உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • th படிப்பு 11 பக். 14
  • ஆர்வத்துடிப்பு

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • ஆர்வத்துடிப்பு
  • வாசிப்பதிலும் கற்றுக்கொடுப்பதிலும் முழு மூச்சோடு ஈடுபடுங்கள்
  • இதே தகவல்
  • இதயத்தைத் தொடுவது
    வாசிப்பதிலும் கற்றுக்கொடுப்பதிலும் முழு மூச்சோடு ஈடுபடுங்கள்
  • ஆர்வத்துடிப்போடு கற்றுக்கொடுங்கள்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2021
  • கனிவும் அனுதாபமும்
    வாசிப்பதிலும் கற்றுக்கொடுப்பதிலும் முழு மூச்சோடு ஈடுபடுங்கள்
  • கேட்பவர்களுக்குப் பிரயோஜனமான தகவல்களைச் சொல்வது
    வாசிப்பதிலும் கற்றுக்கொடுப்பதிலும் முழு மூச்சோடு ஈடுபடுங்கள்
மேலும் பார்க்க
வாசிப்பதிலும் கற்றுக்கொடுப்பதிலும் முழு மூச்சோடு ஈடுபடுங்கள்
th படிப்பு 11 பக். 14

படிப்பு 11

ஆர்வத்துடிப்பு

வசனம்

ரோமர் 12:11

சுருக்கம்: ஆர்வத்துடிப்போடு பேசுவதன் மூலம் கேட்பவர்களின் மனதைத் தூண்டி, அவர்களைச் செயல்பட வையுங்கள்.

எப்படிச் செய்வது?

  • தகவல் உங்கள் இதயத்தைத் தொட வேண்டும். என்ன பேசலாம் என்று தயாரிக்கும்போது, நீங்கள் சொல்லும் செய்தியின் முக்கியத்துவத்தைப் பற்றி நன்றாக யோசித்துப் பாருங்கள். தகவலை நீங்கள் நன்றாகத் தெரிந்து வைத்திருந்தால்தான் இதயத்திலிருந்து பேச முடியும்.

  • கேட்பவர்களைப் பற்றி யோசியுங்கள். நீங்கள் வாசிக்கப்போகும் அல்லது கற்றுக்கொடுக்கப்போகும் விஷயங்கள் மற்றவர்களுக்கு எப்படிப் பிரயோஜனமாக இருக்கும் என்று நன்றாக யோசித்துப் பாருங்கள். எப்படிச் சொன்னால் கேட்பவர்களுக்கு அவற்றின்மேல் மதிப்புக் கூடும் என்றும் யோசித்துப் பாருங்கள்.

  • வார்த்தைகளுக்கு உயிர் கொடுங்கள். சலிப்புத்தட்டுவது போலப் பேசாதீர்கள். உங்கள் உணர்ச்சிகளைத் தெரிவிப்பதற்காக நீங்கள் பயன்படுத்தும் சைகைகளும் முகபாவனைகளும் இயல்பாக இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள்.

    நடைமுறை ஆலோசனை

    ஒரே விதமான சைகையைத் திரும்பத் திரும்பப் பயன்படுத்தி, கேட்பவர்களின் கவனத்தைச் சிதறடிக்காதீர்கள். அர்த்தமுள்ள சைகைகளைப் பயன்படுத்துங்கள். முக்கியக் குறிப்புகளைக் கற்றுக்கொடுக்கிறபோதும், கேட்பவர்களைச் செயல்படத் தூண்டுகிறபோதும் ஆர்வத்துடிப்பைக் காட்டுவது மிகவும் அவசியம். ஆனால், ஆரம்பத்திலிருந்து முடிவுவரை அளவுக்கு அதிகமான ஆர்வத்துடிப்போடு பேசி, கேட்பவர்களைச் சோர்வடைய வைக்காதீர்கள்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்