ஜனவரி 15-21
யோபு 36-37
பாட்டு 147; ஜெபம் | ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)
1. என்றென்றும் வாழலாம் என்று கடவுள் கொடுத்த வாக்குறுதியை நீங்கள் ஏன் நம்பலாம்?
(10 நிமி.)
யெகோவா என்றென்றும் வாழ்கிறார் (யோபு 36:26; w15 10/1 பக்.13 பாரா. 1-2)
நம்மை என்றென்றும் வாழ வைக்க யெகோவாவால் முடியும்; அதற்கான ஞானமும் சக்தியும் அவருக்கு இருக்கிறது (யோபு 36:27, 28; w20.05 பக். 22 பாரா 6)
நாம் என்றென்றும் வாழ என்ன செய்ய வேண்டும் என்று யெகோவா சொல்லிக்கொடுக்கிறார் (யோபு 36:4, 22; யோவா. 17:3)
என்றென்றும் வாழ முடியும் என்று கடவுள் கொடுத்த வாக்குறுதியின்மேல் நமக்கிருக்கும் பலமான விசுவாசம், எந்தக் கஷ்டங்கள் வந்தாலும் சமாளிப்பதற்கு சக்தியைக் கொடுக்கிறது.—எபி. 6:19; w22.10 பக். 28 பாரா 16.
2. புதையல்களைத் தோண்டி எடுங்கள்
(10 நிமி.)
யோபு 37:20—பைபிளில் குறிப்பிடப்பட்டுள்ள தேசங்களில் செய்திகளும் தகவல்களும் எப்படித் தெரிவிக்கப்பட்டன? (it-1-E 492)
இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?
3. பைபிள் வாசிப்பு
(4 நிமி.) யோபு 36:1-21 (th படிப்பு 2)
4. பேச்சை ஆரம்பிப்பது
(3 நிமி.) பொது ஊழியம். (lmd பாடம் 3 குறிப்பு 3)
5. மறுபடியும் சந்திப்பது
(4 நிமி.) வீட்டில் சந்திப்பது. (lmd பாடம் 2 குறிப்பு 5)
6. நம்பிக்கைகளை விளக்குவது
(5 நிமி.) பேச்சு. ijwfq 57 பாரா.5-15—பொருள்: நாசி இனப்படுகொலை சமயத்தில் யெகோவாவின் சாட்சிகள் ஏன் துன்புறுத்தப்பட்டார்கள்? (th படிப்பு 18)
பாட்டு 49
7. மருத்துவ உதவி அல்லது அறுவை சிகிச்சை தேவைப்படும் சூழ்நிலைகளில் தயாராக இருங்கள்
(15 நிமி.) கலந்துபேசுங்கள். ஒரு மூப்பர் நடத்துவார்.
இரத்தம் சம்பந்தமாக யெகோவா தந்த சட்டத்துக்கு நாம் கீழ்ப்படிந்து நடப்பதற்காக அவருடைய அமைப்பு நிறைய கருவிகளைக் கொடுத்திருக்கிறது. (அப். 15:28, 29) அவற்றை நீங்கள் நன்றாக பயன்படுத்துகிறீர்களா?
மருத்துவ முன்கோரிக்கை அட்டை (DPA) மற்றும் அடையாள அட்டை (ic): மருத்துவ சிகிச்சையில் இரத்தத்தை பயன்படுத்துவது சம்பந்தமாக நோயாளியின் விருப்பத்தை இந்த அட்டைகள் தெரிவிக்கும். ஞானஸ்நானம் எடுத்த பிரஸ்தாபிகள், பிரசுர ஊழியரிடமிருந்து DPA அட்டையையும் தங்களுடைய சின்னப் பிள்ளைகளுக்காக அடையாள அட்டையையும் (ic) வாங்கிக்கொள்ளலாம். இதை எப்போதும் உங்களோடு வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் இதை பூர்த்தி செய்யாமலோ புதுப்பிக்காமலோ இருந்தால் உடனடியாக அதைச் செய்துவிடுங்கள்.
கர்ப்பிணி தாய்மார்களுக்கான தகவல்கள் (S-401) மற்றும் அறுவை சிகிச்சை அல்லது கீமோதெரபி தேவைப்படுகிற நோயாளிகளுக்கான தகவல்கள் (S-407): மருத்துவ சிகிச்சைக்காக, முக்கியமாக இரத்தம் சம்பந்தமாக வருகிற பிரச்சினைகளுக்காக, நாம் நன்கு தயாராக இருப்பதற்கு இந்த டாக்யூமென்டுகள் உதவுகின்றன. நீங்கள் கர்ப்பமாக இருந்தாலோ... உங்களுக்கு அறுவை சிகிச்சை தேவைப்பட்டாலோ... கேன்சருக்காக நீங்கள் சிகிச்சை எடுக்க வேண்டியிருந்தாலோ, உங்களுக்குத் தேவைப்படும் டாக்யூமென்டின் ஒரு பிரதியை மூப்பர்களிடமிருந்து வாங்கிக்கொள்ளுங்கள்.
மருத்துவமனை தொடர்பு ஆலோசனைக் குழு (HLC): HLC-யில் சேவை செய்யும் மூப்பர்கள், இரத்தம் சம்பந்தமான விஷயங்களைப் பற்றி மருத்துவர்களிடமும் பிரஸ்தாபிகளிடமும் தகவல்களைத் தெரிவிக்க பயிற்சி பெற்றிருக்கிறார்கள். மாற்று மருத்துவ சிகிச்சைகளைக் கொடுப்பது பற்றி உங்கள் டாக்டரிடம் அவர்கள் பேசுவார்கள். தேவைப்பட்டால், ஒத்துழைப்பு கொடுக்கும் டாக்டர்களைக் கண்டுபிடிக்கவும் உதவுவார்கள். நீங்கள் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டிருந்தாலோ, உங்களுக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டியிருந்தாலோ, கேன்சர் சிகிச்சை போல் ஏதாவது சிகிச்சை தேவைப்பட்டாலோ, இரத்தம் சம்பந்தமான பிரச்சினைகள் வராது என்றாலும்கூட HLC-யை உடனடியாக தொடர்புகொள்ளுங்கள். கர்ப்பிணி தாய்மார்களுக்கும் இது பொருந்தும். உங்களுக்கு உதவ 24 மணிநேரமும் HLC சகோதரர்கள் தயாராக இருப்பார்கள். அவர்களை தொடர்புகொள்வதற்கான தகவல்களை மூப்பர்களிடமிருந்து வாங்கிக்கொள்ளுங்கள்.
மருத்துவமனை தொடர்பு ஆலோசனைக் குழுக்கள்—உங்களுக்கு எப்படி உதவி செய்கிறார்கள்? என்ற வீடியோவைக் காட்டுங்கள். பின்பு இந்தக் கேள்வியைக் கேளுங்கள்:
உங்களுக்கு மருத்துவ உதவியோ அறுவை சிகிச்சையோ தேவைப்பட்டால், HLC உங்களுக்கு எப்படி உதவும்?
8. சபை பைபிள் படிப்பு
(30 நிமி.) bt அதி. 4 பாரா. 9-12, பக்கம் 34-ல் இருக்கும் பெட்டி