உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
Tamil (Spoken)
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb24 ஜனவரி பக். 8-9
  • ஜனவரி 29–பிப்ரவரி 4

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • ஜனவரி 29–பிப்ரவரி 4
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2024
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2024
mwb24 ஜனவரி பக். 8-9

ஜனவரி 29–பிப்ரவரி 4

யோபு 40-42

பாட்டு 124; ஜெபம் | ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

1. யோபுவின் வாழ்க்கையிலிருந்து நாம் கற்றுக்கொள்ளும் பாடங்கள்

(10 நிமி.)

எந்தவொரு விஷயமும் யெகோவாவுக்குத்தான் முழுமையாக தெரியும், உங்களுக்கு எல்லாமே தெரியாது என்பதை மனதில் வையுங்கள் (யோபு 42:1-3; w10 10/15 பக். 3-4 பாரா. 4-6)

யெகோவாவும் அவருடைய அமைப்பும் தருகிற ஆலோசனைகளை முழுமனதோடு ஏற்றுக்கொள்ளுங்கள் (யோபு 42:5, 6; w17.06 பக். 25 பாரா 12)

கஷ்டங்கள் மத்தியிலும் தனக்கு உண்மையாக இருப்பவர்களை யெகோவா ஆசீர்வதிப்பார் (யோபு 42:10-12; யாக். 5:11; w22.06 பக். 25 பாரா.17-18)

யோபுவும் அவருடைய மனைவியும் ஒரு மலையோரமாக நின்றுகொண்டு, சந்தோஷத்தோடு ஒருவரையொருவர் பார்க்கிறார்கள். தங்கள் மந்தைகளையும் வீட்டையும் காட்டியபடி யோபு பேசிக்கொண்டிருக்கிறார்.

உத்தமமாக நடந்த யோபுவை யெகோவா ஆசீர்வதித்தார்

2. புதையல்களைத் தோண்டி எடுங்கள்

(10 நிமி.)

  • யோபு 42:7—யோபுவுடைய மூன்று நண்பர்கள் உண்மையில் யாருக்கு எதிராக பேசினார்கள், இதைத் தெரிந்துவைத்திருப்பது மற்றவர்கள் நம்மை கேலிக் கிண்டல் செய்யும்போது சகித்திருக்க எப்படி உதவும்? (it-2-E 808)

  • இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?

3. பைபிள் வாசிப்பு

(4 நிமி.) யோபு 42:1-17 (th படிப்பு 11)

ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்

4. பேச்சை ஆரம்பிப்பது

(3 நிமி.) வீட்டுக்கு வீடு ஊழியம். கிறிஸ்தவராக இல்லாத ஒருவரை சந்திக்கிறீர்கள். (lmd பாடம் 5 குறிப்பு 3)

5. சீஷர்களை உருவாக்குவது

(5 நிமி.) lff பாடம் 13 குறிப்புகள் 6-7 மற்றும் “சிலர் இப்படிச் சொல்கிறார்கள்” (lmd பாடம் 11 குறிப்பு 4)

6. பேச்சு

(4 நிமி.) lmd இணைப்பு A குறிப்பு 2—பொருள்: பூமி அழியவே அழியாது. (th படிப்பு 13)

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

பாட்டு 108

7. யெகோவாவின் அன்பை ருசிக்க மற்றவர்களுக்கு உதவுங்கள்

(15 நிமி.) கலந்துபேசுங்கள்.

“‏கிறிஸ்தவ அன்பை யெகோவாவுடைய குடும்பத்தில் கண்டுபிடித்தோம்” என்ற வீடியோவில் இருக்கும் ஒரு காட்சி. மருத்துவமனையில் இருக்கிற ஒரு சகோதரிக்கு மீமீயும் அவளுடைய அம்மாவும் பூக்களையும் கார்டையும் கொண்டுவருகிறார்கள்.

அன்பே உருவான கடவுளை வணங்குவது நமக்கு ரொம்ப சந்தோஷத்தை தருகிறது. (1 யோ. 4:8, 16) யெகோவாவுடைய அருமையான குணங்களை தெரிந்துகொண்டதால், அவருடைய நண்பராவதற்கும் அவரிடம் நெருங்கிப் போவதற்கும் நாம் விரும்புகிறோம். யெகோவாவுடைய ஊழியர்களாக இருப்பதால், நாம் அனைவரும் யெகோவாவுடைய அன்பை ருசிக்கிறோம்.

நம்முடைய குடும்பத்தாரிடமும், சகோதர சகோதரிகளிடமும், மற்றவர்களிடமும் நாம் நடந்துகொள்கிற விதத்தின் மூலம் யெகோவா காட்டுகிற அதே அன்பை காட்டுவதற்கு முயற்சி செய்கிறோம். (யோபு 6:14; 1 யோ. 4:11) இப்படி நாம் அன்பைக் காட்டும்போது யெகோவாவைப் பற்றி தெரிந்துகொள்வதற்கும் அவரிடம் நெருங்கி வருவதற்கும் மற்றவர்களுக்கு உதவி செய்கிறோம். ஆனால் நாம் மற்றவர்களிடம் அன்பு காட்டவில்லை என்றால், யெகோவா தங்களை நேசிக்கிறார் என்பதை அவர்களால் புரிந்துகொள்ளவே முடியாது.

கிறிஸ்தவ அன்பை யெகோவாவுடைய குடும்பத்தில் கண்டுபிடித்தோம் என்ற வீடியோவைக் காட்டுங்கள். பின்பு இதைக் கேளுங்கள்:

அன்பு காட்டுவது எவ்வளவு முக்கியம் என்பதைப் பற்றி லைய் லைய் மற்றும் மீமீவுடைய அனுபவத்திலிருந்து என்ன கற்றுக்கொண்டீர்கள்?

யெகோவாவுடைய அன்பை ருசிக்க நம்முடைய சகோதர சகோதரிகளுக்கு எப்படி உதவலாம்?

  • யெகோவாவுடைய மந்தையில் இருக்கிற விலைமதிப்புள்ள ஆடுகளாக அவர்களைப் பாருங்கள்.—சங். 100:3

  • உற்சாகப்படுத்துகிற விதத்தில் அவர்களிடம் பேசுங்கள்.—எபே. 4:29.

  • அவர்களுடைய உணர்ச்சிகளைப் புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள்.—மத். 7:11, 12

8. சபை பைபிள் படிப்பு

(30 நிமி.) bt அதி. 5 பாரா. 1-8, பக்கம் 39-ல் இருக்கும் பெட்டி

முடிவான குறிப்புகள் (3 நிமி.) | பாட்டு 126; ஜெபம்

    தமிழ் (பேச்சு வழக்கு) பிரசுரங்கள் (2022-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • Tamil (Spoken)
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்