-
உங்களுக்குத் தெரியுமா?காவற்கோபுரம்—2011 | ஏப்ரல் 15
-
-
உங்களுக்குத் தெரியுமா?
அப்போஸ்தலன் பவுல் எதை மனதில் வைத்து ‘வெற்றி ஊர்வலத்தை’ பற்றிக் குறிப்பிட்டார்?
▪ “கடவுள் நம்மை . . . கிறிஸ்துவுடன் வெற்றி ஊர்வலத்தில் நடத்திச் செல்வதற்காகவும், தம்மைப் பற்றிய அறிவின் வாசனையை நம் மூலமாக எல்லா இடங்களிலும் பரவச் செய்வதற்காகவும் அவருக்கு நன்றி சொல்கிறேன். மீட்பின் வழியில் இருப்பவர்கள் மத்தியிலும் அழிவின் வழியில் இருப்பவர்கள் மத்தியிலும் நாம் கிறிஸ்துவைப் பற்றி அறிவிக்கும்போது, கடவுளுக்குமுன் இனிய வாசனையாக இருக்கிறோம். அழிவின் வழியில் இருப்பவர்களுக்கு மரணத்தை உண்டாக்கும் மரண வாசனையாகவும், மீட்பின் வழியில் இருப்பவர்களுக்கு வாழ்வை அளிக்கும் வாழ்வின் வாசனையாகவும் இருக்கிறோம்” என்று பவுல் எழுதினார்.—2 கொ. 2:14-16.
எதிரிகளை வென்று வீழ்த்திய படைத் தளபதியைக் கௌரவிப்பதற்காக ஆரவாரத்தோடு ஊர்வலம் செல்லும் ரோமர்களின் பழக்கத்தையே அப்போஸ்தலன் இங்கு குறிப்பிட்டார். அந்த ஊர்வலத்தின்போது, கொள்ளையடித்த பொருள்களை எடுத்துச் செல்வார்கள், சிறைபிடித்த கைதிகளை இழுத்துச் செல்வார்கள், பலி செலுத்துவதற்கு காளைகளையும் கொண்டு செல்வார்கள்; வெற்றிவாகை சூடிய தளபதியும் அவருடைய படைவீரர்களுமோ மக்களின் பாராட்டைப் பெறுவார்கள். ஊர்வலத்தின் இறுதியில், காளைகளை பலி செலுத்துவார்கள், அநேக கைதிகளையும் கொலை செய்துவிடுவார்கள்.
சிலருக்கு வாழ்வையும் மற்றவர்களுக்குச் சாவையும் குறிக்கிற ‘கிறிஸ்துவின் இனிய வாசனை’ என்று பவுல் எதை மனதில் வைத்து சொன்னார்? “ஊர்வலத்தின்போது வழிநெடுக தூபம் போட்டுக்கொண்டே செல்லும் ரோமர்களின் பழக்கத்தை” மனதில் வைத்து சொல்லியிருக்கலாம் என இன்டர்நேஷனல் ஸ்டான்டர்ட் பைபிள் என்ஸைக்ளோப்பீடியா கூறுகிறது. “ஜெயங்கொண்ட வீரர்களுக்கு வெற்றியைக் குறித்த அந்த நறுமணப் புகை, கைதிகளுக்கு சாவு காத்திருந்ததை நினைப்பூட்டியது” என்றும் அது சொல்கிறது. (w10-E 08/01)
-
-
உங்களுக்கு நினைவிருக்கிறதா?காவற்கோபுரம்—2011 | ஏப்ரல் 15
-
-
உங்களுக்கு நினைவிருக்கிறதா?
சமீபத்தில் வெளியான காவற்கோபுரம் பத்திரிகைகளை நீங்கள் வாசித்து மகிழ்ந்தீர்களா? பின்வரும் கேள்விகளுக்கு உங்களால் பதிலளிக்க முடியுமா என்று பாருங்கள்:
• உண்மைக் கிறிஸ்தவர்கள் கடவுளுடைய பெயரை ஒரு மந்திரச் சொல்லாகப் பயன்படுத்துகிறார்களா?
தங்களை அற்புதமாய்ப் பாதுகாக்கும் சக்தி ஒரு பொருளுக்கோ சின்னத்திற்கோ இருப்பதாகச் சிலர் நினைக்கிறார்கள்; ஆனால், கடவுளுடைய பெயருக்கு மந்திரச் சக்தி இருப்பதாக அவருடைய மக்கள் நினைப்பதில்லை. அவர்கள் யெகோவாமீது நம்பிக்கை வைத்து, அவருடைய சித்தத்தைச் செய்ய முயலுகிறார்கள்; இவ்வாறு, அவருடைய பெயரில் அடைக்கலம் புகுகிறார்கள். (செப். 3:12, 13, NW )—1/15, பக்கங்கள் 5-6.
• யெகோவா ஏன் சவுல் ராஜாவை நிராகரித்தார்?
பலி செலுத்தக் கடவுளுடைய தீர்க்கதரிசி வரும்வரை சவுல் காத்திருக்க வேண்டியிருந்தது; அவரோ காத்திருக்காமல் தானே பலி செலுத்தினார். மற்றொரு சந்தர்ப்பத்தில், கடவுளுடைய மக்களுக்கு எதிரிகளாக இருந்த ஜனத்தைத் துடைத்தழிக்கும்படி கடவுள் கொடுத்த கட்டளைக்குக் கீழ்ப்படியாமல் போனார்.—2/15, பக்கங்கள் 22-23.
• நாம் அக்கிரமத்தை வெறுப்பதை எப்படிக் காட்டுவோம்?
மிதமிஞ்சி மதுபானம் குடிக்க மாட்டோம், மாயமந்திரப் பழக்கங்களை விட்டொழிப்போம், ஒழுக்கக்கேடு பற்றிய இயேசுவின் எச்சரிப்புக்குச் செவிசாய்ப்போம். உதாரணத்திற்கு, ஆபாசப் படங்களைப் பார்க்க மாட்டோம், அதன் கற்பனை உலகில் மிதக்க மாட்டோம். (மத். 5:27, 28) அதோடு, சபை நீக்கம் செய்யப்பட்டவர்களுடன் கூட்டுறவு கொள்ள மாட்டோம்.—2/15, பக்கங்கள் 29-32.
• எரேமியா எப்படி ‘தண்ணீரண்டையிலே நாட்டப்பட்டதும், தன் வேர்களை விடுகிறதுமான’ மரத்தைப் போலிருந்தார்? (எரே. 17:7, 8)
அவர் எப்போதும் கனிகொடுத்துக் கொண்டிருந்தார்; கேலி கிண்டல் செய்கிறவர்கள் பக்கம் சாயவில்லை. மாறாக, ஜீவ தண்ணீரின் ஊற்றாய் இருக்கிற யெகோவாவைச் சார்ந்திருந்தார், அவர் சொன்ன எல்லாவற்றையும் இருதயத்தில் பதித்தார்.—3/15, பக்கம் 14.
-