உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g21 எண் 3 பக். 6-7
  • உயிர் என்ன சொல்கிறது?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • உயிர் என்ன சொல்கிறது?
  • விழித்தெழு!-2021
  • இதே தகவல்
  • எந்தவொரு உயிரியும் சாதாரண உயிரியா?
    உயிரின் தோற்றம்—சிந்திக்க ஐந்து கேள்விகள்
  • என்றென்றும் வாழ வடிவமைக்கப்பட்டிருக்கிறது
    விழித்தெழு!—1995
  • மைக்ரோஸ்கோப் பார்வை
    விழித்தெழு!—1999
  • தெரியாதவை தெரிவிக்கும் உண்மைகள்
    விழித்தெழு!—2000
மேலும் பார்க்க
விழித்தெழு!-2021
g21 எண் 3 பக். 6-7
ஈஸ்ட் செல்லின் குறுக்கு வெட்டு தோற்றம்.

ஈஸ்ட் செல்லின் அமைப்பு பயங்கர சிக்கலாக இருக்கிறது. அதன் மையப் பகுதியில் டிஎன்ஏ இருக்கிறது. மூலக்கூறுகளைப் பிரிப்பதற்கும், அவற்றை இடம் மாற்றுவதற்கும், உருமாற்றுவதற்கும் குட்டிக் குட்டி மெஷின்களை போல நிறைய பாகங்கள் இந்த செல்லில் இருக்கின்றன. இவையெல்லாம், அந்த செல் தொடர்ந்து உயிர் வாழ உதவி செய்கிறது.

உயிர் என்ன சொல்கிறது?

உயிரினங்கள் வளர்கிறது, நகர்கிறது, பெருகுகிறது! இவையெல்லாம் இந்தப் பூமியை அழகு கொஞ்சும் ஒரு கோளாக ஆக்குகிறது. உயிரினங்களைப் பற்றி மனிதர்களால் முன்பைவிட இப்போது நிறைய தெரிந்துகொள்ள முடிகிறது. அற்புதமான இந்த உயிர் தானாகவே வந்திருக்குமா? நீங்கள் யோசித்துப்பார்க்க சில விஷயங்கள்:

உயிர் வடிவமைக்கப்பட்டிருப்பது போல தெரிகிறது. எல்லா உயிரினங்களும் செல்களால் ஆனவை. இந்த செல்கள் சின்னச் சின்ன தொழிற்சாலைகளைப் போல செயல்படுகின்றன. உயிரினங்கள் தொடர்ந்து வாழ்வதற்கும் இனப்பெருக்கம் செய்வதற்கும் சிக்கலான பல வேலைகளை இவை செய்கின்றன. சாதாரண உயிரினங்களில்கூட இந்த மாதிரி சிக்கலான வேலைகள் நடக்கின்றன. உதாரணத்துக்கு, பேக்கரியில் பயன்படுத்துகிற ஈஸ்டைப் பற்றி யோசித்துப்பாருங்கள். அது ஒரு-செல் உயிரி! ஈஸ்ட் செல்லை மனித செல்ளோடு ஒப்பிட்டுப் பார்த்தால், அது ரொம்ப எளிமையாகத்தான் இருக்கிறது. ஆனால், ஈஸ்ட் செல்லை மட்டுமே ஆராய்ந்து பார்த்தால், அதன் அமைப்பு பயங்கர சிக்கலாக இருக்கிறது. ஈஸ்ட் செல்லின் மையப் பகுதியில் டிஎன்ஏ (DNA) இருக்கிறது. அதோடு, மூலக்கூறுகளைப் பிரிப்பதற்கும், அவற்றை இடம் மாற்றுவதற்கும், உருமாற்றுவதற்கும் குட்டிக் குட்டி மெஷின்களை போல நிறைய பாகங்கள் இந்த செல்லில் இருக்கின்றன. போதுமான உணவு கிடைக்காதபோது, தன்னுடைய செயல்பாட்டைக் குறைத்துக்கொண்டு செயலற்ற நிலைக்கு, அதாவது தூங்கும் நிலைக்கு, இது போய்விடுகிறது. ஆனாலும், அது உயிரோடுதான் இருக்கும்! செயலற்ற நிலையில் இருக்கிற ஈஸ்டை பிரெட்டு மாதிரியான உணவுகளைத் தயாரிக்க பயன்படுத்தும்போது, இது திரும்பவும் செயல்பட ஆரம்பிக்கிறது.

மனித செல்களை நன்றாகப் புரிந்துகொள்ள விஞ்ஞானிகள் ஈஸ்ட் செல்லைப் பல வருஷங்களாக ஆராய்ச்சி செய்கிறார்கள். ஆனால், அவர்கள் புரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் இன்னும் நிறைய இருக்கின்றன. “இந்த எளிமையான ஈஸ்ட் செல்லின் செயல்பாட்டை புரிந்துகொள்வதற்கே இன்னும் நிறைய சோதனைகளைச் செய்ய வேண்டியிருக்கிறது. அதையெல்லாம் செய்வதற்குப் போதுமான விஞ்ஞானிகள் இல்லை” என்று சுவீடனில் இருக்கிற சாமர்ஸ் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ராஸ் கிங் சொல்கிறார்.

ஒரு சாதாரண ஈஸ்ட் செல்லின் வடிவமைப்பே எவ்வளவு சிக்கலாக இருக்கிறது! இதைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? வடிவமைப்பாளர் ஒருவர் இல்லாமல் இவையெல்லாம் தானாகவே வந்திருக்குமா?

ஒரு உயிரில் இருந்துதான் இன்னொரு உயிர் வரமுடியும். டிஎன்ஏ என்பது நியூக்ளியோடைடுகள் (nucleotides) என்ற மூலக்கூறுகளால் ஆனது! ஒவ்வொரு மனித செல்லிலும் 320 கோடி நியூக்ளியோடைடுகள் இருக்கின்றன. இந்த மூலக்கூறுகள் ஒரு குறிப்பிட்ட வரிசையில் அடுக்கப்பட்டு இருக்கின்றன. அந்த வரிசையைப் பொருத்துதான் செல்கள் நொதிகளையும் (enzymes) புரதங்களையும் (proteins) உற்பத்தி செய்கிறது.

நியூக்ளியோடைடுகளால் தானாகவே சரியான வரிசையில் ஒன்றுசேர முடியுமா? ஒன்றுக்குப் பக்கத்தில் 150 பூஜ்யங்களைப் போட்டால் எத்தனை வருமோ, அத்தனைத் தடவை முயற்சி செய்தால், அதில் ஒரு தடவை வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அப்படியென்றால், யதார்த்தத்தில் இது சாத்தியமே இல்லை என்று தெரிகிறது.

உயிரற்ற பொருளிலிருந்து உயிருள்ள ஒன்றை விஞ்ஞானிகளால் இதுவரை உருவாக்கவே முடியவில்லை.

மனித உடல் ஈடிணை இல்லாதது. வாழ்க்கையைச் சந்தோஷமாக அனுபவிக்கும் திறன் மனிதர்களுக்கு இருக்கிறது. இந்தத் திறன் வேறெந்த உயிரினத்துக்கும் இல்லை. மனிதர்களால் கலைநயத்தோடு யோசிக்க... மற்றவர்களோடு பழக... ஒன்றாகச் சேர்ந்து வாழ... உணர்ச்சிகளை வெளிப்படுத்த... உணவை ருசித்துச் சாப்பிட... நறுமணம் வீசும்போது அதை அனுபவிக்க... இனிமையான சத்தங்களைக் கேட்க... வண்ணங்களையும் அழகான காட்சிகளையும் பார்த்து ரசிக்க... முடிகிறது. அதோடு, வாழ்க்கையைப் பற்றி யோசிக்கவும் எதிர்காலத்துக்காகத் திட்டம் போடவும் முடிகிறது.

வாழ்க்கையை ஓட்டவும் இனப்பெருக்கம் செய்யவும்தான் இந்தத் திறன்கள் நமக்குள் வந்தனவா? அல்லது, வாழ்க்கையை அனுபவிப்பதற்காகப் படைத்தவர் இவற்றையெல்லாம் நமக்குப் பரிசாகக் கொடுத்திருக்கிறாரா? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

‘ஆடம்’-ஐ சந்திக்கலாம் வாங்க!

ஈஸ்ட் செல்லைப் பற்றி ஆராய்ச்சி செய்வதற்காகத் தயாரிக்கப்பட்ட மெஷினின் பெயர்தான் ‘ஆடம்’! இதை ஒரு ரோபோ என்றுகூட சொல்லலாம். ஒரு சின்ன வேன் எவ்வளவு பெரியதாக இருக்குமோ அந்தளவு பெரியதாக இது இருக்கும். இதில் உறையவைக்கும் குளிர்சாதன பெட்டி, கைகளைப் போல் செயல்படும் சில பாகங்கள், கேமரா, சென்சார் மற்றும் நான்கு கம்ப்யூட்டர்கள் இருக்கின்றன. ஈஸ்ட் செல்லை வைத்து சில சிக்கலான ஆராய்ச்சிகளைச் செய்வதற்காகவே இது தயாரிக்கப்பட்டிருக்கிறது. இதை மனிதர்கள் கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை; தானாகவே செயல்படும்.

ஈஸ்ட் செல்லை ஆராய்ச்சி செய்வதற்காக தயாரிக்கப்பட்ட ‘ஆடம்’ என்ற ரோபோவுக்குப் பக்கத்தில் ஒரு விஞ்ஞானி நின்றுகொண்டிருக்கிறார்.

‘இந்த ரோபோ தானாக வந்தது, இதை யாரும் வடிவமைக்கவில்லை’ என்று சொன்னால் நீங்கள் நம்புவீர்களா? மாட்டீர்கள்தானே? ஒரு எளிமையான செல்லின் வடிவமைப்பு இந்த மாதிரி ரோபோக்களைவிட ரொம்ப சிக்கலானது. ரோபோக்களை வடிவமைக்கவே ஒருவர் தேவையென்றால், செல்கள் மட்டும் தானாக வந்திருக்குமா?

இயற்கையில் இருக்கிற சில விஷயங்கள் நம்மை மெய்சிலிர்க்க வைக்கிறது. இது சம்பந்தமான கட்டுரைகளும், வீடியோக்களும் jw.org வெப்சைட்டில் “யாருடைய கைவண்ணம்” என்ற தலைப்பின் கீழ் இருக்கிறது.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்