உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • th படிப்பு 18 பக். 21
  • கேட்பவர்களுக்குப் பிரயோஜனமான தகவல்களைச் சொல்வது

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • கேட்பவர்களுக்குப் பிரயோஜனமான தகவல்களைச் சொல்வது
  • வாசிப்பதிலும் கற்றுக்கொடுப்பதிலும் முழு மூச்சோடு ஈடுபடுங்கள்
  • இதே தகவல்
  • ஆர்வத்துடிப்பு
    வாசிப்பதிலும் கற்றுக்கொடுப்பதிலும் முழு மூச்சோடு ஈடுபடுங்கள்
  • தகவல் நிறைந்த பேச்சு
    தேவராஜ்ய ஊழியப் பள்ளியிலிருந்து பயனடையுங்கள்
  • இதயத்தைத் தொடுவது
    வாசிப்பதிலும் கற்றுக்கொடுப்பதிலும் முழு மூச்சோடு ஈடுபடுங்கள்
  • நடைமுறைப் பயனைத் தெளிவாகச் சொல்வது
    வாசிப்பதிலும் கற்றுக்கொடுப்பதிலும் முழு மூச்சோடு ஈடுபடுங்கள்
மேலும் பார்க்க
வாசிப்பதிலும் கற்றுக்கொடுப்பதிலும் முழு மூச்சோடு ஈடுபடுங்கள்
th படிப்பு 18 பக். 21

படிப்பு 18

கேட்பவர்களுக்குப் பிரயோஜனமான தகவல்களைச் சொல்வது

வசனம்

1 கொரிந்தியர் 9:19-23

சுருக்கம்: கேட்பவர்களின் சிந்தனையைத் தூண்டுங்கள்; பிரயோஜனமான விஷயங்களைக் கற்றுக்கொண்ட திருப்தி அவர்களுக்குக் கிடைக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள்.

எப்படிச் செய்வது?

  • கேட்பவர்களுக்கு ஏற்கெனவே என்ன தெரியும் என்று யோசித்துப் பாருங்கள். அவர்களுக்குத் தெரிந்த தகவல்களையே திரும்பச் சொல்வதற்குப் பதிலாக, நீங்கள் பேசும் விஷயத்தைப் புதிய கோணத்தில் பார்க்க உதவி செய்யுங்கள்.

    நடைமுறை ஆலோசனை

    கேட்பவர்களுக்கு ஏற்கெனவே தெரிந்த குறிப்புகளைக் கொஞ்சம் வேகமாகச் சொல்லுங்கள்; ஆனால், புதிய குறிப்புகளை நிறுத்தி நிதானமாகச் சொல்லுங்கள்.

  • ஆராய்ச்சி செய்யுங்கள், ஆழ்ந்து யோசியுங்கள். முடிந்தால், கேட்பவர்களுக்கு அவ்வளவாகத் தெரியாத தகவல்களை அல்லது சமீபத்தில் நடந்த சம்பவங்களை உதாரணமாகப் பயன்படுத்தி முக்கியக் குறிப்புகளை விளக்க முயற்சி செய்யுங்கள். நீங்கள் சொல்ல நினைக்கும் உதாரணம், நீங்கள் பேசப்போகும் விஷயத்துக்குப் பொருத்தமாக இருக்கிறதா என்று நன்றாக யோசித்துப் பாருங்கள்.

    நடைமுறை ஆலோசனை

    என்ன பேசலாம் என்று தயாரிக்கும்போது, உங்கள் சிந்தனையைத் தூண்டுவதற்காக, ‘என்ன, ஏன், எப்போது, எங்கே, யார், எப்படி’ என்றெல்லாம் உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள். கேட்பவர்களுக்குச் சலிப்புத்தட்டாமல் இருப்பதற்கு, அவ்வப்போது அவர்களிடம் இந்தக் கேள்விகளில் ஒன்றைக் கேட்டு, அதற்குப் பதிலும் கொடுங்கள்.

  • நீங்கள் சொல்வது எவ்வளவு பிரயோஜனமானது என்பதைக் காட்டுங்கள். பைபிளிலுள்ள குறிப்புகள் அன்றாட வாழ்க்கைக்கு எப்படிப் பிரயோஜனமாக இருக்கும் என்பதை விளக்குங்கள். எந்தெந்த சூழ்நிலைகளையும், மனப்பான்மைகளையும், செயல்களையும் பற்றிப் பேசினால் கேட்பவர்களுக்குப் பிரயோஜனமாக இருக்குமோ அவற்றையே பேசுங்கள்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்