உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb21 மே பக். 11
  • ஆர்வத்துடிப்போடு கற்றுக்கொடுங்கள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • ஆர்வத்துடிப்போடு கற்றுக்கொடுங்கள்
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2021
  • இதே தகவல்
  • உற்சாகம்
    தேவராஜ்ய ஊழியப் பள்ளியிலிருந்து பயனடையுங்கள்
  • ஆர்வத்துடிப்பு
    வாசிப்பதிலும் கற்றுக்கொடுப்பதிலும் முழு மூச்சோடு ஈடுபடுங்கள்
  • கேள்விகளைக் கேளுங்கள்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2021
  • மக்களின் இதயத்தைத் தொடுங்கள்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2021
மேலும் பார்க்க
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2021
mwb21 மே பக். 11
ஒரு சகோதரர், வயதான ஒருவருக்கு சிரித்த முகத்தோடும் சைகையோடும் பைபிள் படிப்பை நடத்துகிறார்.

ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள் | ஊழியத்தில் உங்கள் சந்தோஷம் அதிகரிக்க. . .

ஆர்வத்துடிப்போடு கற்றுக்கொடுங்கள்

நம்முடைய ஆர்வம் மற்றவர்களைத் தொற்றிக்கொள்ளும். நாம் உற்சாகமாக ஆர்வத்துடிப்புடன் பேசும்போது மற்றவர்கள் நன்றாக கவனித்துக் கேட்பார்கள். அப்படிப் பேசுவது, நாம் சொல்லும் செய்தியை நாம் மதிக்கிறோம் என்பதையும் காட்டுகிறது. நம்முடைய பின்னணியும் சுபாவமும் எப்படிப்பட்டதாக இருந்தாலும், நம்மால் ஆர்வத்துடிப்புடன் பேச முடியும். (ரோ 12:11) எப்படி?

முதலாவதாக, நீங்கள் சொல்கிற செய்தி எவ்வளவு முக்கியமானது என்பதை யோசித்துப்பாருங்கள். “நல்ல விஷயங்களை நல்ல செய்தியாக அறிவிக்கிற” பாக்கியம் உங்களுக்குக் கிடைத்திருக்கிறது! (ரோ 10:15) இரண்டாவதாக, இந்த நல்ல செய்தி மற்றவர்களுடைய வாழ்க்கையை எப்படி நல்லபடியாக மாற்றும் என்பதை யோசித்துப்பாருங்கள். நீங்கள் சொல்கிற செய்தி அவர்களுக்கு ரொம்பவே தேவை. (ரோ 10:13, 14) கடைசியாக, உங்களுக்கு இயல்பாகவே வருகிற சைகைகளோடும் முகபாவனைகளோடும் ஆர்வமாகப் பேசுங்கள்.

சீஷராக்கும் வேலையில் சந்தோஷத்தைக் காண திறமைகளை வளர்த்துக்கொள்ளுங்கள்—ஆர்வத்துடிப்போடு கற்றுக்கொடுப்பதில் என்ற வீடியோவைப் பார்த்துவிட்டு இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்:

  • ‘சீஷராக்கும் வேலையில் சந்தோஷத்தைக் காண திறமைகளை வளர்த்துக்கொள்ளுங்கள்—ஆர்வத்துடிப்போடு கற்றுக்கொடுப்பதில்’ என்ற வீடியோவிலிருந்து ஒரு காட்சி. பைபிள் படிப்பு வேண்டாம் என்று ஜேட் சொன்னதால் நீட்டா சோர்வாக இருக்கிறாள்.

    ஜேட்டுக்கு பைபிள் படிப்பு எடுப்பதில் நீட்டாவின் ஆர்வம் ஏன் குறைந்துபோனது?

  • ‘சீஷராக்கும் வேலையில் சந்தோஷத்தைக் காண திறமைகளை வளர்த்துக்கொள்ளுங்கள்—ஆர்வத்துடிப்போடு கற்றுக்கொடுப்பதில்’ என்ற வீடியோவிலிருந்து ஒரு காட்சி. பைபிள் படிப்பில் ஆர்வமே இல்லாமல் ஜேட் உட்கார்ந்திருக்கிறாள்.

    குறைந்துபோன ஆர்வத்தைத் திரும்பவும் அதிகமாக்க நீட்டாவுக்கு எது உதவியது?

  • ‘சீஷராக்கும் வேலையில் சந்தோஷத்தைக் காண திறமைகளை வளர்த்துக்கொள்ளுங்கள்—ஆர்வத்துடிப்போடு கற்றுக்கொடுப்பதில்’ என்ற வீடியோவிலிருந்து ஒரு காட்சி. பைபிள் படிப்பை முடித்த பிறகு ஜேடும் நீட்டாவும் உற்சாகமாகப் பேசிக்கொள்கிறார்கள்

    நம்முடைய ஆர்வம் மற்றவர்களைத் தொற்றிக்கொள்ளும்

    நம்முடைய மாணவர்களிடம் இருக்கிற நல்ல குணங்களைப் பார்ப்பது ஏன் முக்கியம்?

  • ஆர்வத்துடிப்போடு பேசுவது நம்முடைய பைபிள் மாணவர்களுக்கும் மற்றவர்களுக்கும் எப்படிப் பிரயோஜனமாக இருக்கும்?

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்