உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g20 எண் 1 பக். 4
  • மன அழுத்தம்​—எதனால்?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • மன அழுத்தம்​—எதனால்?
  • விழித்தெழு!—2020
  • இதே தகவல்
  • நல்ல கவலை, கெட்டகவலை
    விழித்தெழு!—1998
  • கவலையைக் குறைக்க . . .
    விழித்தெழு!—2010
  • மன அழுத்தம்​—அப்படியென்றால்?
    விழித்தெழு!—2020
  • அழுத்தத்தை நான் வெல்லமுடியுமா?
    விழித்தெழு!—1988
மேலும் பார்க்க
விழித்தெழு!—2020
g20 எண் 1 பக். 4

மன அழுத்தம் மறைந்திட...

மன அழுத்தம்​—எதனால்?

“பெரியவர்களில் நிறைய பேர் அதிகளவு மன அழுத்தத்துக்கு ஆளாகிறார்கள். அதற்குக் காரணம், வாழ்க்கையில் நடக்கும் நிறைய மாற்றங்களும் எதிர்பாராத சம்பவங்களும்தான்” என்று பிரபல மாயோ கிளினிக் சொல்கிறது. மன அழுத்தத்துக்குக் காரணமாக இருக்கும் மாற்றங்கள் மற்றும் எதிர்பாராத சம்பவங்களில் சிலவற்றைக் கவனியுங்கள்:

  • விவாகரத்து

  • அன்பானவரின் மரணம்

  • தீராத வியாதி

  • பயங்கர விபத்து

  • குற்றச்செயல்

  • படு பிஸியான வாழ்க்கை

  • இயற்கைப் பேரழிவுகள் அல்லது மனிதனால் உண்டாகும் பேரழிவுகள்

  • பள்ளியில் அல்லது வேலையில் வரும் அழுத்தங்கள்

  • போதுமான வருமானம் மற்றும் வேலையைப் பற்றிய கவலைகள்

வேலை இழப்பு

“வேலை இழப்பு ஒருவருடைய வாழ்க்கையையே புரட்டிப் போடலாம். மோசமான உடல்நிலை, கல்யாண வாழ்க்கையில் பிரச்சினை, கவலை, மனச்சோர்வு போன்ற பெரிய பாதிப்புகளை அது ஏற்படுத்தலாம். சில சமயங்களில் அது அந்த நபரைத் தற்கொலைக்குக்கூட வழிநடத்தலாம். ஒருவருக்கு வேலை பறிபோய்விட்டால் அது அவருடைய வாழ்க்கையின் எல்லா அம்சங்களையுமே பாதிக்கிறது” என்று அமெரிக்க உளவியல் சங்கம் (APA) சொல்கிறது.

சிறுபிள்ளைகளுக்கு மன அழுத்தமா?!

சிறுபிள்ளைகளுக்கும்கூட மன அழுத்தம் ஏற்படும். சில பிள்ளைகள் பள்ளியில் வம்பு இழுக்கப்படுகிறார்கள், வீட்டில் அம்போ என்று விடப்படுகிறார்கள். வேறு சிலர் உடல் ரீதியிலோ மன ரீதியிலோ தாக்கப்படுகிறார்கள், அல்லது பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகிறார்கள். நிறைய பிள்ளைகள், பரீட்சையில் நல்ல மார்க் எடுப்பதைப் பற்றிக் கவலைப்படுகிறார்கள். மற்றவர்கள், விவாகரத்தால் குடும்பம் சின்னாபின்னமாவதைப் பார்த்து நொந்துபோகிறார்கள். மன அழுத்தத்தால் அவதிப்படும் பிள்ளைகளுக்குப் பயமுறுத்தும் கனவுகளோ, கற்றல் குறைபாடுகளோ, மனச்சோர்வோ, தன்னைத் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டுமென்ற எண்ணமோ வரலாம். சில பிள்ளைகளால், தங்களுடைய உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்த முடிவதில்லை. மன அழுத்தத்தால் அவதிப்படும் ஒரு பிள்ளைக்கு உடனடியாக உதவி தேவை!

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்