ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள் | ஊழியத்தில் உங்கள் சந்தோஷம் அதிகரிக்க...
உதவி கேட்டு யெகோவாவிடம் ஜெபம் செய்யுங்கள்
ஒருவருடைய இதயம் என்ற நிலத்தில் சத்தியம் என்கிற விதையை யெகோவாதான் வளர செய்கிறார். (1கொ 3:6-9) அதனால், ஊழியத்தில் நல்ல பலன் கிடைக்க வேண்டுமென்றால் யெகோவாவிடம் உதவி கேட்க வேண்டும். பைபிள் மாணவர்களுக்கு உதவ சொல்லியும் கேட்க வேண்டும்.
கஷ்டங்களைச் சகித்துக்கொள்வதற்கும் தடைகளைத் தாண்டுவதற்கும் பைபிள் மாணவர்களுக்கு உதவ சொல்லி யெகோவாவிடம் கேளுங்கள். (பிலி 1:9, 10) அவர்களுக்கு என்ன பிரச்சினை இருக்கிறது என்று குறிப்பாக சொல்லி ஜெபம் செய்யுங்கள். சொல்லாலும் செயலாலும் நீங்கள் அவர்களுக்கு உதவும்போது, கடவுளுடைய சக்தி உங்களை வழிநடத்த வேண்டும் என்று சொல்லி ஜெபம் செய்யுங்கள். (லூ 11:13) எப்படி ஜெபம் செய்வது என்று அவர்களுக்குச் சொல்லி கொடுங்கள். அவர்களை அடிக்கடி ஜெபம் செய்ய சொல்லுங்கள். அவர்களோடு ஜெபம் பண்ணும்போதும் சரி, அவர்களுக்காக ஜெபம் பண்ணும்போதும் சரி, அவர்களுடைய பெயரைப் பயன்படுத்துங்கள்.
சீஷராக்கும் வேலையில் சந்தோஷத்தைக் காண யெகோவாவின் உதவியை ஏற்றுக்கொள்ளுங்கள்—ஜெபம் என்ற வீடியோவைப் பார்த்துவிட்டு இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்:
ஜேட் எப்படி நடந்துகொண்டது நீட்டாவுக்கு சவாலாக இருந்தது?
1 கொரிந்தியர் 3:6 நீட்டாவுக்கு எப்படி உதவியாக இருந்தது?
சவாலை சமாளிப்பதற்கு நீட்டா என்ன செய்தாள்?