தேவராஜ்ய ஊழியப் பள்ளி மறுபார்வை
அக்டோபர் 31, 2011-ல் துவங்கும் வாரத்தின்போது, பின்வரும் கேள்விகள் தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் கலந்தாலோசிக்கப்படும்.
1. யெகோவாவின் நினைப்பூட்டுதல்களை ஏன் விடாமல் பற்றியிருக்க வேண்டும்? (சங். 119:60, 61) [w00 12/1 பக். 14 பாரா 3]
2. சங்கீதம் 133:1-3-லிருந்து என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம்? [w06 9/1 பக். 16 பாரா 3]
3. யெகோவா எவ்விதத்தில் தாவீதை “ஆராய்ந்து,” அவர் ‘நடந்தாலும் படுத்திருந்தாலும் அவரை சூழ்ந்து அளந்திருந்தார்’? (சங். 139:1, 3; NW) [w06 9/1 பக். 16 பாரா 6; w93 10/1 பக். 11 பாரா 6]
4. யெகோவா தம் ஊழியர்களை எப்படிப்பட்ட கஷ்டங்களின்போது ‘தாங்குகிறார்’ அல்லது ‘தூக்கிவிடுகிறார்’? (சங். 145:14, தி.மொ.) [w04 1/15 பக். 17 பாரா 11]
5. நீதிமொழிகள் 6:12-14-ல் குறிப்பிடப்பட்டுள்ள மனிதன் எப்படிப்பட்ட நடத்தையின் காரணமாக போக்கிரி எனக் கருதப்படுகிறான்? [w00 9/15 பக். 26 பாரா. 5-6]
6. ஞானமுள்ளவர் எவ்வாறு ‘கட்டளைகளை ஏற்றுக்கொள்கிறார்’? (நீதி. 10:8) [w01 7/15 பக். 26 பாரா 1]
7. புண்படுத்தப்படுகையில் அல்லது அநியாயமாக குறைகூறப்படுகையில் ஞானிகளும் மூடர்களும் எப்படி பிரதிபலிக்கிறார்கள்? (நீதி. 12:16) [w03 3/15 பக். 27 பாரா. 3-4]
8. நல்லதையே எதிர்பார்ப்பது ‘நித்திய விருந்தை’ அனுபவிக்க எவ்வாறு வழிவகுக்கும்? (நீதி. 15:15) [w06 7/1 பக். 16 பாரா 6]
9. ‘ஞானத்தைப் பெற்றுக்கொள்வதில்’ என்ன உட்பட்டிருக்கிறது? (நீதி. 19:8) [w99 7/1 பக். 18 பாரா 4]
10. விவேகம் எவ்வாறு உங்கள் வீட்டாருக்கு உதவும்? (நீதி. 24:3) [w06 9/15 பக். 27 பாரா 11; be பக். 32 பாரா 1]