உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
Tamil (Spoken)
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb24 ஜனவரி பக். 6-7
  • ஜனவரி 22-28

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • ஜனவரி 22-28
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2024
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2024
mwb24 ஜனவரி பக். 6-7

ஜனவரி 22-28

யோபு 38-39

பாட்டு 11; ஜெபம் | ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

1. படைப்புகளை கூர்ந்து கவனிக்க நேரம் ஒதுக்குகிறீர்களா?

(10 நிமி.)

பூமியைப் படைத்த பிறகு, யெகோவா தான் படைத்ததெல்லாம் எப்படி இருக்கிறது என்று பார்ப்பதற்காக நேரம் எடுத்துக்கொண்டார் (ஆதி. 1:10, 12; யோபு 38:5, 6; w21.08 பக். 9 பாரா 7)

யெகோவாவின் படைப்புகளை கூர்ந்து கவனிக்க தேவதூதர்கள் நேரம் ஒதுக்கினார்கள் (யோபு 38:7; w20.08 பக். 14 பாரா 2)

படைப்புகளை கூர்ந்து கவனித்து அதை ரசிப்பதற்கு நாம் நேரம் ஒதுக்கினால் யெகோவாமேல் இருக்கும் நம் நம்பிக்கை பலமாகும் (யோபு 38:32-35; w23.03 பக். 17 பாரா 8)

வீட்டுக்கு வெளியே ஒரு பட்டாம்பூச்சி பறப்பதை ஒரு அம்மாவும் அவருடைய குட்டி மகளும் ரசிக்கிறார்கள்.

2. புதையல்களைத் தோண்டி எடுங்கள்

(10 நிமி.)

  • யோபு 38:8-10—சட்டத்தை ஏற்படுத்துபவரான யெகோவாவைப் பற்றி இந்த வசனங்கள் என்ன சொல்கின்றன? (w02 4/15 பக். 14 பாரா. 4, 5)

  • இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?

3. பைபிள் வாசிப்பு

(4 நிமி.) யோபு 39:1-22 (th படிப்பு 5)

ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்

4. பேச்சை ஆரம்பிப்பது

(2 நிமி.) சந்தர்ப்ப சாட்சி. உங்களிடம் பேச ஒருவருக்கு விருப்பம் இல்லையென்றால், நல்ல விதமாக அந்த உரையாடலை முடித்துக்கொள்ளுங்கள். (lmd பாடம் 2 குறிப்பு 3)

5. மறுபடியும் சந்திப்பது

(5 நிமி.) வீட்டில் சந்திப்பது. முன்பு நீங்கள் இவரை சந்தித்தபோது, அவருடைய அன்பானவர் சமீபத்தில் இறந்துவிட்டதாக சொல்லியிருந்தார். (lmd பாடம் 9 குறிப்பு 3)

6. பேச்சு

(5 நிமி.) lmd இணைப்பு A குறிப்பு 1—பொருள்: இன்று நடக்கும் சம்பவங்களும் மக்களுடைய குணங்களும், ஒரு மாற்றம் சீக்கிரம் வரப்போவதைக் காட்டுகிறது. (th படிப்பு 16)

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

பாட்டு 111

7. படைப்புகள் கற்றுத்தரும் மிக முக்கியமான விஷயங்கள்

(15 நிமி.) கலந்துபேசுங்கள்.

பிரமிக்க வைக்கும் விதத்தில் யெகோவா படைத்திருக்கும் நீர்யானை, நாரை, நெருப்புக்கோழி, முதலை, கழுகு, குதிரை, காட்டு எருது போன்ற சில உயிரினங்களைப் பற்றி யோபு யோசித்துப் பார்க்கிறார். புயல் காற்று அடிக்கிறது. யோபுவுக்கு கொஞ்ச தூரத்தில் எலிகூவும் மூன்று போலி நண்பர்களும் உட்கார்ந்திருக்கிறார்கள்.

யோபுவை சாத்தான் தாக்கியபோதும், அவருடைய மூன்று நண்பர்கள் அநியாயமாக அவரைக் குற்றம்சாட்டிய போதும், யோபு தன்னுடைய பிரச்சினைகளிலேயே மூழ்கிப்போய்விட்டார்.

யோபு 37:14-ஐ வாசியுங்கள். பின்பு இந்தக் கேள்விகளைக் கேளுங்கள்:

மறுபடியும் கடவுளுடன் இருக்கிற பந்தத்தை பலப்படுத்திக்கொள்ள யோபு என்ன செய்ய வேண்டியிருந்தது?

பிரச்சினைகள் நம்மை திணறடிக்கும்போது படைப்புகளைக் கூர்ந்து கவனித்தோம் என்றால், யெகோவா எவ்வளவு உயர்ந்தவர் என்பதைப் புரிந்துகொள்வோம். அவருக்கு உண்மையாக இருக்க வேண்டும் என்ற ஆசை அதிகமாகும். அதோடு, நம்மை கவனித்துக்கொள்வதற்கு அவருக்கு சக்தி இருக்கிறது என்ற நம்பிக்கையும் உறுதியாகும்.—மத். 6:26.

யோபு புத்தகத்திலிருந்து பாடங்கள்—மிருகங்கள் என்ற வீடியோவைக் காட்டுங்கள். பின்பு இந்தக் கேள்வியைக் கேளுங்கள்:

இந்த வீடியோவைப் பார்த்தபோது யெகோவாமேல் உங்களுக்கு இருந்த நம்பிக்கை எப்படிப் பலப்பட்டது?

8. சபை பைபிள் படிப்பு

(30 நிமி.) bt அதி. 4 பாரா. 13-20

முடிவான குறிப்புகள் (3 நிமி.) | பாட்டு 54; ஜெபம்

    தமிழ் (பேச்சு வழக்கு) பிரசுரங்கள் (2022-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • Tamil (Spoken)
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்