உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g16 எண் 3 பக். 6
  • 3 முயற்சியை விட்டுவிடாதீர்கள்!

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • 3 முயற்சியை விட்டுவிடாதீர்கள்!
  • விழித்தெழு!—2016
  • இதே தகவல்
  • உங்கள் குறிக்கோள்களை உங்களால் நிச்சயம் அடைய முடியும்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2023
  • பழக்கதோஷத்தால் பயன் பெறுங்கள்
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2001
  • எல்லாம் பழக்கதோஷம்!
    விழித்தெழு!—2016
  • இலக்கை நோக்கி முன்னேறுங்கள்!
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1991
மேலும் பார்க்க
விழித்தெழு!—2016
g16 எண் 3 பக். 6
காலண்டரில் ஒரு பெண் குறித்து வைக்கிறாள்

அட்டைப்படக் கட்டுரை | நல்ல பழக்கங்களை வளர்க்க சில வழிகள்...

3 முயற்சியை விட்டுவிடாதீர்கள்!

குறித்து வைக்கப்பட்ட காலண்டர்

புதுப் பழக்கத்தை வளர்த்துக்கொள்வதற்கு 21 நாட்கள் எடுக்கும் என்ற பொதுவான கருத்து உலகத்தில் இருக்கிறது. ஆனால் இமாலய மாற்றம் செய்ய வேண்டுமென்றால்... சிலருக்கு கொஞ்சம் நாட்கள்தான் எடுக்கும், வேறு சிலருக்கோ அதிக நாட்கள் எடுக்கும் என்று ஆராய்ச்சிகள் காட்டுகின்றன. அதை நினைத்து நீங்கள் கவலைப்பட வேண்டுமா?

இந்த உதாரணத்தைக் கொஞ்சம் கற்பனை செய்து பாருங்கள்: வாரத்துக்கு மூன்று தடவை உடற்பயிற்சி செய்ய வேண்டுமென்று இலக்கு வைத்திருப்பதாக நினைத்துக்கொள்ளுங்கள்.

  • முதலாவது வாரம், உங்களுடைய இலக்கை அடைகிறீர்கள்.

  • இரண்டாவது வாரம், ஒரு நாள் செய்யத் தவறிவிடுகிறீர்கள்.

  • மூன்றாவது வாரம், மறுபடியும் உங்களுடைய பழக்கத்தைத் தொடர்ந்து செய்கிறீர்கள்.

  • நான்காவது வாரம், ஒரு தடவைகூட செய்ய முடியவில்லை.

  • ஐந்தாவது வாரம், மறுபடியும் உங்களுடைய இலக்கை அடைகிறீர்கள், அதுமுதல் ஒவ்வொரு வாரமும் அந்த இலக்கை அடைந்து கொண்டே இருக்கிறீர்கள்.

ஒரு புதுப் பழக்கத்தை தவறாமல் செய்வதற்கு ஐந்து வாரங்கள் எடுத்திருக்கின்றன. அது நீண்ட காலம் போல தோன்றலாம், ஆனால் ஒரு தடவை உங்களுடைய இலக்கை அடைந்துவிட்டால், ஒரு நல்ல பழக்கத்தை வளர்த்துக்கொண்ட சந்தோஷம் உங்களுக்குள் பிறக்கும்.

பைபிள் அறிவுரை: “நீதிமான் ஏழுதரம் விழுந்தாலும் திரும்பவும் எழுந்திருப்பான்.”—நீதிமொழிகள் 24:16.

எதையும் நீண்ட கால கண்ணோட்டத்தில் பார்ப்பதற்கு பைபிள் உற்சாகப்படுத்துகிறது. எத்தனை தடவை விழுந்தோம் என்பது முக்கியமல்ல, எத்தனை தடவை எழுந்தோம் என்பதுதான் முக்கியம்.

எத்தனை தடவை விழுந்தோம் என்பது முக்கியமல்ல, எத்தனை தடவை எழுந்தோம் என்பதுதான் முக்கியம்

நீங்கள் என்ன செய்யலாம்

  • ஒரு தடவை விழுந்துவிட்டால் இனி என்றைக்குமே எழுந்திருக்க முடியாது... என்று முடிவு கட்டிவிடாதீர்கள். உங்களுடைய இலக்கை அடைய முயற்சி செய்யும்போது சில தடங்கல்கள் ஏற்படலாம் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.

  • எத்தனை தடவை சரியாக செய்தீர்கள் என்பதையே எப்போதும் நினைத்துப் பாருங்கள். உதாரணத்துக்கு, உங்களுடைய பிள்ளைகளோடு பேச்சுத்தொடர்பு கொள்ளும் விஷயத்தில் முன்னேற்றம் செய்ய விரும்புவதாக வைத்துக்கொள்ளுங்கள். ஒருவேளை இப்படி யோசித்து பார்க்கலாம்: ‘கடைசியா எப்போ என் பிள்ளைங்கள பார்த்து கோபத்தில கத்தணும்போல இருந்துச்சு, ஆனா ஏன் கத்தலை? அதுக்கு பதிலா நான் என்ன செஞ்சேன்? அதேபோல, இனிமே நான் எப்படி நடந்துக்கலாம்?’ இந்த மாதிரி கேள்விகள்... நீங்கள் அடைந்த தோல்விகள் மீதல்ல, வெற்றிகள் மீதே கவனம் செலுத்த உங்களுக்கு உதவும்.

வாழ்க்கையின் மற்ற அம்சங்களில்... உதாரணமாக கவலையை சமாளிப்பது... சந்தோஷமான குடும்ப வாழ்க்கையை அனுபவிப்பது... உண்மையான சந்தோஷத்தை கண்டுபிடிப்பது போன்ற விஷயங்களில்... பைபிள் தரும் ஆலோசனைகளைத் தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா? யெகோவாவின் சாட்சிகளிடம் கேளுங்கள், அல்லது எங்களுடைய வெப்சைட் jw.org-ஐ பாருங்கள். ◼ (g16-E No. 4)

சில பைபிள் அறிவுரைகள்

“உன் கண்கள் நேராய் நோக்கக்கடவது.”—நீதிமொழிகள் 4:25.

“பின்னானவற்றை மறந்து, முன்னானவற்றை எட்டிப்பிடிக்க நாடி, . . . லட்சியத்தோடு ஓடுகிறேன்.”—பிலிப்பியர் 3:13, 14.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்