பகுதி மூன்று
‘நான் உங்களைக் கூட்டிச்சேர்ப்பேன்’—தூய வணக்கம் திரும்பவும் நிலைநாட்டப்படும் என்ற வாக்குறுதி
முக்கியக் குறிப்பு: தூய வணக்கம் திரும்பவும் நிலைநாட்டப்படுவது பற்றி எசேக்கியேல் சொன்ன தீர்க்கதரிசனங்கள்
விசுவாசதுரோகத்தின் காரணமாக இஸ்ரவேலில் இருந்த ஒற்றுமை சின்னாபின்னமாகிறது. மக்கள் தூய வணக்கத்தைக் கறைபடுத்தி, கடவுளுடைய பெயரை அவமதித்ததற்கான தண்டனையை இப்போது அனுபவிக்கிறார்கள். நம்பிக்கை இழந்த மக்களுக்கு எசேக்கியேல் மூலமாக நம்பிக்கையூட்டும் தீர்க்கதரிசனங்களை யெகோவா வரிசையாகக் கொடுக்கிறார். தத்ரூபமான காட்சிகளையும் பிரமிக்க வைக்கும் தரிசனங்களையும் யெகோவா அவருக்குக் காட்டுகிறார். இதன் மூலம் சிறைபிடிக்கப்பட்ட இஸ்ரவேலர்களை மட்டுமல்ல, தூய வணக்கம் நிலைநாட்டப்படுவதைப் பார்க்க ஏங்குகிற எல்லாரையும் யெகோவா பலப்படுத்துகிறார்.