உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • wp23 எண் 1 பக். 8-9
  • 2 | பைபிள் தரும் “ஆறுதல்”

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • 2 | பைபிள் தரும் “ஆறுதல்”
  • காவற்கோபுரம் யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (பொது)-2023
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • இதன் அர்த்தம் என்ன?
  • பைபிளை படிப்பது நமக்கு எப்படி உதவும்?
  • டீனேஜ் பிள்ளைகளுக்கு மனச்சோர்வா?
    விழித்தெழு!—2017
  • மனச்சோர்வுக்கு எதிரான போராட்டத்தில் வெற்றிபெறுதல்
    விழித்தெழு!—1988
  • ‘ஆறுதலின் கடவுள்’ தரும் உதவி
    விழித்தெழு!—2009
  • விரக்தியை விரட்டியடிக்க...
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2011
மேலும் பார்க்க
காவற்கோபுரம் யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (பொது)-2023
wp23 எண் 1 பக். 8-9
வயதான ஒரு நபர் பைபிளை படிக்கிறார். படித்த விஷயங்களை யோசித்து பார்க்கிறார்.

2 | பைபிள் தரும் “ஆறுதல்”

பைபிள் சொல்கிறது: “அன்று எழுதப்பட்ட வேதவசனங்கள் எல்லாம் நமக்கு அறிவுரை கொடுப்பதற்காகவே எழுதப்பட்டன; அவை நமக்கு நம்பிக்கை தருகின்றன. ஏனென்றால், அவை நம்மை ஆறுதல்படுத்துகின்றன, சகித்திருக்க நமக்கு உதவுகின்றன.”—ரோமர் 15:4.

இதன் அர்த்தம் என்ன?

மோசமான எண்ணங்கள் மனதை ஆட்டிப்படைக்கும்போது அதை சமாளிக்க பைபிள் பலம் தரும். ஏனென்றால், பைபிளில் ஆறுதலான வார்த்தைகள் இருக்கின்றன. அதுமட்டுமல்ல, மனதில் எந்த ஒரு வலியோ வேதனையோ இல்லாத காலம் கண்டிப்பாக வரும் என்ற நம்பிக்கையையும் பைபிள் தருகிறது.

பைபிளை படிப்பது நமக்கு எப்படி உதவும்?

நாம் எல்லாருமே சிலசமயங்களில் சோர்ந்துபோய் விடுகிறோம். ஆனால், மன அழுத்தத்தாலோ மனப்பதற்றத்​தாலோ கஷ்டப்படுகிறவர்களுக்கு ஒவ்வொரு நாளை ஓட்டுவதே பெரிய பாடுதான்! அதற்கு பைபிள் எப்படி உதவும்?

  •  மனதில் இருக்கிற கசப்பான எண்ணங்களை தூக்கிப்போட்டுவிட்டு, சந்தோஷமான எண்ணங்களால் நிரப்புவதற்கு பைபிள் உதவும். (பிலிப்பியர் 4:8) பைபிளை படிக்க படிக்க, இதமான இனிமையான எண்ணங்களால் உங்களுடைய மனது நிரம்பும். அது, உணர்ச்சிகளை கட்டுப்படுத்த உதவும்.​—சங்கீதம் 94:​18, 19.

  •  ‘நான் எதற்குமே லாயக்கில்லை’ என்ற எண்ணத்தை மாற்றிக்கொள்ள பைபிள் உதவும்.​—லூக்கா 12:​6, 7.

  •  நாம் தன்னந்தனியாக இல்லை என்பதையும் நம்மை படைத்த கடவுள் நம் உணர்வுகளை முழுமையாக புரிந்துகொள்கிறார் என்பதையும் பைபிள் வசனங்கள் காட்டுகின்றன.​—சங்கீதம் 34:18; 1 யோவான் 3:​19, 20.

  •  மனதில் ஆறாத ரணங்களாக இருக்கும் நினைவுகளை கடவுள் ஆற்றிவிடுவார் என்ற நம்பிக்கையை பைபிள் கொடுக்கிறது. (ஏசாயா 65:17; வெளிப்படுத்துதல் 21:4) ‘வாழவே பிடிக்கவில்லை’ என்று தோன்றுகிறபோது, தொடர்ந்து வாழ்வதற்கான பலத்தை இந்த நம்பிக்கை கொடுக்கிறது.

பைபிள் எப்படி உதவுகிறது ஜசிக்கா சொல்கிறார்...

என்னுடைய பிரச்சினை

ஜெசிக்கா பைபிளை படித்துக்கொண்டே தூங்குகிறார்.

“எனக்கு 25 வயது இருந்தபோது, பயங்கரமான மன அழுத்த நோய் இருப்பதை டாக்டர்கள் கண்டுபிடித்தார்கள். பழைய நினைவுகள் என்னை பாடாக படுத்தியது. அவை திரும்பத் திரும்ப என் கண் முன்னால் வந்தன. வாழ்க்கையில் நடந்த சில கசப்பான சம்பவங்களால்தான் இந்த மாதிரி யோசனைகள் வருகிறது என்றும், அதனால்தான் மன அழுத்தம் ஏற்பட்டிருக்கிறது என்றும் டாக்டர்கள் புரிய வைத்தார்கள். நான் மருந்து மாத்திரை எடுத்துக்கொண்டேன். ஆனால், அதுமட்டும் போதவில்லை. எப்படிப்பட்ட எண்ணங்களை நான் தவிர்க்க வேண்டும் என்பதை கண்டுபிடித்து, அதை சரி செய்ய கவுன்சிலிங் தேவைப்பட்டது.”

பைபிள் எனக்கு எப்படி உதவி செய்கிறது

“மன அழுத்தம் அதிகமாக இருந்த சமயங்களில் காரணமே இல்லாமல் திடீர் திடீரென்று பயம் வரும். நெஞ்சு படபட என்று அடித்துக்கொள்ளும். குப்பென்று வியர்க்கும். ராத்திரியெல்லாம் தூக்கமே வராது. அது இது என கண்டதையும் போட்டு மூளை யோசித்துக்கொண்டே இருக்கும். தலையை பிய்த்துக்கொள்ளலாம் போல இருக்கும். கவலைகள் திணறடிக்கும்போது, கடவுளால் நமக்கு ஆறுதல் தந்து, நம் இதயத்துக்கு இதமளிக்க முடியும் என்று சங்கீதம் 94:19 சொல்கிறது. அதனால், படுக்கைக்கு பக்கத்தில் பைபிளையும் ஒரு நோட்-புக்கையும் வைத்திருக்கிறேன். அதில் ஆறுதலான சில வசனங்களை எழுதி வைத்திருக்கிறேன். தூக்கம் வராத இரவுகளில் அவற்றை படிப்பது மனஅமைதி தருகிறது.

முன்பெல்லாம், ‘நான் எதற்குமே லாயக்கில்லை, மற்றவர்களின் அன்பை சம்பாதிக்க எனக்கு தகுதி இல்லை’ என்று நினைத்துக்கொண்டு இருந்தேன். ஆனால், பைபிளை படித்த பிறகு, அன்பான கடவுள் ஒருவர் இருக்கிறார் என்றும் அவர் ஒரு கரிசனையான அப்பா என்றும் புரிந்துகொண்டேன். தனித்தனியாக ஒவ்வொருவர்மேலும் அவர் அக்கறை வைத்திருக்கிறார். இந்த உண்மைகளை தெரிந்துகொண்ட பிறகு, நான் யோசிக்கும் விதத்தை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று பொறி தட்டியது. அப்படி செய்வதுதான் சரி என்று பைபிளும் சொல்கிறது. அதனால், என்னுடைய யோசனைகள் என்னை கட்டுப்படுத்துவதற்கு பதிலாக, நான் அவற்றை கட்டுப்படுத்த கற்றுக்கொண்டேன். கடவுள் என்னை எப்படி பார்க்கிறாரோ அதேமாதிரி என்னை பார்க்க பழகிக்கொண்டேன். என்னை நானே தாழ்வாக பார்க்காமல் இருப்பதற்கு இதுதான் உதவி செய்தது.

நெஞ்சை புண்ணாக்கிய நினைவுகள் அழிந்துபோகப்போகிற ஒரு காலத்துக்காக நான் காத்திருக்கிறேன். அந்த சமயத்தில், என் மனதை போட்டு வாட்டிய எண்ணங்கள் மறைந்து போயிருக்கும். அப்போது நான் நிம்மதியாக இருப்பேன். மனநோய் என்ற பேச்சுக்கே இடமில்லாத காலம் சீக்கிரத்தில் விடியும் என்று நினைக்கும்போது, இன்றைக்கு இருக்கிற பிரச்சினைகளை சமாளிக்க பலம் கிடைக்கிறது.”

இன்னும் உதவி வேண்டுமா?

அக்டோபர் 2009 விழித்தெழு! பத்திரிகையில் வந்த “‘ஆறுதலின் கடவுள்’ தரும் உதவி” என்ற கட்டுரையை பாருங்கள். இதை jw.org வெப்சைட்டில் பார்க்கலாம்.

சங்கீதம் புத்தகத்தின் ஆடியோ பதிவை jw.org வெப்சைட்டில் கேளுங்கள்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்