பைபிளில் இருக்கும் புதையல்கள்
ஆறுதல் சொல்லும்போது எலிப்பாசைப் போல நடந்துகொள்ளாதீர்கள்
மனிதர்களால் கடவுளைப் பிரியப்படுத்தவே முடியாது என்று யோபுவிடம் எலிப்பாஸ் சொன்னான் (யோபு 15:14-16; w05 9/15 பக். 26 பாரா. 4-5)
யோபு அக்கிரமம் செய்ததால்தான் இவ்வளவு கஷ்டங்களை அனுபவிக்கிறார் என்று எலிப்பாஸ் மறைமுகமாகச் சொன்னான் (யோபு 15:20)
எலிப்பாஸ் சொன்ன வார்த்தைகள் யோபுவுக்கு ஆறுதல் தரவில்லை (யோபு 16:1, 2)
யோபுவிடம் எலிப்பாஸ் சொன்னது சுத்தப் பொய். யெகோவாவுக்கு சேவை செய்வதற்காக நாம் எடுக்கிற முயற்சிகளை அவர் உயர்வாக மதிக்கிறார். (சங். 149:4) நீதிமான்களுக்கும்கூட கஷ்டங்கள் வரும்.—சங். 34:19.
ஆழமாக யோசிக்க: நாம் எப்படி ‘மனச்சோர்வால் வாடுகிறவர்களிடம் ஆறுதலாகப் பேச’ முடியும்?—1 தெ. 5:14; w15 2/15 பக். 9 பாரா. 16.