உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb21 மார்ச் பக். 7
  • கேள்விகளைக் கேளுங்கள்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • கேள்விகளைக் கேளுங்கள்
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2021
  • இதே தகவல்
  • மக்களின் இதயத்தைத் தொடுங்கள்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2021
  • கடவுளுடைய வார்த்தையைப் பயன்படுத்துங்கள்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2021
  • உதவி கேட்டு யெகோவாவிடம் ஜெபம் செய்யுங்கள்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2021
  • யெகோவாவோடு நெருக்கமான நட்பை வளர்த்துக்கொள்ள உங்கள் பைபிள் மாணவர்களுக்கு உதவுங்கள்
    நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2022
மேலும் பார்க்க
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2021
mwb21 மார்ச் பக். 7
ரயில் நிலையத்தின் சுரங்கப் பாதையில் வீல் ஸ்டாண்டு ஊழியம் செய்கிற தம்பதி, ஒரு நபருக்குத் துண்டுப்பிரதி கொடுக்கிறார்கள்.

ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள் | ஊழியத்தில் உங்கள் சந்தோஷம் அதிகரிக்க. . .

கேள்விகளைக் கேளுங்கள்

ஊழியத்தை நாம் சந்தோஷமாகச் செய்ய வேண்டுமென்று ‘சந்தோஷமுள்ள கடவுளான’ யெகோவா விரும்புகிறார். (1தீ 1:11) நம்முடைய திறமைகளைப் பட்டைதீட்ட முயற்சி செய்யும்போது நம் சந்தோஷம் அதிகமாகும். கேள்விகளைக் கேட்பது ஆர்வத்தைத் தூண்டும். பேச்சை ஆரம்பிப்பதற்கான இயல்பான வழியாகவும் அது இருக்கிறது. மக்களிடம் கேள்விகளைக் கேட்கும்போது அவர்களால் யோசித்துப்பார்த்து சரியான முடிவுக்கு வர முடியும். (மத் 22:41-45) கேள்விகளைக் கேட்டு, அதற்கு அவர்கள் சொல்லும் பதில்களைக் கவனித்துக் கேட்கும்போது, ‘உங்கமேல எனக்கு ரொம்ப அக்கறை இருக்கு’ என்று சொல்வதுபோல் இருக்கும். (யாக் 1:19) அவர்கள் சொல்லும் பதிலை வைத்து, அவர்களிடம் எப்படித் தொடர்ந்து பேசலாம் என்பதைத் தெரிந்துகொள்ள முடியும்.

சீஷராக்கும் வேலையில் சந்தோஷத்தைக் காண திறமைகளை வளர்த்துக்கொள்ளுங்கள்—கேள்விகளைக் கேட்பதில் என்ற வீடியோவைப் பார்த்துவிட்டு இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்:

  • ‘சீஷராக்கும் வேலையில் சந்தோஷத்தைக் காண திறமைகளை வளர்த்துக்கொள்ளுங்கள்​—⁠கேள்விகளைக் கேட்பதில்’ என்ற வீடியோவிலிருந்து ஒரு காட்சி. ரயிலில் பயணம் செய்கிற வயதான ஒரு பெண்ணுக்கு ஜேட் தன்னுடைய இருக்கையைக் கொடுக்கிறாள்.

    ஜேட் என்ன நல்ல குணங்களைக் காட்டினாள்?

  • ‘சீஷராக்கும் வேலையில் சந்தோஷத்தைக் காண திறமைகளை வளர்த்துக்கொள்ளுங்கள்​—⁠கேள்விகளைக் கேட்பதில்’ என்ற வீடியோவிலிருந்து ஒரு காட்சி. ஜேடுக்கு நீட்டா கைகொடுத்து தன்னை அறிமுகப்படுத்துகிறாள்.

    கேள்விகளைக் கேட்பதன் மூலம் தனிப்பட்ட அக்கறை இருப்பதை நீட்டா எப்படிக் காட்டினாள்?

  • ‘சீஷராக்கும் வேலையில் சந்தோஷத்தைக் காண திறமைகளை வளர்த்துக்கொள்ளுங்கள்​—⁠கேள்விகளைக் கேட்பதில்’ என்ற வீடியோவிலிருந்து ஒரு காட்சி. நீட்டா கேட்ட கேள்விக்கு ஜேட் பதில் சொல்கிறாள்.

    நல்ல செய்திமீது ஆர்வத்தைத் தூண்டுவதற்காக ஜேடிடம் நீட்டா என்ன கேள்விகளைக் கேட்டாள்?

  • ‘சீஷராக்கும் வேலையில் சந்தோஷத்தைக் காண திறமைகளை வளர்த்துக்கொள்ளுங்கள்​—⁠கேள்விகளைக் கேட்பதில்’ என்ற வீடியோவிலிருந்து ஒரு காட்சி. ஒரு வசனத்தை வாசித்த பிறகு, ஜேடிடம் நீட்டா ஒரு கேள்வியைக் கேட்கிறாள்.

    ஜேட் யோசித்துப்பார்த்து சரியான முடிவுக்கு வர நீட்டா என்ன கேள்விகளைக் கேட்டாள்?

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்