உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • th படிப்பு 5 பக். 8
  • திருத்தமாக வாசிப்பது

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • திருத்தமாக வாசிப்பது
  • வாசிப்பதிலும் கற்றுக்கொடுப்பதிலும் முழு மூச்சோடு ஈடுபடுங்கள்
  • இதே தகவல்
  • திருத்தமாக வாசித்தல்
    தேவராஜ்ய ஊழியப் பள்ளியிலிருந்து பயனடையுங்கள்
  • சிரத்தையோடு வாசியுங்கள்
    தேவராஜ்ய ஊழியப் பள்ளியிலிருந்து பயனடையுங்கள்
  • உங்களுடைய அறிவின் எல்லையை விரிவாக்க வாசியுங்கள்
    விழித்தெழு!—1992
  • எவ்விதமாக வாசித்து நினைவில் வைப்பது
    தேவராஜ்ய ஊழியப் பள்ளி துணைநூல்
மேலும் பார்க்க
வாசிப்பதிலும் கற்றுக்கொடுப்பதிலும் முழு மூச்சோடு ஈடுபடுங்கள்
th படிப்பு 5 பக். 8

படிப்பு 5

திருத்தமாக வாசிப்பது

வசனம்

1 தீமோத்தேயு 4:13

சுருக்கம்: எழுத்தில் இருப்பதை அப்படியே சத்தமாக வாசியுங்கள்.

எப்படிச் செய்வது?

  • நன்றாகத் தயாரியுங்கள். அந்தப் பதிவு ஏன் எழுதப்பட்டிருக்கிறது என்பதை யோசித்துப் பாருங்கள். வார்த்தைகளைத் தனித்தனியாக வாசித்துப் பழகாதீர்கள்; சேர்த்து வாசிக்க வேண்டிய வார்த்தைகளைச் சேர்த்து வாசித்துப் பழகுங்கள். நீங்களாகவே வார்த்தைகளைப் புதிதாகப் போட்டு வாசிக்காதபடியும், வார்த்தைகளை விழுங்கிவிடாதபடியும், மாற்றி வாசிக்காதபடியும் கவனமாக இருங்கள். எல்லா நிறுத்தக் குறிகளையும் கவனியுங்கள்.

    நடைமுறை ஆலோசனை

    நீங்கள் வாசிப்பதைக் கேட்டு, பிழைகளைச் சுட்டிக்காட்டும்படி உங்கள் நண்பரிடம் சொல்லுங்கள்.

  • ஒவ்வொரு வார்த்தையையும் சரியாக உச்சரியுங்கள். ஒரு வார்த்தையை எப்படி உச்சரிப்பது என்று உங்களுக்குத் தெரியாவிட்டால் அகராதியில் பாருங்கள், அல்லது அந்தப் பிரசுரத்தின் ஆடியோ பதிவைக் கேளுங்கள், அல்லது நன்றாக வாசிக்கத் தெரிந்த ஒருவரிடம் கேளுங்கள்.

  • தெளிவாக வாசியுங்கள். தலையை நிமிர்த்தி, வாயை நன்றாகத் திறந்து, வார்த்தைகளைக் கவனமாக உச்சரியுங்கள். அவற்றிலுள்ள எழுத்துக்களை விழுங்கிவிடாதீர்கள்.

    நடைமுறை ஆலோசனை

    அளவுக்குமீறி அழுத்தம் கொடுத்து வாசிக்காதீர்கள்; அது செயற்கையாக இருக்கும்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்