உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • th படிப்பு 2 பக். 5
  • இயல்பாகப் பேசுவது

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • இயல்பாகப் பேசுவது
  • வாசிப்பதிலும் கற்றுக்கொடுப்பதிலும் முழு மூச்சோடு ஈடுபடுங்கள்
  • இதே தகவல்
  • ஆர்வத்துடிப்பு
    வாசிப்பதிலும் கற்றுக்கொடுப்பதிலும் முழு மூச்சோடு ஈடுபடுங்கள்
  • இயல்பு
    தேவராஜ்ய ஊழியப் பள்ளியிலிருந்து பயனடையுங்கள்
  • உறுதியாகப் பேசுவது
    வாசிப்பதிலும் கற்றுக்கொடுப்பதிலும் முழு மூச்சோடு ஈடுபடுங்கள்
  • கனிவும் அனுதாபமும்
    வாசிப்பதிலும் கற்றுக்கொடுப்பதிலும் முழு மூச்சோடு ஈடுபடுங்கள்
மேலும் பார்க்க
வாசிப்பதிலும் கற்றுக்கொடுப்பதிலும் முழு மூச்சோடு ஈடுபடுங்கள்
th படிப்பு 2 பக். 5

படிப்பு 2

இயல்பாகப் பேசுவது

வசனம்

2 கொரிந்தியர் 2:17

சுருக்கம்: செயற்கையாகப் பேசாமல் மனதிலிருந்து பேசுங்கள்.

எப்படிச் செய்வது?

  • ஜெபம் செய்துவிட்டு, கவனமாகத் தயாரியுங்கள். உங்களைப் பற்றியே யோசிக்காமல், உங்கள் செய்தியைப் பற்றி யோசியுங்கள்; அதைச் செய்வதற்குக் கடவுளிடம் உதவி கேளுங்கள். சொல்ல வேண்டிய முக்கியக் குறிப்புகளை உங்கள் மனதில் பதிய வையுங்கள். அவற்றைச் சொந்த வார்த்தைகளில் சொல்லிப் பாருங்கள். எழுத்தில் இருப்பதை அப்படியே வார்த்தைக்கு வார்த்தை சொல்லாதீர்கள்.

    நடைமுறை ஆலோசனை

    பைபிளிலிருந்தோ வேறொரு பிரசுரத்திலிருந்தோ நீங்கள் வாசித்துக் காட்ட நினைத்தால், அதிலுள்ள தகவலை நன்றாகத் தெரிந்து வைத்துக்கொள்ளுங்கள். அப்போதுதான் உங்களால் சரளமாக வாசிக்க முடியும். இன்னொருவரின் வார்த்தைகளை மேற்கோள் காட்டி வாசிக்கும்போது உணர்ச்சியோடு வாசியுங்கள்; ஆனால், ரொம்ப உணர்ச்சிவசப்பட்டு வாசிக்காதீர்கள்.

  • இதயத்திலிருந்து பேசுங்கள். நீங்கள் சொல்லும் செய்தியை மற்றவர்கள் ஏன் கேட்க வேண்டும் என்று யோசியுங்கள். அவர்களை மனதில் வைத்தே பேசுங்கள். அப்போதுதான், நீங்கள் இதயப்பூர்வமாகவும் நட்போடும் பேசுகிறீர்கள் என்பதை நீங்கள் நிற்கிற/உட்கார்ந்திருக்கிற விதமும் உங்கள் சைகைகளும் முகபாவனைகளும் காட்டும்.

    நடைமுறை ஆலோசனை

    இயல்பாகப் பேச வேண்டும் என்பதற்காக அளவுக்கு மீறி இயல்பாகப் பேசலாம் என்று நினைத்துவிடாதீர்கள். தெளிவாகவும், இலக்கண முறைப்படியும் பேசுங்கள்; இப்படி, நீங்கள் சொல்லும் செய்தியின் கண்ணியம் குறைந்துவிடாதபடி பார்த்துக்கொள்ளுங்கள்.

  • கேட்பவர்களைப் பார்த்துப் பேசுங்கள். கேட்பவர்களின் கண்களைப் பார்த்துப் பேசுங்கள்; உங்கள் கலாச்சாரத்தில் அநாகரிகமாகக் கருதப்பட்டால் மட்டும் அதைத் தவிருங்கள். பேச்சு கொடுக்கும்போது, கூடிவந்திருக்கிற எல்லாரையும் மொத்தமாகப் பார்ப்பதற்குப் பதிலாகத் தனித்தனி நபர்களைச் சில விநாடிகள் பாருங்கள்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்