பிப்ரவரி 5-11
சங்கீதம் 1-4
பாட்டு 150; ஜெபம் | ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)
1. யெகோவாவுடைய அரசாங்கத்துக்கு ஆதரவு கொடுங்கள்
(10 நிமி.)
[சங்கீதம் புத்தகத்துக்கு அறிமுகம் என்ற வீடியோவைக் காட்டுங்கள்.]
மனித அரசாங்கங்கள் கடவுளுடைய அரசாங்கத்தின் எதிரிகளாக ஆகிவிட்டன (சங். 2:2; w21.09 பக். 15 பாரா 8)
கடவுளுடைய அரசாங்கத்தின் பக்கம் நிற்பார்களா என்பதை முடிவுசெய்வதற்கு எல்லா மக்களுக்கும் யெகோவா கொஞ்சம் காலம் கொடுத்திருக்கிறார் (சங். 2:10-12)
உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘எப்படிப்பட்ட பிரச்சினையை நான் சந்திக்க வேண்டியிருந்தாலும் சரி, அரசியலை எந்த விதத்திலும் ஆதரிக்க மாட்டேன் என்று உறுதியாக இருக்கிறேனா?’—w16.04 பக். 29 பாரா 11.
2. புதையல்களைத் தோண்டி எடுங்கள்
(10 நிமி.)
சங். 1:4—பொல்லாதவர்கள் எப்படி, “காற்றில் அடித்துக்கொண்டு போகப்படுகிற பதரைப் போல்” இருக்கிறார்கள்? (it-1-E 425)
இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?
3. பைபிள் வாசிப்பு
(4 நிமி.) சங். 3:1–4:8 (th படிப்பு 12)
4. இயல்பு—பிலிப்பு என்ன செய்தார்
(7 நிமி.) கலந்துபேசுங்கள். வீடியோவைக் காட்டுங்கள், அதன் பின்பு, lmd பாடம் 2 குறிப்புகள் 1-2-ஐக் கலந்துபேசுங்கள்.
5. இயல்பு—பிலிப்பு மாதிரி நடந்துகொள்ளுங்கள்
(8 நிமி.) lmd பாடம் 2 குறிப்புகள் 3-5-ஐயும் “இதையும் பாருங்கள்” பகுதியையும் கலந்துபேசுங்கள்.
பாட்டு 32
6. சபைத் தேவைகள்
(15 நிமி.)
7. சபை பைபிள் படிப்பு
(30 நிமி.) bt அதி. 5 பாரா. 9-15, பக்கம் 41-ல் இருக்கும் பெட்டி