் மணமாகாதிருப்பதால் வரும் நன்மைகளைப் புரிந்துகொள்ள ஆரம்பித்திருக்கிறார்கள்; அதோடு, கொஞ்ச காலத்திற்காவது “அப்படி இருக்க” தீர்மானித்திருக்கிறார்கள். இன்னும் சிலர், ஆரம்பத்தில் மணம் செய்யத் தீர்மானித்திருக்கலாம்; ஆனால் சூழ்நிலை மாறியதால், நன்கு ஜெபம் செய்து அதைப் பற்றி யோசித்துப் பார்த்திருக்கிறார்கள். யெகோவாவின் உதவியுடன் அந்தச் சூழ்நிலையை ஏற்றுக்கொண்டு காலம் முழுக்க மணம் செய்துகொள்ளாமலே இருக்க முடியும் என்பதைப் புரிந்திருக்கிறார்கள்.—1 கொ. 7:37, 38.
கொரிந்தியருக்கு எழுதிய நிருபங்களிலிருந்து சிறப்பு குறிப்புகள்
7:33, 34—ஒரு கணவனோ மனைவியோ கவலைப்படுகிற “உலகத்திற்குரிய” காரியங்கள் எதைக் குறிக்கின்றன? உணவு, உடை, உறைவிடம் போன்ற அன்றாட வாழ்க்கைக்குரிய காரியங்களையே பவுல் இங்கு குறிப்பிடுகிறார். இந்த உலகில் கிறிஸ்தவர்கள் தவிர்க்க வேண்டிய தீய காரியங்களை அவை குறிப்பதில்லை.—1 யோ. 2:15-17.
w96 10/15 12-13 ¶14
மணமாகாதிருத்தல்—கவனம் சிதறாமல் செயல்படுவதற்கு வழி
14 தன்னல இலக்குகளை நாடித் தொடரும்படி தன் மணமாகாத நிலையைப் பயன்படுத்துகிற ஒரு கிறிஸ்தவன், மணம்செய்த கிறிஸ்தவர்களைப் பார்க்கிலும் ‘மேலுமதிக நலமானதைச்’ செய்கிறதில்லை. அவன் மணம் செய்யாதிருப்பது “பரலோகராஜ்யத்தினிமித்தம்” அல்ல, தன் சொந்த காரணங்களினிமித்தமேயாகும். (மத்தேயு 19:12) மணமாகாத ஆண் அல்லது பெண் “கர்த்தருக்கு எப்படிப் பிரியமாயிருக்கலாமென்று, கர்த்தருக்குரியவைகளுக்காகக் கவலைப்படு”கிறவனாக[ளாக], ‘[“கவனச்சிதறலில்லாமல்,’’ NW] கர்த்தரைப் பற்றிக்கொண்டிருக்கவேண்டும்.’ யெகோவாவையும் கிறிஸ்து இயேசுவையும் சேவிப்பதில் சிதறாத முழு கவனத்தையும் ஈடுபடுத்துவதை இது குறிக்கிறது. அவ்வாறு செய்வதன்மூலமே, மணமாகாத கிறிஸ்தவ ஆண்களும் பெண்களும், மணமாகிய கிறிஸ்தவர்களைப் பார்க்கிலும் ‘மேலுமதிக நலமானதைச்’ செய்கிறார்கள்.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
lvs 250-251
பின்குறிப்புகள்
சில சமயங்களில், கிறிஸ்தவர்கள் சிலர் பாலியல் முறைகேடு சம்பந்தப்படாத சில காரணங்களுக்காகப் பிரிந்து வாழத் தீர்மானித்திருக்கிறார்கள். (1 கொரிந்தியர் 7:11) பின்வரும் சூழ்நிலைகளில் ஒரு கிறிஸ்தவர் பிரிந்து வாழத் தீர்மானிக்கலாம்.
• கணவர் வேண்டுமென்றே குடும்பத்தைக் கவனிக்காமல் போகும்போது: குடும்பத்தார் சாப்பாட்டுக்கு அல்லது பணத்துக்கு திண்டாடும் அளவுக்கு ஒரு கணவர் குடும்பத்தின் தேவைகளைக் கவனிக்காமல் போகும்போது, அந்த மனைவி பிரிந்து வாழத் தீர்மானிக்கலாம்.—1 தீமோத்தேயு 5:8.
• பயங்கரமாகக் கொடுமைப்படுத்தப்படும்போது: உயிருக்கோ ஆரோக்கியத்துக்கோ ஆபத்து வருமளவுக்கு ஒருவருடைய கணவனோ மனைவியோ அவரைக் கொடுமைப்படுத்தினால் அவர் பிரிந்து வாழத் தீர்மானிக்கலாம்.—கலாத்தியர் 5:19-21.
• யெகோவாவை முற்றிலுமாக வணங்க முடியாத சூழ்நிலை ஏற்படும்போது: யெகோவாவைச் சேவிக்கவே முடியாதளவுக்கு ஒருவருடைய கணவனோ மனைவியோ தடை போடும்போது அவர் பிரிந்து வாழத் தீர்மானிக்கலாம்.—அப்போஸ்தலர் 5:29.
ஒழுக்கங்கெட்ட உலகில் கற்பு
திருமணம் என்பது ஆயிரங்காலத்துப் பயிர். திருமணம் செய்துகொள்ள விரும்புபவர்கள் பொறுப்பை ஏற்றுக்கொள்ள தயாராக இருக்க வேண்டும். அவ்வாறு ஏற்றுக்கொண்ட அந்தப் பொறுப்பை சரிவர நிறைவேற்றுவதே முதிர்ச்சி. (ஆதியாகமம் 2:24) எனவே, பாலுறவு ஆசைகள் தங்களுக்குள் முளைவிட ஆரம்பித்த உடனே திருமணம் செய்துகொள்ள இளைஞர் அவசரப்படக்கூடாது. சரியான தீர்மானங்களை எடுக்க முடியாதபடி, பாலுறவு உணர்ச்சிகள் மேலோங்கி நிற்கும் “இளமை மலர்ச்சி கடக்கும்வரை” காத்திருப்பது நல்லது. (1 கொரிந்தியர் 7:36, NW) ஏற்ற துணை கிடைக்கவில்லை என ஒழுக்கங்கெட்ட நடத்தையில் ஈடுபடுவது முட்டாள்தனமானது, மகா பாவம்!
ஏப்ரல் 8-14
பைபிளில் இருக்கும் புதையல்கள் | 1 கொரிந்தியர் 10-13
“யெகோவா நம்பகமானவர்”
வாசகர் கேட்கும் கேள்விகள்
“உங்களால் தாங்கிக்கொள்ள முடியாதளவுக்கு எந்தச் சோதனையையும் [யெகோவா] அனுமதிக்க மாட்டார்” என்று அப்போஸ்தலன் பவுல் எழுதினார். (1 கொ. 10:13) அப்படியென்றால், நம்மால் எதைச் சகித்துக்கொள்ள முடியுமென்று யெகோவா முன்கூட்டியே தீர்மானிக்கிறார் என்றும், அதை வைத்து, நாம் எப்படிப்பட்ட சோதனைகளை எதிர்ப்பட வேண்டுமென்று அவர் முடிவு செய்கிறார் என்றும் அர்த்தமா?
▪ இது உண்மையென்றால், நம்முடைய வாழ்க்கை எப்படிப் பாதிக்கப்படும் என்று கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். உதாரணத்துக்கு, ஒரு சகோதரருடைய மகன் தற்கொலை செய்துகொள்கிறார். அவருடைய அப்பா இப்படிக் கேட்கிறார்: ‘இந்த துயரத்தை என்னாலயும் என்னோட மனைவியாலயும் சகிக்க முடியும்னு யெகோவா முன்கூட்டியே முடிவு செஞ்சுட்டாரா? அப்படி முடிவு செஞ்சதுனாலதான் இது நடந்துச்சா?’ இந்த உலகத்தில், நம்மில் நிறைய பேர் துன்பதுயரங்களை அனுபவிக்கிறோம். அதற்காக, நம்முடைய வாழ்க்கையில் நடக்கும் எல்லா விஷயங்களையும் யெகோவாதான் கட்டுப்படுத்துகிறார் என்ற முடிவுக்கு வந்துவிடலாமா?
நம்மால் எதைச் சகித்துக்கொள்ள முடியும் என்பதை யெகோவா முன்கூட்டியே தீர்மானிக்கிறார் என்றும், அதை வைத்து, நாம் எப்படிப்பட்ட சோதனைகளை எதிர்ப்பட வேண்டுமென்று முடிவு செய்கிறார் என்றும் நம்புவதற்கு பைபிளில் எந்தக் காரணமும் இல்லை. 1 கொரிந்தியர் 10:13-ல் இருக்கிற பவுலின் வார்த்தைகளைக் கவனமாக ஆராய்ந்தால், நம்மால் இந்த முடிவுக்கு வர முடியும்! எதை வைத்து இந்த முடிவுக்கு வரலாம்? அதற்கான 4 காரணங்களைப் பற்றி இப்போது பார்க்கலாம்.
முதலாவதாக, சொந்தமாகத் தீர்மானம் எடுக்கும் உரிமை என்ற பரிசை யெகோவா எல்லா மனிதர்களுக்கும் கொடுத்திருக்கிறார். நாமாகவே சொந்தமாகத் தீர்மானங்கள் எடுக்க வேண்டும் என்று அவர் விரும்புகிறார். (உபா. 30:19, 20; யோசு. 24:15) யெகோவாவைப் பிரியப்படுத்தும் விதத்தில் தீர்மானங்கள் எடுக்க வேண்டும் என்று நாம் முடிவு செய்தால், யெகோவா நம்மை வழிநடத்துவார் என்று எதிர்பார்க்கலாம். (நீதி. 16:9) ஆனால், தவறான தீர்மானங்கள் எடுத்தால், அதனுடைய விளைவுகளை நாம் அனுபவித்தே ஆக வேண்டும். (கலா. 6:7) அப்படியென்றால், நமக்கு என்ன சோதனைகள் வர வேண்டுமென்று யெகோவா முன்கூட்டியே தீர்மானித்துவிட்டால், சொந்தமாகத் தீர்மானம் எடுக்கும் உரிமை நமக்கு இருக்கிறது என்று சொல்ல முடியுமா?
இரண்டாவதாக, ‘எதிர்பாராத சம்பவங்களிலிருந்து’ யெகோவா நம்மைப் பாதுகாப்பது கிடையாது. (பிர. 9:11) நாம் தவறான இடத்தில், தவறான நேரத்தில் இருப்பதால் ஏதாவது சோக சம்பவம் நடந்துவிடலாம். ஒரு கோபுரம் இடிந்து விழுந்து, 18 பேர் செத்துப்போன துயர சம்பவத்தைப் பற்றி இயேசு சொன்னார். அவர்களுடைய மரணத்துக்குக் கடவுள் காரணம் இல்லை என்பதை அவர் தெளிவாக எடுத்துக்காட்டினார். (லூக். 13:1-5) ஒரு விபத்து ஏற்படுவதற்கு முன்பே, அதில் யாரெல்லாம் தப்பிப்பார்கள், யாரெல்லாம் இறந்துபோவார்கள் என்று கடவுள் தீர்மானித்துவிடுகிறார் என்று சொல்வது நியாயமாக இருக்குமா?
மூன்றாவதாக, நாம் ஒவ்வொருவரும் யெகோவாவுக்கு உத்தமமாக இருக்க வேண்டும். யெகோவா தன்னுடைய ஊழியர்களுக்குத் தேவையான எல்லாவற்றையும் கொடுப்பதால்தான் அவர்கள் அவருக்குச் சேவை செய்கிறார்கள் என்று சாத்தான் சொன்னான். சோதனைகள் வந்தால் அவர்கள் தொடர்ந்து யெகோவாவுக்கு உண்மையாக இருக்க மாட்டார்கள் என்றும் அவன் சொன்னான். (யோபு 1:9-11; 2:4; வெளி. 12:10) அதனால், சில சோதனைகளிலிருந்து யெகோவா நம்மைப் பாதுகாத்தால், சாத்தான் சொன்னது உண்மையென்று ஆகிவிடும்.
நான்காவதாக, நமக்கு நடக்கும் எல்லாவற்றையும் யெகோவா முன்கூட்டியே தெரிந்துகொள்வதில்லை. அவர் விரும்பினால், எதிர்காலத்தில் என்ன நடக்கப்போகிறது என்பதைப் பற்றி அவரால் நிச்சயம் தெரிந்துகொள்ள முடியும். (ஏசா. 46:10) ஆனால், முன்கூட்டியே எல்லாவற்றையும் தெரிந்துகொள்ள வேண்டும் என்று அவர் தீர்மானிப்பதில்லை. (ஆதி. 18:20, 21; 22:12) யெகோவா அன்பானவராகவும் நீதியானவராகவும் இருப்பதால், நமக்கிருக்கும் சுதந்திரத்தை, அதாவது சொந்தமாகத் தீர்மானம் எடுக்கும் உரிமையை, அவர் உயர்வாக மதிக்கிறார்.—உபா. 32:4; 2 கொ. 3:17.
அப்படியென்றால், “உங்களால் தாங்கிக்கொள்ள முடியாதளவுக்கு எந்தச் சோதனையையும் [யெகோவா] அனுமதிக்க மாட்டார்” என்று பவுல் சொன்னதன் அர்த்தம் என்ன? சோதனைகளுக்கு முன்பு அல்ல, சோதனைகளை அனுபவிக்கும்போது யெகோவா என்ன செய்கிறார் என்பதைத்தான் பவுல் இங்கே விளக்கிக்கொண்டிருக்கிறார். யெகோவாவை நம்பியிருந்தால், நாம் எப்படிப்பட்ட சோதனைகளை அனுபவித்துக்கொண்டிருந்தாலும் அவர் நம்மைத் தாங்குவார். (சங். 55:22) பவுல் இப்படிச் சொன்னதற்கான 2 காரணங்களை இப்போது பார்க்கலாம்.
முதலாவதாக, நாம் அனுபவிக்கிற சோதனைகள், “மனிதர்களுக்குப் பொதுவாக வருகிற” சோதனைகள்தான்! சாத்தானுடைய உலகத்தில் இருக்கும்வரை, நம் எல்லாருக்கும் கஷ்டமான சூழ்நிலைகள் வரும், ஏன் பேரிடியும்கூட நம்மைத் தாக்கும்! ஆனால், யெகோவாவை நம்பியிருக்கும்போது, அவற்றை நம்மால் சமாளிக்க முடியும். அதோடு, யெகோவாவுக்கு உண்மையாக இருக்கவும் முடியும். (1 பே. 5:8, 9) ஒன்று கொரிந்தியர் 10-ஆம் அதிகாரத்தின் ஆரம்பத்தில், இஸ்ரவேலர்கள் வனாந்தரத்தில் அனுபவித்த சில சோதனைகளைப் பற்றி பவுல் எழுதினார். (1 கொ. 10:6-11) யெகோவாவை நம்பியிருந்தவர்கள் அந்தச் சோதனைகளைச் சகித்தார்கள். ஆனால், சில இஸ்ரவேலர்கள் யெகோவாவுக்குக் கீழ்ப்படியவில்லை. அவர்கள் யெகோவாவை நம்பாததால் அவருக்கு உண்மையாக இல்லாமல் போய்விட்டார்கள்.
இரண்டாவதாக, “கடவுள் நம்பகமானவர்.” யெகோவா தன்னுடைய ஊழியர்களை எப்படியெல்லாம் பார்த்துக்கொண்டார் என்பதைக் கவனிக்கும்போது, “தன்னை நேசித்து தன்னுடைய கட்டளைகளைக் கடைப்பிடிப்பவர்களிடம்” அவர் மாறாத அன்பு காட்டுகிறார் என்பதை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. (உபா. 7:9) தன்னுடைய வாக்குறுதிகளை யெகோவா எப்போதுமே காப்பாற்றுகிறார் என்பது நமக்குத் தெரியும். (யோசு. 23:14) அதனால், 2 விஷயங்களை நாம் உறுதியாக நம்பலாம். (1) நம்மால் சகித்துக்கொள்ள முடியாத அளவுக்கு யெகோவா எந்த சோதனையையும் அனுமதிக்க மாட்டார். (2) சோதனையிலிருந்து “விடுபடுவதற்கு” அவர் வழிசெய்வார்.
தன்னை நம்பியிருப்பவர்களை சோதனையிலிருந்து விடுவிக்க யெகோவா என்ன செய்கிறார்? நாம் அனுபவித்துக்கொண்டிருக்கும் சோதனையை அவரால் நீக்கிவிட முடியும் என்பது உண்மைதான். ஆனால், “அதைச் சகித்துக்கொள்வதற்கும் அதிலிருந்து விடுபடுவதற்கும் [யெகோவா] வழிசெய்வார்” என்று பவுல் சொன்னார். இதிலிருந்து நாம் என்ன தெரிந்துகொள்ளலாம்? பெரும்பாலான சமயங்களில், நாம் தொடர்ந்து உண்மையோடு இருப்பதற்காக நம்மைப் பலப்படுத்துவதன் மூலம் யெகோவா நம்மை விடுவிக்கிறார். அவர் நம்மை விடுவிப்பதற்கான சில வழிகளைப் பற்றி இப்போது பார்க்கலாம்:
▪ “நமக்கு வருகிற எல்லா சோதனைகளிலும் [யெகோவா] நமக்கு ஆறுதல் தருகிறார்.” (2 கொ. 1:3, 4) தன்னுடைய சக்தி மற்றும் உண்மையுள்ள அடிமையின் மூலம், நம்முடைய மனதையும் இதயத்தையும் உணர்ச்சிகளையும் அவரால் கட்டுப்படுத்த முடியும்; நம்மை ஆறுதல்படுத்தவும் முடியும்.—மத். 24:45; யோவா. 14:16, அடிக்குறிப்பு; ரோ. 15:4.
▪ தன்னுடைய சக்தியின் மூலம் யெகோவாவால் நம்மை வழிநடத்த முடியும். (யோவா. 14:26) பைபிள் பதிவுகளையும் நியமங்களையும் ஞாபகத்துக்குக் கொண்டுவரவும், அதன் மூலம் ஞானமான தீர்மானங்கள் எடுக்கவும் கடவுளுடைய சக்தி நமக்கு உதவும்.
▪ நமக்கு உதவி செய்வதற்காக யெகோவாவால் தூதர்களைப் பயன்படுத்த முடியும்.—எபி. 1:14.
▪ நம்முடைய சகோதர சகோதரிகளைப் பயன்படுத்தி யெகோவாவால் நமக்கு உதவி செய்ய முடியும். அவர்களுடைய சொல்லும் செயலும் நம்மைப் பலப்படுத்தும்.—கொலோ. 4:11.
1 கொரிந்தியர் 10:13-லுள்ள பவுலின் வார்த்தைகளிலிருந்து நாம் என்ன தெரிந்துகொள்கிறோம்? நாம் எப்படிப்பட்ட சோதனைகளை எதிர்ப்பட வேண்டும் என்று யெகோவா தீர்மானிப்பதில்லை. நம் வாழ்க்கையில் சோதனைகள் வரும்போது, நாம் யெகோவாவை நம்பியிருந்தால் நம்மால் எப்படிப்பட்ட சோதனையையும் சகிக்க முடியும். நாம் அவருக்கு உண்மையோடு இருக்க வேண்டும் என்பதற்காக, யெகோவா நம்மை எப்போதும் விடுவிப்பார்.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்
வேசித்தனம் செய்ததற்காக ஒரே நாளில் 23,000 இஸ்ரவேலர் கொல்லப்பட்டதாக 1 கொரிந்தியர் 10:8 குறிப்பிடுகிறது, ஆனால் எண்ணாகமம் 25:9-ல் 24,000 பேர் என குறிப்பிடப்பட்டிருப்பதேன்?
இந்த இரு வசனங்களில் கொடுக்கப்பட்டுள்ள எண்ணிக்கையில் வித்தியாசம் இருப்பதற்கு அநேக காரணங்கள் உள்ளன. ஓர் எளிய காரணம், உண்மையான எண்ணிக்கை 23,000-க்கும் 24,000-க்கும் இடைப்பட்டதாக இருந்திருக்கலாம், ஆகவே குத்துமதிப்பாக இவ்விரண்டையுமே சொல்ல முடிந்திருக்கலாம்.
மற்றொரு சாத்தியத்தை சிந்தித்துப் பாருங்கள். சிற்றின்ப வாழ்க்கைக்குப் பேர்போன நகரமாகிய பூர்வ கொரிந்துவிலிருந்த கிறிஸ்தவர்களுக்கு சித்தீமில் வாழ்ந்த இஸ்ரவேலரைப் பற்றிய இந்தப் பதிவை ஓர் எச்சரிக்கும் உதாரணமாக அப்போஸ்தலன் பவுல் எடுத்துப் பேசினார். அவர் இவ்வாறு எழுதினார்: “அவர்களில் சிலர் வேசித்தனம் பண்ணி, ஒரே நாளில் இருபத்து மூவாயிரம் பேர் விழுந்து போனார்கள்; அதுபோல நாமும் வேசித்தனம் பண்ணாதிருப்போமாக.” வேசித்தனம் செய்ததனிமித்தம் யெகோவாவினால் கொலை செய்யப்பட்டவர்களை வேறுபடுத்திக் காட்ட 23,000 என்ற எண்ணிக்கையை பவுல் கொடுத்தார்.—1 கொரிந்தியர் 10:8.
ஆனால் எண்ணாகமம் 25-ம் அதிகாரம், “இஸ்ரவேலர் பாகால் பேயோரைப் பற்றிக்கொண்டார்கள்; அதனால் இஸ்ரவேலர்மேல் கர்த்தருடைய கோபம் மூண்டது” என நமக்குச் சொல்கிறது. ஆகவே, “ஜனங்களின் தலைவர் எல்லாரையும்” கொலை செய்யும்படி மோசேக்கு யெகோவா கட்டளையிட்டார். இந்தக் கட்டளையை நிறைவேற்ற மோசே நியாயாதிபதிகளிடம் உத்தரவிட்டார். கடைசியில், மீதியானிய பெண் ஒருத்தியை பாளயத்திற்குள் அழைத்துவந்த இஸ்ரவேலனை பினெகாஸ் உடனே கொலை செய்தபோது இந்த “வாதை நின்றுபோயிற்று.” இந்தப் பதிவு பின்வரும் கூற்றுடன் முடிவடைகிறது: “அந்த வாதையால் செத்தவர்கள் இருபத்து நாலாயிரம் பேர்.”—எண்ணாகமம் 25:1-9.
எண்ணாகமத்தில் கொடுக்கப்பட்டுள்ள எண்ணிக்கையில், நியாயாதிபதிகளால் கொலை செய்யப்பட்ட ‘ஜனங்களின் தலைவர்களுடைய’ எண்ணிக்கையும், யெகோவாவினால் நேரடியாக கொலை செய்யப்பட்டவர்களுடைய எண்ணிக்கையும் சேர்த்து சொல்லப்பட்டிருந்ததாக தெரிகிறது. நியாயாதிபதிகளுடைய கைகளால் செத்த அந்தத் தலைவர்களுடைய எண்ணிக்கை சுமார் ஆயிரம் இருந்திருக்கலாம், இதனால் அந்த எண்ணிக்கை 24,000 ஆனது. இந்தப் பண்டிகைகளில் கலந்துகொண்ட தலைவர்கள் வேசித்தனம் செய்திருந்தாலும்சரி, அல்லது அப்படி செய்தவர்களுக்கு அனுமதி அளித்திருந்தாலும்சரி, ‘பாகால் பேயோரைப் பற்றிக்கொண்ட’ குற்றத்திற்கு ஆளானார்கள்.
‘பற்றிக்கொண்ட’ என்ற வார்த்தை, “ஒருவரை மற்றொருவருடன் சேர்த்துக் கட்டுவதை” அர்த்தப்படுத்துவதாக பைபிள் ஆராய்ச்சி நூல் ஒன்று கூறுகிறது. இஸ்ரவேலர் யெகோவாவுக்கு ஒப்புக்கொடுக்கப்பட்ட ஜனங்களாக இருந்தார்கள், ஆனால் அவர்கள் ‘பாகால் பேயோரைப் பற்றிக்கொண்டபோது’ கடவுளுடன் தங்களுடைய ஒப்புக்கொடுக்கப்பட்ட உறவை முறித்துவிட்டார்கள். சுமார் 700 வருடங்களுக்குப் பின்னர், இஸ்ரவேலரைப் பற்றி ஓசியா தீர்க்கதரிசியின் மூலம் யெகோவா இவ்வாறு கூறினார்: “அவர்கள் பாகால் பேயோர் அண்டைக்குப் போய், இலச்சையானதற்குத் தங்களை ஒப்புவித்து, தாங்கள் நேசித்தவைகளைப் போலத் தாங்களும் அருவருப்புள்ளவர்களானார்கள்.” (ஓசியா 9:10) இப்படி செய்தவர்கள் அனைவரும் கடும் தெய்வத் தண்டனைக்குத் தகுதியானவர்களாக இருந்தார்கள். ஆகவே, இஸ்ரவேல் புத்திரருக்கு மோசே இவ்வாறு நினைப்பூட்டினார்: “பாகால் பேயோரின் நிமித்தம் கர்த்தர் செய்ததை உங்கள் கண்கள் கண்டிருக்கிறது: பாகால் பேயோரைப் பின்பற்றின மனிதரையெல்லாம் உன் தேவனாகிய கர்த்தர் உன் நடுவில் இராதபடிக்கு அழித்துப் போட்டார்.”—உபாகமம் 4:3.
வாசகர் கேட்கும் கேள்விகள்
ஒரு சகோதரி பைபிள் படிப்பு எடுக்கும்போது, ஞானஸ்நானம் எடுக்காத ஒரு சகோதரர் அங்கு இருந்தால் அவர் முக்காடு போட வேண்டுமா?
▪ ஒரு சகோதரி பைபிள் படிப்பு எடுக்கும்போது ஞானஸ்நானம் எடுத்த, இல்லையென்றால் ஞானஸ்நானம் எடுக்காத ஒரு சகோதரர் அங்கு இருந்தால் அவர் முக்காடு போட வேண்டுமென்று, ஜுலை 15, 2002 காவற்கோபுரத்தில் (“வாசகரிடமிருந்து வரும் கேள்விகள்”) சொல்லப்பட்டிருந்தது. ஆனால், இதைப் பற்றி இன்னும் அதிகமாக சிந்தித்துப் பார்த்தபோது இதில் ஒரு மாற்றம் தேவை என்பது தெரிகிறது.
ஒரு சகோதரி பைபிள் படிப்பு எடுக்கும்போது, ஞானஸ்நானம் எடுத்த ஒரு சகோதரர் அங்கு இருந்தால் அவர் முக்காடு போட வேண்டும். அப்போதுதான், யெகோவா ஏற்பாடு செய்திருக்கிற தலைமை ஸ்தானத்திற்கு அவர் மதிப்பு கொடுக்கிறார் என்று அர்த்தம். (1 கொ. 11:5, 6, 10) சபையில் தலைமை தாங்கி நடத்துகிற பொறுப்பையும், கற்பிக்கிற வேலையையும் சகோதரர்களுக்குத்தான் யெகோவா கொடுத்திருக்கிறார். பைபிள் படிப்பு எடுக்கும்போது, ஒரு சகோதரர் செய்ய வேண்டிய கற்பிக்கிற வேலையை அந்த சகோதரி செய்வதால், அவர் முக்காடு போட வேண்டும். ஒருவேளை, அந்த சகோதரரால் பைபிள் படிப்பு நடத்த முடியும் என்றால், அந்த சகோதரி அவரையே நடத்த சொல்லலாம்.
ஆனால், ஒரு சகோதரி பைபிள் படிப்பு எடுக்கும்போது, அவருடைய கணவரைத் தவிர, ஞானஸ்நானம் எடுக்காத வேறு ஒரு சகோதரர் அங்கு இருந்தால், பைபிளின்படி அவர் முக்காடு போட வேண்டிய அவசியமில்லை. ஒருவேளை, முக்காடு போட வேண்டுமென்று அவர் மனசாட்சி சொன்னால் அப்போது அவர் முக்காடு போட்டுக்கொள்ளலாம்.
ஏப்ரல் 22-28
பைபிளில் இருக்கும் புதையல்கள் | 1 கொரிந்தியர் 14-16
“கடவுள்தான் ‘எல்லாருக்கும் எல்லாமுமாக’ இருப்பார்”
‘மரணம் ஒழிக்கப்படும்’
10 “முடிவு” என்பது கிறிஸ்துவின் ஆயிர வருட ஆட்சியின் முடிவாகும். அப்போது இயேசு, தம்முடைய கடவுளும் பிதாவுமானவரிடம் மனத்தாழ்மையோடும் உண்மையோடும் ராஜ்யத்தை ஒப்படைப்பார். (வெளிப்படுத்துதல் 20:4) “சகலமும் கிறிஸ்துவுக்குள்ளே கூட்டப்படவேண்டுமென்[ற]” கடவுளுடைய நோக்கம் நிறைவேறியிருக்கும். (எபேசியர் 1:9, 10) அதற்கு முன்பாக, கடவுளுடைய சர்வலோக நோக்கத்திற்கு எதிராக இருக்கும் “சகல துரைத்தனத்தையும் சகல அதிகாரத்தையும் வல்லமையையும்” கிறிஸ்து அழித்திருப்பார். அர்மகெதோனில் கொண்டுவரப்படும் அழிவைவிட அதிகத்தை இது உட்படுத்தும். (வெளிப்படுத்துதல் 16:16; 19:11-21) பவுல் கூறுகிறார்: “எல்லாச் சத்துருக்களையும் தமது பாதத்திற்குக் கீழாக்கிப்போடும்வரைக்கும், [கிறிஸ்து] ஆளுகை செய்யவேண்டியது. ஒழிக்கப்படுங் கடைசிச் சத்துரு மரணம்.” (1 கொரிந்தியர் 15:25, 26, தி.மொ.) ஆம், ஆதாமிய பாவம் மற்றும் மரணத்தின் சுவடுகள் எல்லாம் நீக்கப்பட்டிருக்கும். அப்போது, மரித்தவர்களை உயிருக்கு கொண்டுவருவதன் மூலம் கடவுள் நிச்சயமாகவே ‘பிரேதக்குழிகளை’ எல்லாம் காலியாக்கி இருப்பார்.—யோவான் 5:28.
கடவுளுடைய அரசாங்கம் அவருடைய விருப்பத்தைப் பூமியில் நிறைவேற்றுகிறது
21 ஆனால், வியாதியால் வரும் மரணத்தைப் பற்றி என்ன சொல்லலாம்? இதுவும்கூட பாவத்தின் விளைவுதான். இதை நம் “கடைசி எதிரி” என்று பைபிள் சொல்கிறது. அபூரண மனிதர்களால் இதன் பிடியிலிருந்து தப்பிக்க முடியாது. (1 கொ. 15:26) ஆனால், யெகோவாவுக்கு முன் இது ஒரு பெரிய எதிரி கிடையாது. ஏசாயா சொன்ன தீர்க்கதரிசனத்தைக் கவனியுங்கள்: “மரணத்தை அவர் அடியோடு ஒழித்துக்கட்டுவார். உன்னதப் பேரரசராகிய யெகோவா எல்லாருடைய முகங்களிலிருந்தும் கண்ணீரைத் துடைத்துவிடுவார்.” (ஏசா. 25:8) அந்தச் சமயத்தை உங்கள் மனத்திரையில் பார்க்க முடிகிறதா? அப்போது சவ அடக்கங்களோ, கல்லறைகளோ இருக்காது. சோகத்தில் யாரும் கண்ணீர்விட மாட்டார்கள். அதற்குப் பதிலாக, ஆனந்தக் கண்ணீர் பெருக்கெடுக்கும். ஏனென்றால், இறந்துபோனவர்களைத் திரும்பவும் எழுப்பப் போவதாக யெகோவா கொடுத்த வாக்குறுதி அப்போது நிறைவேறும். (ஏசாயா 26:19-ஐ வாசியுங்கள்.) கடைசியில், மரணத்தால் ஏற்பட்ட காயங்கள் எல்லாமே ஆறிவிடும்.
சமாதானம்—ஆயிரம் ஆண்டுகளுக்கும்... அதற்கு அப்பாலும்...
17 “கடவுளே எல்லாருக்கும் எல்லாமுமாக இருப்பார்” என்ற வார்த்தைகள் ஆயிர வருட ஆட்சியின் மகத்தான உச்சக்கட்டத்தை மிகமிக அருமையாக வர்ணிக்கின்றன. இவ்வார்த்தைகள் எதை அர்த்தப்படுத்துகின்றன? இதைச் சற்று எண்ணிப் பாருங்கள்: ஏதேன் தோட்டத்தில் பரிபூரணமாக இருந்த ஆதாம் ஏவாள், யெகோவாவுடைய சர்வலோக குடும்பத்தின் அங்கத்தினர்களாக இருந்தார்கள். அந்தக் குடும்பத்தில் சமாதானமும் ஐக்கியமும் நிலவியது. தேவதூதர்கள், மனிதர்கள் என எல்லாப் படைப்புகள்மீதும் சர்வலோகப் பேரரசரான யெகோவா நேரடியாக ஆட்சி செய்து வந்தார். அவர்கள் அவரிடம் நேரடியாகப் பேசினார்கள், அவரை வணங்கினார்கள், அவருடைய ஆசீர்வாதத்தைப் பெற்றார்கள். இவ்வாறு, அவரே ‘எல்லாருக்கும் எல்லாமுமாக இருந்தார்.’
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
w12-E 9/1 9, பெட்டி
பெண்கள் பேசவே கூடாது என்று அப்போஸ்தலன் பவுல் சொன்னாரா?
“சபைகளில் பெண்கள் அமைதியாக இருக்க வேண்டும்” என்று பவுல் எழுதினார். (1 கொரிந்தியர் 14:34) அவர் சொன்னதன் அர்த்தம் என்ன? பெண்களுக்கு ஒன்றும் தெரியாது என்று நினைத்து அவர்களை அமைதியாக இருக்கச் சொன்னாரா? இல்லை. சொல்லப்போனால், பயனுள்ள விஷயங்களைப் பெண்கள் சொல்லிக்கொடுப்பதாக அவரே பல தடவை குறிப்பிட்டிருக்கிறார். (2 தீமோத்தேயு 1:5; தீத்து 2:3-5) அதோடு, கொரிந்தியர்களுக்கு எழுதிய கடிதத்தில், பெண்களுக்கு மட்டுமே இந்த அறிவுரையை பவுல் கொடுக்கவில்லை. வெவ்வேறு மொழிகளில் பேசும் வரம் உள்ளவர்களுக்கும், தீர்க்கதரிசனம் சொல்லும் வரம் உள்ளவர்களுக்கும்கூட அவர் இந்த அறிவுரையைக் கொடுத்தார்; ஒரு சகோதரன் பேசிக்கொண்டிருக்கும்போது அவர்கள் “அமைதியாகிவிட வேண்டும்” என்று சொன்னார்.(1 கொரிந்தியர் 14:26-30, 33) புதிதாகச் சத்தியத்துக்கு வந்திருந்த சில கிறிஸ்தவ சகோதரிகள், தாங்கள் கற்றுக்கொண்ட விஷயங்களில் ரொம்ப ஆர்வமாக இருந்ததால், சபையில் ஒருவர் பேசிக்கொண்டிருந்தபோதே நடுவில் கேள்விகள் கேட்டதாகத் தெரிகிறது. அப்படிக் கேள்விகள் கேட்பது அந்த ஊர் வழக்கமாகவும் இருந்தது. ஆனால், ஆளாளுக்குக் கேள்விகள் கேட்பது சபையில் குழப்பத்தை ஏற்படுத்தும் என்பதால், ‘வீட்டில் தங்களுடைய கணவரிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளும்படி’ பவுல் அந்தச் சகோதரிகளை உற்சாகப்படுத்தினார்.—1 கொரிந்தியர் 14:35.
w09 2/15 25 ¶6
இவர்கள் ‘ஆட்டுக்குட்டியானவரைப் பின்பற்றுகிறார்கள்’
6 உண்மையுள்ள இந்த அடிமை வகுப்பார்மீது யெகோவா எந்தளவுக்கு நம்பிக்கை வைத்திருக்கிறார் என்பதைப் புரிந்துகொள்ள அவர்களுக்கு அவர் அளித்திருக்கும் வாக்குறுதியைச் சற்று சிந்தித்துப் பாருங்கள். “எக்காளம் தொனிக்கும், அப்பொழுது மரித்தோர் அழிவில்லாதவர்களாய் எழுந்திருப்பார்கள்; நாமும் மறுரூபமாக்கப்படுவோம். அழிவுள்ளதாகிய இது அழியாமையையும், சாவுக்கேதுவாகிய இது சாவாமையையும் தரித்துக்கொள்ள வேண்டும்” என்று அப்போஸ்தலன் பவுல் எழுதினார். (1 கொ. 15:52, 53) கிறிஸ்துவைப் பின்பற்றி கடவுளுக்கு உண்மையுடன் சேவை செய்கிற அபிஷேகம் செய்யப்பட்டோர், அழிந்துபோகும் தன்மையுள்ள மானிட உடலில் மரித்து, என்றென்றும் வாழும் தேவதூதர்களைவிட மேலான நிலைக்கு உயிர்த்தெழுப்பப்படுகிறார்கள். ஆம், அவர்களுக்குச் சாகாவரம் கொடுக்கப்படுகிறது, அதாவது முடிவில்லாமையும் அழியாமையும் கொடுக்கப்படுகிறது. அதோடு, அழிந்துபோகாத உடல் அவர்களுக்கு அளிக்கப்படுகிறது, உயிர்வாழத் தேவையான எதையும் அவர்கள் சார்ந்திருக்க வேண்டியதில்லை. உயிர்த்தெழுப்பப்பட்ட இவர்கள் தங்களுடைய தலையில் பொற்கிரீடம் சூடிக்கொண்டு சிம்மாசனங்களில் அமர்ந்திருப்பதாக வெளிப்படுத்துதல் 4:4 விவரிக்கிறது. அபிஷேகம் செய்யப்பட்ட கிறிஸ்தவர்களுக்கு ராஜ மகிமை காத்திருக்கிறது. ஆனால் அதைவிட மேலான காரியங்களும் இருக்கின்றன.
‘மரணம் ஒழிக்கப்படும்’
7 பின்னர் பவுல் கூறுகிறார்: “மரித்தோரின் உயிர்த்தெழுதலும் அப்படியே இருக்கும், அழிவுள்ளதாய் விதைக்கப்படும், அழிவில்லாததாய் எழுந்திருக்கும்.” (1 கொரிந்தியர் 15:42) பரிபூரணமாக இருந்தாலும்கூட மானிட சரீரம் அழியக்கூடியதே. அது கொல்லப்படலாம். உதாரணமாக, உயிர்த்தெழுப்பப்பட்ட இயேசு “அழிவுக்குட்படாதபடிக்கு” எழுப்பப்பட்டார் என பவுல் கூறினார். (அப்போஸ்தலர் 13:34) பரிபூரணமாக இருந்தாலும் அழியக்கூடிய மானிட சரீரத்தில் அவர் இனி ஒருபோதும் உயிர் பெறமாட்டார். உயிர்த்தெழுப்பப்பட்ட அபிஷேகம் செய்யப்பட்டவர்களுக்கு கடவுள் கொடுக்கும் சரீரங்கள் அழியாதவை—மரணம் அல்லது அழிவிற்கு அப்பாற்பட்டவை. பவுல் தொடர்கிறார்: “கனவீனமுள்ளதாய் விதைக்கப்படும், மகிமையுள்ளதாய் எழுந்திருக்கும்; பலவீனமுள்ளதாய் விதைக்கப்படும், பலமுள்ளதாய் எழுந்திருக்கும். ஜென்மசரீரம் விதைக்கப்படும், ஆவிக்குரிய சரீரம் எழுந்திருக்கும்.” (1 கொரிந்தியர் 15:43, 44) “அழிவுள்ளதாகிய இது அழியாமையை . . . தரித்துக்கொள்ள வேண்டும்” என்று பவுல் மேலுமாக கூறுகிறார். அழியாமை என்பது முடிவில்லாத, அழிக்கப்பட முடியாத ஜீவனைக் குறிக்கிறது. (1 கொரிந்தியர் 15:53; எபிரெயர் 7:17) இவ்வாறாக, உயிர்த்தெழுப்பப்பட்டவர்கள் தங்கள் உயிர்த்தெழுதலை சாத்தியமாக்கிய “வானவருடைய [இயேசுவுடைய] சாயலையும்” தரித்துக்கொள்வார்கள்.—1 கொரிந்தியர் 15:45-49.
ஏப்ரல் 29–மே 5
பைபிளில் இருக்கும் புதையல்கள் | 2 கொரிந்தியர் 1-3
“யெகோவா—‘எல்லா விதமான ஆறுதலின் கடவுள்’”
“அழுகிறவர்களோடு அழுங்கள்”
4 அன்பானவர்களை மரணத்தில் பறிகொடுத்த வேதனை யெகோவாவுக்கும் இருக்கிறது. உதாரணத்துக்கு ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு, மோசே, தாவீது ராஜா போன்றவர்களை அவர் மரணத்தில் இழந்திருக்கிறார். (எண். 12:6-8; மத். 22:31, 32; அப். 13:22) அந்த உண்மையுள்ளவர்களை மறுபடியும் உயிரோடு கொண்டுவரப்போகும் அந்த நாளுக்காக யெகோவா ஆர்வமாகக் காத்திருக்கிறார் என்று பைபிள் சொல்கிறது. (யோபு 14:14, 15) அப்போது, அவர்கள் எல்லாரும் சந்தோஷமாக இருப்பார்கள், பரிபூரண ஆரோக்கியத்தை அனுபவிப்பார்கள். கடவுளுடைய மகனான இயேசுவைப் பற்றி யோசித்துப் பாருங்கள். இயேசு யெகோவாவுக்கு “செல்லப்பிள்ளையாக” இருந்தார் என்று பைபிள் சொல்கிறது. (நீதி. 8:22, 30) அந்த அருமை மகன் துடிதுடித்து இறந்துபோனதைப் பார்த்தபோது, யெகோவாவுக்கு எவ்வளவு வேதனையாக இருந்திருக்கும் என்பதை நம்மால் கற்பனைகூட செய்ய முடியாது!—யோவா. 5:20; 10:17.
“அழுகிறவர்களோடு அழுங்கள்”
14 துக்கத்தில் இருப்பவர்களிடம் என்ன சொல்வது என்று தெரியாமல் நாம் யோசித்துக்கொண்டிருக்கலாம். ஆனால், “ஞானமுள்ளவனின் நாவு காயத்தை ஆற்றும்” என்று பைபிள் சொல்கிறது. (நீதி. 12:18) நீங்கள் நேசிக்கிற ஒருவர் மரிக்கையில்... என்ற சிற்றேட்டில் ஆறுதலான வார்த்தைகள் இருக்கின்றன. மற்றவர்களை ஆறுதல்படுத்த நிறைய பேர் அதைப் பயன்படுத்தியிருக்கிறார்கள். இருந்தாலும், துக்கப்படுகிறவர்களுக்கு மிக முக்கியமான ஒரு உதவியைச் செய்யலாம். அதாவது, ‘அழுகிறவர்களோடு அழலாம்.’ (ரோ. 12:15) கேபி என்பவருடைய கணவர் இறந்துவிட்டார். சில சமயங்களில், தன் உணர்ச்சிகளை வெளிக்காட்டுவதற்கான ஒரே வழி அழுவதுதான் என்று அவர் சொல்கிறார். “அதனாலதான், என்னோட நண்பர்கள் என்கூட அழறப்போ எனக்கு ஓரளவு ஆறுதலா இருக்கு. அந்த சமயத்துல, நான் தனியா துக்கப்படலங்கிற உணர்வு எனக்கு இருக்கும்” என்று அவர் சொல்கிறார்.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
வாசகர் கேட்கும் கேள்விகள்
பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்களுக்கு கடவுள் தரும் ‘உத்தரவாதமும்,’ ‘முத்திரையும்’ எதை குறிக்கிறது?—2 கொ. 1:21, 22.
▪ உத்தரவாதம்: 2 கொரிந்தியர் 1:22-ல் “உத்தரவாதம்” என்று மொழிபெயர்க்கப்பட்ட கிரேக்க வார்த்தை “சட்டத்துறையிலும் வியாபார துறையிலும் பயன்படுத்தப்படும் வார்த்தை” என்று ஒரு ஆராய்ச்சி புத்தகம் சொல்கிறது. “ஒரு பொருளை வாங்குவதற்கு முன்பே கொடுக்கப்படும் முதல் தவணையை, டெப்பாஸிட்டை, முன்பணத்தை இது குறிக்கிறது. இதன் மூலம் அந்த பொருள் அதை வாங்கியவருக்கு சட்டப்படி சொந்தம் என்ற உத்தரவாதத்தை தருகிறது. அல்லது, ஒருவர் செய்திருக்கும் ஒப்பந்தத்தை செல்லுபடியாக்குகிறது.” அதேபோல், பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்கள் தங்கள் பரிசை பெறுவார்கள் என்ற உத்தரவாதத்தை யெகோவா கொடுத்திருக்கிறார். அவர்களுக்கு கிடைக்கப்போகும் பரிசை பற்றி 2 கொரிந்தியர் 5:1-5 சொல்கிறது. அழிக்க முடியாத பரலோக உடல் அவர்களுக்கு பரிசாக கிடைக்கப்போகிறது. அதோடு, சாவாமையுள்ள வாழ்க்கையும் அவர்களுக்கு கிடைக்கப்போகிறது.—1 கொ. 15:48-54.
நவீன கிரேக்க மொழியில், நிச்சயதார்த்த மோதிரத்தை குறிப்பதற்கு இதேபோன்ற ஒரு வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. அடையாள அர்த்தத்தில் கிறிஸ்துவுக்கு மனைவியாக ஆகப்போகிறவர்களுக்கு இந்த வார்த்தை ரொம்ப பொருத்தமாக இருக்கிறது.—2 கொ. 11:2; வெளி. 21:2, 9.
▪ முத்திரை: பூர்வகாலத்தில், ஏதோவொன்று ஒருவருக்கு சொந்தம் என்று அதிகாரப்பூர்வமாக சொல்வதற்கு அல்லது அவருக்கு அதன்மீது உரிமை இருக்கிறது என்று காட்டுவதற்கு முத்திரை போடப்பட்டது. இது கையெழுத்துப் போடுவதற்கு சமமாக இருந்தது. பரலோக நம்பிக்கையுள்ள கிறிஸ்தவர்களின் விஷயத்திலும் இதுதான் உண்மை. அவர்கள் கடவுளுக்கு சொந்தமானவர்கள் என்பதை காட்டுவதற்காக கடவுளுடைய சக்தியின் மூலம் முத்திரை போடப்பட்டிருக்கிறார்கள். (எபே. 1:13, 14) பரலோக நம்பிக்கையுள்ளவர்கள் சாவதற்கு கொஞ்சம் முன்பு, அல்லது மிகுந்த உபத்திரவம் ஆரம்பிப்பதற்கு முன்புதான் இந்த முத்திரை அவர்களுக்கு நிரந்தரமாக கிடைக்கும்.—எபே. 4:30; வெளி. 7:2-4.
உங்களுக்குத் தெரியுமா?
அப்போஸ்தலன் பவுல் எதை மனதில் வைத்து ‘வெற்றி ஊர்வலத்தை’ பற்றிக் குறிப்பிட்டார்?
▪ “கடவுள் நம்மை . . . கிறிஸ்துவுடன் வெற்றி ஊர்வலத்தில் நடத்திச் செல்வதற்காகவும், தம்மைப் பற்றிய அறிவின் வாசனையை நம் மூலமாக எல்லா இடங்களிலும் பரவச் செய்வதற்காகவும் அவருக்கு நன்றி சொல்கிறேன். மீட்பின் வழியில் இருப்பவர்கள் மத்தியிலும் அழிவின் வழியில் இருப்பவர்கள் மத்தியிலும் நாம் கிறிஸ்துவைப் பற்றி அறிவிக்கும்போது, கடவுளுக்குமுன் இனிய வாசனையாக இருக்கிறோம். அழிவின் வழியில் இருப்பவர்களுக்கு மரணத்தை உண்டாக்கும் மரண வாசனையாகவும், மீட்பின் வழியில் இருப்பவர்களுக்கு வாழ்வை அளிக்கும் வாழ்வின் வாசனையாகவும் இருக்கிறோம்” என்று பவுல் எழுதினார்.—2 கொ. 2:14-16.
எதிரிகளை வென்று வீழ்த்திய படைத் தளபதியைக் கௌரவிப்பதற்காக ஆரவாரத்தோடு ஊர்வலம் செல்லும் ரோமர்களின் பழக்கத்தையே அப்போஸ்தலன் இங்கு குறிப்பிட்டார். அந்த ஊர்வலத்தின்போது, கொள்ளையடித்த பொருள்களை எடுத்துச் செல்வார்கள், சிறைபிடித்த கைதிகளை இழுத்துச் செல்வார்கள், பலி செலுத்துவதற்கு காளைகளையும் கொண்டு செல்வார்கள்; வெற்றிவாகை சூடிய தளபதியும் அவருடைய படைவீரர்களுமோ மக்களின் பாராட்டைப் பெறுவார்கள். ஊர்வலத்தின் இறுதியில், காளைகளை பலி செலுத்துவார்கள், அநேக கைதிகளையும் கொலை செய்துவிடுவார்கள்.
சிலருக்கு வாழ்வையும் மற்றவர்களுக்குச் சாவையும் குறிக்கிற ‘கிறிஸ்துவின் இனிய வாசனை’ என்று பவுல் எதை மனதில் வைத்து சொன்னார்? “ஊர்வலத்தின்போது வழிநெடுக தூபம் போட்டுக்கொண்டே செல்லும் ரோமர்களின் பழக்கத்தை” மனதில் வைத்து சொல்லியிருக்கலாம் என இன்டர்நேஷனல் ஸ்டான்டர்ட் பைபிள் என்ஸைக்ளோப்பீடியா கூறுகிறது. “ஜெயங்கொண்ட வீரர்களுக்கு வெற்றியைக் குறித்த அந்த நறுமணப் புகை, கைதிகளுக்கு சாவு காத்திருந்ததை நினைப்பூட்டியது” என்றும் அது சொல்கிறது.