உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • th படிப்பு 1 பக். 4
  • பொருத்தமான முன்னுரை

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • பொருத்தமான முன்னுரை
  • வாசிப்பதிலும் கற்றுக்கொடுப்பதிலும் முழு மூச்சோடு ஈடுபடுங்கள்
  • இதே தகவல்
  • பலன்தரத்தக்க முன்னுரைகள்
    தேவராஜ்ய ஊழியப் பள்ளி துணைநூல்
  • ஆர்வத்தைத் தூண்டும் முன்னுரை
    தேவராஜ்ய ஊழியப் பள்ளியிலிருந்து பயனடையுங்கள்
  • நடைமுறைப் பயனைத் தெளிவாகச் சொல்வது
    வாசிப்பதிலும் கற்றுக்கொடுப்பதிலும் முழு மூச்சோடு ஈடுபடுங்கள்
  • ஏசாயா புத்தகத்துக்கு அறிமுகம்
    பரிசுத்த பைபிள்—புதிய உலக மொழிபெயர்ப்பு (ஆராய்ச்சிப் பதிப்பு)
மேலும் பார்க்க
வாசிப்பதிலும் கற்றுக்கொடுப்பதிலும் முழு மூச்சோடு ஈடுபடுங்கள்
th படிப்பு 1 பக். 4

படிப்பு 1

பொருத்தமான முன்னுரை

வசனம்

அப்போஸ்தலர் 17:22

சுருக்கம்: உங்களுடைய முன்னுரையில் கேட்பவர்களின் ஆர்வத்தைத் தூண்டுங்கள், எதைப் பற்றிப் பேசப்போகிறீர்கள் என்று சொல்லுங்கள், அந்த விஷயத்தை அவர்கள் தெரிந்துகொள்வது ஏன் முக்கியம் என்பதை விளக்குங்கள்.

எப்படிச் செய்வது?

  • ஆர்வத்தைத் தூண்டுங்கள். கேட்பவர்களின் ஆர்வத்தைத் தூண்டும் ஒரு கேள்வியை, வாக்கியத்தை, அனுபவத்தை, அல்லது செய்தியைத் தேர்ந்தெடுங்கள்.

    நடைமுறை ஆலோசனை

    கேட்பவர்கள் என்ன விஷயங்களைப் பற்றித் தெரிந்துகொள்ள விரும்புவார்கள் என்பதை முன்கூட்டியே யோசித்துப் பாருங்கள். அதற்கு ஏற்றபடி முன்னுரையைத் தயாரியுங்கள்.

  • எதைப் பற்றிப் பேசப்போகிறீர்கள் என்று சொல்லுங்கள். நீங்கள் எந்த விஷயத்தைப் பற்றிப் பேசப்போகிறீர்கள், எதற்காகப் பேசப்போகிறீர்கள் என்பதை முன்னுரையிலேயே தெளிவாகச் சொல்லுங்கள்.

  • அந்த விஷயம் ஏன் முக்கியம் என்பதை விளக்குங்கள். உங்களுடைய முன்னுரையில், கேட்பவர்களின் தேவைகளை மனதில் வைத்துப் பேசுங்கள். நீங்கள் சொல்லப்போகும் விஷயம் அவர்களுடைய வாழ்க்கைக்கு எப்படி உதவும் என்பதை அவர்கள் தெளிவாகப் புரிந்துகொள்ளும் விதத்தில் பேசுங்கள்.

    நடைமுறை ஆலோசனை

    பேச்சு கொடுப்பதற்குத் தயாரிக்கும்போது, ‘என்னோட சபையில இருக்கிறவங்க என்னென்ன சூழ்நிலைகள சமாளிக்க வேண்டியிருக்கு?’ என்று உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள். பிறகு, அவர்களுடைய தேவைகளுக்கு ஏற்றபடி பொருத்தமான முன்னுரையைத் தேர்ந்தெடுங்கள்.

ஊழியத்தில்

ஒருவர் எந்த விஷயத்தில் ஆர்வம் காட்டுவார் என்பதைத் தெரிந்துகொள்ள, அவர் என்ன செய்துகொண்டிருக்கிறார் அல்லது அவரைச் சுற்றி என்ன இருக்கிறது என்று கவனியுங்கள். பிறகு, அதன் அடிப்படையில் ஒரு குறிப்பைச் சுருக்கமாகச் சொல்லிவிட்டு அல்லது ஒரு கேள்வியைக் கேட்டுவிட்டுப் பேச ஆரம்பியுங்கள்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்