தேவராஜ்ய ஊழியப் பள்ளி மறுபார்வை
ஜூன் 30, 2014-ல் துவங்கும் வாரத்தின்போது, பின்வரும் கேள்விகள் தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் கலந்தாலோசிக்கப்படும்.
பொழுதுபோக்கு விஷயங்களைத் தேர்ந்தெடுக்கையில் யாத்திராகமம் 23:2-ல் உள்ள நியமத்தைச் சிந்திப்பது ஏன் மிகவும் முக்கியம்? [மே 5, காவற்கோபுரம் 11 7/15 பக். 10-11 பாரா. 3-7]
யெகோவாவுக்கு பலிகளைச் செலுத்துவதற்கு முன் குருமார்கள் தங்களைக் கழுவிக்கொள்வது ஏன் மிகவும் முக்கியமாக இருந்தது, இது ஏன் இன்று நமக்கு உறுதியான நினைப்பூட்டுதலாக இருக்கிறது? (யாத். 30:18-21) [மே 19, காவற்கோபுரம் 96 7/1 பக். 9 பாரா 9]
பொன் கன்றுக்குட்டியை செய்ததற்காக ஆரோன் ஏன் தண்டிக்கப்படவில்லை? (யாத். 32:1-8, 25-35) [மே 19, காவற்கோபுரம் 04 3/15 பக். 27 பாரா 4]
மற்ற கடவுட்களை வணங்கியவர்களை திருமணம் செய்ய இஸ்ரவேலர்களுக்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்தச் சட்டம் இன்று கிறிஸ்தவர்களுக்கு எப்படிப் பொருந்துகிறது? (யாத். 34:12-16) [மே 26, காவற்கோபுரம் 90 6/1 பக். 14-15 பாரா. 11-13]
பெசலெயேல், அகோலியாபின் உதாரணம் முக்கியமாக நமக்கு எப்படி உற்சாகத்தை அளிக்கிறது? (யாத். 35:30-35) [மே 26, காவற்கோபுரம் 10 9/15 பக். 10 பாரா 13]
பூர்வ இஸ்ரவேலில், பிரதான ஆசாரியரின் தலைப்பாகையில் தரிக்கப்பட்டிருந்த ‘ஒப்புக்கொடுத்தலின் பரிசுத்த அடையாளம்’ எதை நினைப்பூட்டியது, இந்த அடையாளம் நம் ஒப்புக்கொடுத்தலைப் பற்றி எதைக் கற்றுத்தருகிறது? (யாத். 39:30) [ஜூன் 2, காவற்கோபுரம் 01 2/1 பக். 14 பாரா. 2-3]
உடன் கிறிஸ்தவர் செய்த மோசமான பாவத்தைப் பற்றி தெரிவிப்பது ஏன் முக்கியம்? (லேவி. 5:1) [ஜூன் 9, காவற்கோபுரம் 12 2⁄15 பக். 22 பாரா. 15, 16]
இஸ்ரவேலர்களின் காலத்தில் சமாதான பலிகள் ஏன் முக்கியமாக இருந்தன, இன்று அவை நமக்கு எதைச் சுட்டிக்காட்டுகின்றன? (லேவி. 7:31-33) [ஜூன் 16, காவற்கோபுரம் 12 1/15 பக். 19 பாரா. 11-12]
ஆரோனின் குமாரர்களாகிய நாதாபும் அபியூவும் செய்த பாவத்தில் என்ன உட்பட்டிருக்கலாம்? இதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? (லேவி. 10:1, 2, 9) [ஜூன் 23, காவற்கோபுரம் 04 5/15 பக். 22 பாரா. 6-8]
குழந்தைப்பேறு ஒரு பெண்ணை ஏன் ‘தீட்டுப்படுத்தியது’? (லேவி. 12:2, 5) [ஜூன் 23, காவற்கோபுரம் 04 5/15 பக். 23 பாரா 2]