ஜனவரி 8-14
யோபு 34-35
பாட்டு 30; ஜெபம் | ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)
1. நல்லவர்களுக்கு கெட்டது நடப்பதாக தோன்றினால்...
(10 நிமி.)
யெகோவா ஒருபோதும் அநியாயம் செய்ய மாட்டார் என்பதை மறந்துவிடாதீர்கள் (யோபு 34:10; wp19.1 பக். 8 பாரா 2)
கெட்டவர்கள் தவறு செய்துவிட்டு தண்டனையில் இருந்து தப்பித்துக்கொள்வதாக உங்களுக்குத் தோன்றலாம். ஆனால், யெகோவாவிடமிருந்து அவர்களால் தப்பிக்கவே முடியாது (யோபு 34:21-26; w17.04 பக். 10 பாரா 5)
அநியாயத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ சிறந்த வழி, யெகோவாவைப் பற்றிக் கற்றுக்கொடுப்பதுதான் (யோபு 35:9, 10; மத். 28:19, 20; w21.05 பக். 7 பாரா. 19-20)
2. புதையல்களைத் தோண்டி எடுங்கள்
(10 நிமி.)
யோபு 35:7—‘நீங்கள் நேர்மையாக இருப்பதால் [கடவுளுக்கு] என்ன பிரயோஜனம்?’ என்று யோபுவிடம் எலிகூ கேட்டதன் அர்த்தம் என்ன? (w17.04 பக். 29 பாரா 3)
இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?
3. பைபிள் வாசிப்பு
(4 நிமி.) யோபு 35:1-16 (th படிப்பு 10)
4. பேச்சை ஆரம்பிப்பது
(3 நிமி.) வீட்டுக்கு வீடு ஊழியம். பைபிள் படிப்பைப் பற்றிச் சொல்லுங்கள். (lmd பாடம் 10 குறிப்பு 3)
5. பேச்சை ஆரம்பிப்பது
(4 நிமி.) சந்தர்ப்ப சாட்சி. சின்ன பிள்ளைகள் இருக்கிற ஒருவரிடம், jw.org-ல் பெற்றோருக்கு பிரயோஜனமான தகவல்களை எப்படிக் கண்டுபிடிப்பது என்று காட்டுங்கள். (lmd பாடம் 1 குறிப்பு 4)
6. சீஷர்களை உருவாக்குவது
(5 நிமி.) lff பாடம் 13 குறிப்பு 5 (lmd பாடம் 11 குறிப்பு 3)
பாட்டு 58
7. வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் ‘கடவுளுடைய வார்த்தையைப் பிரசங்கிக்கிறீர்களா?’
(15 நிமி.) கலந்துபேசுங்கள்.
“கடவுளுடைய வார்த்தையைப் பிரசங்கி . . . அவசர உணர்வோடு பிரசங்கி” என்று பவுல் தீமோத்தேயுவிடம் சொன்னார். (2 தீ. 4:2) உயரமான ஒரு இடத்தில் காவலுக்கு நின்றுகொண்டிருக்கும் ஒரு போர்வீரர், ஏதாவது ஆபத்து வரும்போது செயல்பட எப்போதும் தயாராக இருப்பார். இதைக் குறிப்பதற்குத்தான் “அவசர உணர்வோடு” என்று மொழிபெயர்க்கப்பட்ட கிரேக்க வினைச்சொல் சில சமயங்களில் பயன்படுத்தப்பட்டது. அதனால், ஆட்களிடம் சாதாரணமாக பேசிக்கொண்டிருக்கும்போதே சாட்சி கொடுப்பதற்கு நாம் எப்போதும் தயாராக இருக்க வேண்டும் என்பதை இதிலிருந்து புரிந்துகொள்கிறோம்.
யெகோவாமேல் இருக்கும் அன்பும், அவர் நமக்கு செய்த நல்ல விஷயங்களுக்கான நன்றியுணர்வும், அவருடைய அருமையான குணங்களைப் பற்றி மற்றவர்களிடம் சொல்ல நம்மைத் தூண்டுகிறது.
சங்கீதம் 71:8-ஐ வாசியுங்கள். பின்பு இந்தக் கேள்வியைக் கேளுங்கள்:
யெகோவாவைப் பற்றி என்ன நல்ல விஷயங்களை மற்றவர்களிடம் சொல்ல நீங்கள் ஆசைப்படுகிறீர்கள்?
மக்கள்மேல் நமக்கிருக்கும் அன்பு வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் பிரசங்கிக்க நம்மை தூண்டுகிறது.
நூற்றுக்கணக்கான மக்கள் சத்தியத்தைக் கண்டுபிடித்தார்கள்! என்ற வீடியோவைக் காட்டுங்கள். பின்பு இந்தக் கேள்விகளைக் கேளுங்கள்:
ஒருவர் கொடுத்த சந்தர்ப்ப சாட்சியால் நூற்றுக்கணக்கானவர்கள் எப்படி சத்தியத்தைக் கண்டுபிடித்தார்கள்?
முன்னாள் சர்ச் அங்கத்தினர்கள் சத்தியத்தைக் கற்றுக்கொண்டதால் எப்படிப் பயனடைந்தார்கள்?
சந்தர்ப்ப சாட்சி கொடுப்பதற்கான தயக்கத்தை போக்குவதற்கு மக்கள்மேல் நமக்கிருக்கும் அன்பு எப்படி உதவுகிறது?
நாம் சந்தர்ப்ப சாட்சி கொடுப்பது யெகோவாவைப் பற்றி மற்றவர்கள் தெரிந்துகொள்வதற்கான சிறந்த வழி என்று நீங்கள் ஏன் நினைக்கிறீர்கள்?
8. சபை பைபிள் படிப்பு
(30 நிமி.) bt அதி. 4 பக்கம் 33-ல் இருக்கும் பெட்டி