உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
Tamil (Spoken)
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb24 ஜூலை பக். 8-9
  • ஜூலை 29–ஆகஸ்ட் 4

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • ஜூலை 29–ஆகஸ்ட் 4
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2024
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2024
mwb24 ஜூலை பக். 8-9

ஜூலை 29–ஆகஸ்ட் 4

சங்கீதம் 69

பாட்டு 13; ஜெபம் | ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

வியாபாரிகளையும் அவர்களுடைய மிருகங்களையும் ஆலயத்திலிருந்து இயேசு துரத்துகிறார்.

1. சங்கீதம் 69-ல் சொல்லியிருக்கும் விஷயங்கள் இயேசுவின் வாழ்க்கையில் எப்படி நிறைவேறின?

(10 நிமி.)

காரணமே இல்லாமல் இயேசுவை வெறுத்தார்கள் (சங் 69:4; யோவா 15:24, 25; w11 8/15 பக். 11 பாரா 17)

யெகோவாவுடைய வீட்டின்மேல் இயேசு பக்திவைராக்கியத்தைக் காட்டினார் (சங் 69:9; யோவா 2:13-17; w10 12/15 பக். 8 பாரா. 7-8)

தாங்க முடியாத வேதனையை இயேசு அனுபவித்தார், அவருக்குக் கசப்புப் பொருள் கலந்த திராட்சமதுவைக் குடிக்கக் கொடுத்தார்கள் (சங் 69:20, 21; மத் 27:34; லூ 22:44; யோவா 19:34; g95 10/22 பக். 31 பாரா 4; it-2-E பக். 650)


யோசித்துப் பாருங்கள்: எபிரெய வேதாகமத்தில் மேசியாவைப் பற்றிய தீர்க்கதரிசனங்களை யெகோவா ஏன் சொல்லியிருக்கிறார்?

2. புதையல்களைத் தோண்டி எடுங்கள்

(10 நிமி.)

  • சங் 69:30, 31—நாம் இன்னும் நன்றாக ஜெபம் செய்ய இந்த வசனங்கள் நமக்கு எப்படி உதவி செய்யும்? (w99 1/15 பக். 18 பாரா 11)

  • இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?

3. பைபிள் வாசிப்பு

(4 நிமி.) சங் 69:1-25 (th படிப்பு 2)

ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்

4. பொறுமை—இயேசு என்ன செய்தார்?

(7 நிமி.) கலந்துபேசுங்கள். வீடியோவைக் காட்டுங்கள். பிறகு, lmd பாடம் 8 குறிப்புகள் 1-2-ஐக் கலந்துபேசுங்கள்.

5. பொறுமை—இயேசு மாதிரி நடந்துகொள்ளுங்கள்

(8 நிமி.) lmd பாடம் 8 குறிப்புகள் 3-5-ஐயும் “இதையும் பாருங்கள்” பகுதியையும் கலந்துபேசுங்கள்.

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

பாட்டு 134

6. சபை தேவைகள்

(5 நிமி.)

7. குடும்ப வழிபாட்டுக்கு சில ஆலோசனைகள்

(10 நிமி.) கலந்துபேசுங்கள்.

படங்களின் தொகுப்பு: 1. குடும்ப வழிபாட்டுக்காக ஒரு அப்பா முன்கூட்டியே தயாரிக்கிறார். 2. பிற்பாடு, அவர் தன் மனைவியோடும் மூன்று மகள்களோடும் குடும்ப வழிபாட்டை நடத்துகிறார்.

ஜனவரி 2009-லிருந்து, வாரநாளில் நடந்த தேவராஜ்ய ஊழியப் பள்ளி மற்றும் ஊழியக் கூட்டத்தோடு சபை புத்தகப் படிப்பு இணைக்கப்பட்டது. இதனால், ஒவ்வொரு வாரமும் ஒருநாள் சாயங்காலத்தில் குடும்ப வழிபாட்டை நடத்த குடும்பங்களுக்கு நேரம் கிடைத்தது. யெகோவாவிடமும் குடும்பத்தில் உள்ள மற்றவர்களிடமும் நெருங்கிப்போக இந்த மாற்றம் உதவி செய்திருப்பதால் இதற்கு நிறையப் பேர் நன்றி சொல்லியிருக்கிறார்கள்.—உபா 6:6, 7.

குடும்ப வழிபாட்டைத் தவறாமலும் பிரயோஜனமான விதத்திலும் நடத்த குடும்பத் தலைவர்களுக்கு உதவும் சில ஆலோசனைகளைப் பார்க்கலாம்.

  • தவறாமல் நடத்துங்கள். முடிந்தால், ஒவ்வொரு வாரமும் குடும்ப வழிபாட்டை எப்போது நடத்தலாம் என்று முன்பே முடிவு செய்யுங்கள். அப்படி நீங்கள் முடிவு செய்த நாளில் அல்லது நேரத்தில் படிப்பை நடத்த முடியாமல் போனால் வேறொரு சமயத்தில் நடத்த தயாராக இருங்கள்

  • தயாரியுங்கள். என்ன படிக்கலாம் என்று உங்கள் மனைவியிடமும் அவ்வப்போது உங்கள் பிள்ளைகளிடமும் கேளுங்கள். தயாரிப்பதற்கு ரொம்ப நேரம் எடுக்க வேண்டிய அவசியமில்லை, அதுவும் ஒவ்வொரு வாரமும் ஒரே மாதிரியான விஷயங்களைச் செய்வது குடும்பத்தில் இருப்பவர்களுக்குப் பிடித்திருந்தால்!

  • உங்கள் குடும்பத்தின் தேவைகளுக்கு ஏற்ற மாதிரி மாற்றிக்கொள்ளுங்கள். பிள்ளைகள் வளர வளர, அவர்களுடைய தேவைகளும் திறமைகளும் மாறும். உங்கள் குடும்பத்தில் இருக்கிற ஒவ்வொருவரும் யெகோவாவிடம் நெருங்கிப்போக குடும்ப வழிபாடு உதவி செய்ய வேண்டும்

  • அன்பான, அமைதியான சூழல் இருக்கும்படி பார்த்துக்கொள்ளுங்கள். சில சமயங்களில், வானிலை நன்றாக இருந்தால் வெளியே போய்ப் படிக்க முடியுமா என்று யோசித்துப் பாருங்கள். தேவைப்படும்போது, குட்டி குட்டி பிரேக் எடுத்துக்கொள்ளுங்கள். உங்கள் பிள்ளைகளுக்கு இருக்கும் சில பிரச்சினைகளைப் பற்றி நீங்கள் கலந்துபேசலாம். ஆனால், குடும்ப வழிபாட்டு நேரத்தை அவர்களைத் திட்டுவதற்கோ கண்டிப்பதற்கோ பயன்படுத்தாதீர்கள்

  • வேறு வேறு விஷயங்களைச் செய்யுங்கள். உதாரணத்துக்கு, கூட்டத்தில் படிக்கப்போகும் ஒரு பகுதியைத் தயாரிக்கலாம், jw.org-ல் ஒரு வீடியோவைப் பார்த்துவிட்டு அதைப் பற்றிக் கலந்துபேசலாம், ஊழியத்தில் எப்படிப் பேசலாம் என்று பழகிப் பார்க்கலாம். குடும்ப வழிபாட்டில், கலந்துபேசுவதற்குத்தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றாலும், கொஞ்ச நேரத்துக்குத் தனிப்பட்ட படிப்பும் படிக்கலாம்

இந்தக் கேள்வியைக் கலந்துபேசுங்கள்:

  • உங்களுடைய குடும்ப வழிபாட்டில் இதையெல்லாம் செய்து பார்த்திருக்கிறீர்களா? எப்படி?

8. சபை பைபிள் படிப்பு

(30 நிமி.) bt அதி. 13 பாரா. 8-16, பக். 105-ன் பெட்டி

முடிவான குறிப்புகள் (3 நிமி.) | பாட்டு 114; ஜெபம்

    தமிழ் (பேச்சு வழக்கு) பிரசுரங்கள் (2022-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • Tamil (Spoken)
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்