உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • wp23 எண் 1 பக். 3-4
  • மனநோய்—உலக பிரச்சினை

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • மனநோய்—உலக பிரச்சினை
  • காவற்கோபுரம் யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (பொது)-2023
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • மனதளவில் ஆரோக்கியமாக இருப்பது என்றால் என்ன?
  • மனநோய் என்பது . . .
  • மனநோய்க்கு சிகிச்சை பெறுவது
  • மனநோய் பற்றிய உண்மைகள்
    விழித்தெழு!—2015
  • மனநோயே இல்லாத ஒரு காலம்!
    காவற்கோபுரம் யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (பொது)-2023
  • நீங்கள் நேசிக்கிற ஒருவருக்கு மனநோய் இருக்கையில்
    விழித்தெழு!—2004
  • “மன ஆரோக்கியம் பற்றிய கசப்பான உண்மை”
    விழித்தெழு!—1999
மேலும் பார்க்க
காவற்கோபுரம் யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (பொது)-2023
wp23 எண் 1 பக். 3-4
ஜன்னல் பக்கத்தில் ஒரு பெண் சோர்வாக உட்கார்ந்திருக்கிறார்.

மனநோய்—உலக பிரச்சினை

“நான் என் வீட்டில் உட்கார்ந்திருந்தாலும் எனக்குள்ளே ஒரு விதமான பதட்டம் இருந்துகொண்டே இருக்கும்”

“நான் எப்போதெல்லாம் ஜாலியாக சுறுசுறுப்பாக இருக்கிறேனோ அப்போதெல்லாம் எனக்கு கொஞ்சம் கவலையாகவும் இருக்கும். ஏனென்றால், அடுத்த நிமிஷமே என்னுடைய ‘மூட்’ மாறிவிடும் என்று எனக்கு தெரியும். அப்படியே ஒன்றுமே செய்யாமல், சோகமாக உட்கார்ந்து விடுவேன்.”

“அந்தந்த நாளை பற்றி மட்டும்தான் யோசிக்க வேண்டும் என்று நினைப்பேன். ஆனால், நிறைய விஷயங்களை பற்றிய கவலை மனதுக்குள் ஓட ஆரம்பித்துவிடும்.”

‘இவர்கள் எல்லாரும் என்னை மாதிரியே யோசிக்கிறார்களே’ என்று நீங்கள் நினைக்கிறீர்களா? நீங்களும் மனநோயால் அவதிப்படுகிறீர்களா? அல்லது, மனநோயால் பாதிக்கப்பட்டவர்களை கவனித்துக்கொள்கிறீர்களா?

கவலைப்படாதீர்கள்! உங்களுக்கு மட்டுமல்ல, உலகத்தில் நிறைய பேருக்கு இந்த பிரச்சினை இருக்கிறது.

உண்மைதான், “சமாளிக்க முடியாத அளவுக்கு நிலைமை படுமோசமாக இருக்கும்” ஒரு காலத்தில் நாம் வாழ்கிறோம். (2 தீமோத்தேயு 3:⁠1) ஒரு அறிக்கையின்படி, உலகத்தில் கிட்டத்தட்ட 8 பேரில் ஒருவருக்கு ­மனநோய் இருக்கிறது. கோவிட்-19 பெருந்தொற்றால் நிறைய பேர் மனப்பதற்ற நோயாலும் பயங்கரமான மன அழுத்தத்தாலும் பாதிக்கப்பட்டார்கள் என்று உலக சுகாதார அமைப்பு சொல்கிறது. முன்பு இருந்ததைவிட, 2020-ல் சுமார் 7 கோடியே 80 லட்சம் ஆட்கள் அதிகமாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.

இந்த கணக்கை வைத்து பார்க்கும்போது, நிறைய பேர் மனநோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்று தெரிகிறது. ஆனால், இப்போது கேள்வி என்னவென்றால், உங்களுக்கோ உங்களுக்கு வேண்டியவர்களுக்கோ இந்த பிரச்சினைகள் இருந்தாலும் எப்படி சந்தோஷமாக வாழலாம்?

மனதளவில் ஆரோக்கியமாக இருப்பது என்றால் என்ன?

மனதளவில் ஆரோக்கியமாக இருக்கும் ஒருவர் தன்னை பற்றி நன்றாக உணர்வார். சகஜமாக, இயல்பாக செயல்படுவார். ஒவ்வொரு நாளும் வருகிற பிரச்சினைகளை நன்றாக சமாளிப்பார். சுறுசுறுப்பாக வேலை செய்வார். வாழ்க்கையில் திருப்தியாக இருப்பார்.

மனநோய் என்பது . . .

  • ஒருவருக்கு இருக்கும் பலவீனத்தால் வருவது கிடையாது என்று ஆராய்ச்சிகள் காட்டுகின்றன.

  • நம் உடலை பாதிக்கும் பல விதமான நோய்களை போல, இதுவும் ஒருவிதமான நோய்! இது, பயங்கர மன அழுத்தத்தை ஏற்படுத்தும். ஒரு நபரின் யோசிக்கும் விதத்தையும், உணர்ச்சிகளை கட்டுப்படுத்தும் விதத்தையும், நடந்துகொள்ளும் விதத்தையும் பாதிக்கும்.

  • மற்றவர்களோடு நல்ல நட்பையோ நல்ல உறவையோ வைத்துக்கொள்ள முடியாதபடி செய்துவிடும். தினம் தினம் வாழ்க்கையை ஓட்டுவதே ஒரு பெரிய போராட்டமாக ஆகிவிடும்.

  • வயது, கலாச்சாரம், இனம், நாடு, மதம், கல்வி, பொருளாதார நிலை என்று எந்த வித்தியாசமும் இல்லாமல் யாருக்கு வேண்டுமானாலும் வரலாம்.

படத்தொகுப்பு: 1. ஒரு டீனேஜ் பையன் ரொம்ப சோகமாக இருக்கிறான். 2. சோகமாக இருக்கும் தன் மனைவியை ஒரு கணவர் ஆறுதல்படுத்துகிறார். 3. ஒரு பெண் டாக்டரிடம் பேசிக்கொண்டிருக்கிறார்.

மனநோய்க்கு சிகிச்சை பெறுவது

உங்களிடமோ உங்களுக்கு வேண்டியவர்களிடமோ சில மாற்றங்களை நீங்கள் கவனித்தால், உதாரணத்துக்கு, சுபாவத்தில், தூங்குகிற விதத்தில், சாப்பிடுகிற விதத்தில் ஏதாவது மாற்றங்களை கவனித்தால், மருத்துவ உதவி தேவைப்படலாம் என்பதை புரிந்துகொள்ளுங்கள். அதேபோல், ரொம்ப நாளைக்கு சோகமாக, பதட்டமாக, சோர்வாக இருந்தாலும் மருத்துவரை பார்ப்பது நல்லது. பிரச்சினையின் காரணத்தை கண்டுபிடித்து, எப்படி அதை சரி செய்யலாம் என்று அவர் ஆலோசனை கொடுப்பார்.

“ஆரோக்கியமாக இருக்கிறவர்களுக்கு மருத்துவர் தேவையில்லை, நோயாளிகளுக்குத்தான் தேவை” என்று இதுவரை வாழ்ந்தவர்களிலேயே ஞானமானவராக இருந்த இயேசு கிறிஸ்து சொல்லியிருக்கிறார். (மத்தேயு 9:12) உடம்பு முடியாதவர்கள் மருத்துவ சிகிச்சையை எடுத்துக்கொள்ளும்போது நோயின் பாதிப்புகள் குறையும், சுறுசுறுப்பாகவும் திருப்தியாகவும் வாழ முடியும். நோய்க்கான அறிகுறிகள் அதிகமாகவோ ரொம்ப நாளுக்கோ இருந்தால் மருத்துவ சிகிச்சையை உடனே எடுத்துக்கொள்வதுதான் ஞானமானது.a

பைபிள் ஒரு மருத்துவ புத்தகம் இல்லை என்றாலும், மன ஆரோக்கியத்தை காத்துக்கொள்ள அது நிறைய டிப்ஸ் கொடுக்கிறது. மனநோயால் ஏற்படும் பிரச்சினைகளை சமாளிக்க பைபிள் எப்படி உதவும் என்று தெரிந்துகொள்ள அடுத்து வரும் கட்டுரைகளை தயவுசெய்து பாருங்கள்.

a எந்த ஒரு குறிப்பிட்ட மருத்துவ சிகிச்சையையும் காவற்கோபுர பத்திரிகை சிபாரிசு செய்வது கிடையாது. என்னென்ன சிகிச்சை முறைகள் இருக்கின்றன என்பதை ஒவ்வொருவரும் நன்றாக யோசித்துப்பார்த்து, ஒரு முடிவுக்கு வர வேண்டும்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்