உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g16 எண் 1 பக். 16
  • காயம் ஆறும் மாயம்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • காயம் ஆறும் மாயம்
  • விழித்தெழு!—2016
  • இதே தகவல்
  • அறுவைச் சிகிச்சை நிபுணர் தன் மதநம்பிக்கையைப் பற்றி சொல்கிறார்
    விழித்தெழு!—2014
  • தொடர்ந்து உயிரோடிருக்க அற்புதமாய்ப் படைக்கப்பட்டிருக்கிறோம்
    விழித்தெழு!—1989
  • இதய நோய்—உயிருக்கு ஆபத்து
    விழித்தெழு!—1996
  • மெக்ஸிகோவில் பேரழிவுகள் மத்தியில் கிறிஸ்தவ அன்பு
    விழித்தெழு!—1996
மேலும் பார்க்க
விழித்தெழு!—2016
g16 எண் 1 பக். 16
இரத்த செல்களின் மாதிரி படம்

யாருடைய கைவண்ணம்?

காயம் ஆறும் மாயம்

கையில் பேன்டேஜ் போடப்பட்டிருக்கிறது

நம் உடம்புக்குள் நமக்குத் தெரியாமலேயே நிறைய அதிசயம் நடக்கிறது. காயம் வந்தால் அது தானாக ஆறிவிடுவதும் ஒரு அதிசயம்தான். காயம் எப்படி தானாகவே ஆறுகிறது என்று என்றைக்காவது யோசித்திருக்கிறீர்களா?

எப்படி ஆறுகிறது? நம் உடம்பில் இருக்கிற செல்கள்தான் காயம் ஆறுவதற்கு உதவி செய்கிறது:

  • காயம் ஏற்பட்ட உடனே, இரத்தத்தில் இருக்கிற பிளேட்லெட்கள் இரத்தக் குழாய்களை அடைத்து, இரத்தம் வெளியில் வராமல் தடுக்கும்.

  • அதற்குப் பிறகு, காயம் ஏற்பட்ட இடம் வீங்கிவிடும். இதனால், கிருமிகள் உடம்புக்குள் போகாமல் தடுக்க முடியும். காயம் ஏற்பட்டபோது, தூசியோ, கிருமிகளோ உடம்புக்குள் போயிருந்தாலும் வெளியில் வந்துவிடும்.

  • கொஞ்ச நாளிலேயே காயம் ஆற ஆரம்பித்துவிடும். கொஞ்சம் கொஞ்சமாக வீக்கம் குறையும், அந்த இடத்தில் புது தோல் வளர ஆரம்பிக்கும். இரத்தக் குழாய்களில் ஏற்பட்ட காயமும் ஆறிவிடும்.

  • கடைசியாக, அடிபட்ட இடம் பழைய மாதிரி ஆகிவிடும்.

காயம் ஆறுவதை காப்பியடித்து ஒரு புது விஷயத்தை கண்டுபிடிக்க விஞ்ஞானிகள் முயற்சி செய்கிறார்கள். பிளாஸ்டிக் பொருட்கள் செய்யும்போதே அதற்குள் சின்ன குழாய்களை வைத்து தயாரிக்க முயற்சி செய்கிறார்கள். அந்த குழாய்களில் ரெண்டு விதமான ரசாயனம் (கெமிக்கல்) இருக்கும். ப்ளாஸ்டிக் உடையும்போது, அந்த குழாய்களில் இருந்து ரசாயனம் வெளியில் வரும். உடைந்த இடத்தில் இருக்கிற ஓட்டைகளை அது அடைத்துவிடும். இதைப் பார்க்கும்போது, காயம் தானாக ஆறுவதுதான் ஞாபகம் வருகிறது என்று ஜெர்ரி எஸ். மூர் என்ற ஆராய்ச்சியாளர் சொல்கிறார்.

நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? காயம் எப்படி தானாகவே ஆறுகிறது? கடவுள்தானே நம்மை அப்படிப் படைத்திருக்க வேண்டும்? ◼ (g15-E 12)

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்