உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
Tamil (Spoken)
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • mwb24 ஜூலை பக். 10-16
  • ஆகஸ்ட் 5-11

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • ஆகஸ்ட் 5-11
  • நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2024
நம் கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும்—பயிற்சி புத்தகம்—2024
mwb24 ஜூலை பக். 10-16

ஆகஸ்ட் 5-11

சங்கீதம் 70-72

பாட்டு 59; ஜெபம் | ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

1. கடவுளுடைய வல்லமையைப் பற்றி ‘அடுத்த தலைமுறைக்குச் சொல்லுங்கள்’

(10 நிமி.)

சிறுவயதில் யெகோவாவின் பாதுகாப்பை தாவீது அனுபவித்தார் (சங் 71:5; w99 9/1 பக். 18 பாரா 17)

வயதான காலத்தில் தாவீதுக்கு யெகோவா ஆதரவாக இருந்தார் (சங் 71:9; g04 11/8 பக். 17 பாரா 3)

தன்னுடைய அனுபவத்தைச் சொல்லி இளம் பிள்ளைகளை தாவீது உற்சாகப்படுத்தினார் (சங் 71:17, 18; w14 1/15 பக். 23 பாரா. 4-5)

போன வாரம் நாம் பார்த்த “குடும்ப வழிபாட்டுக்கு சில ஆலோசனைகள்” பகுதியில் காட்டப்பட்ட குடும்பத்தார். அவர்கள் தங்களுடைய குடும்ப வழிபாட்டுக்கு வயதான ஒரு தம்பதியை அழைத்திருக்கிறார்கள். அந்தத் தம்பதி போட்டோக்களைக் காட்டி, அனுபவங்களைச் சொல்கிறார்கள். அதை அந்தக் குடும்பத்தார் சந்தோஷமாகக் கேட்கிறார்கள்.

உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘என்னுடைய சபையில் ரொம்ப காலமாக யெகோவாவுக்கு சேவை செய்யும் யாரை என்னுடைய குடும்ப வழிபாட்டில் நான் பேட்டி எடுக்க ஆசைப்படுகிறேன்?’

2. புதையல்களைத் தோண்டி எடுங்கள்

(10 நிமி.)

  • சங் 72:8, அடிக்குறிப்பு—ஆதியாகமம் 15:18-ல் யெகோவா ஆபிரகாமுக்குக் கொடுத்த வாக்குறுதி சாலொமோன் ராஜாவுடைய ஆட்சியில் எப்படி நிறைவேறியது? (it-1-E பக். 768)

  • இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?

3. பைபிள் வாசிப்பு

(4 நிமி.) சங் 71:1-24 (th படிப்பு 5)

ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்

4. பேச ஆரம்பிப்பது

(3 நிமி.) வீட்டுக்கு வீடு ஊழியம். உங்களோடு வாக்குவாதம் செய்ய ஆரம்பிக்கும் ஒருவரிடம் நல்ல முறையில் பேச்சை முடியுங்கள். (lmd பாடம் 4 குறிப்பு 5)

5. மறுபடியும் சந்திப்பது

(4 நிமி.) சந்தர்ப்ப சாட்சி. முன்பு நீங்கள் பேசியபோது பைபிள் படிப்பை ஏற்றுக்கொள்ள தயங்கிய உங்கள் சொந்தக்காரரிடம் இப்போது தொடர்ந்து பேசுங்கள். (lmd பாடம் 8 குறிப்பு 4)

6. நம்பிக்கைகளை விளக்குவது

(5 நிமி.) பேச்சு. ijwfq 49—பொருள்: தங்களுடைய சில நம்பிக்கைகளை யெகோவாவின் சாட்சிகள் ஏன் மாற்றியிருக்கிறார்கள்? (th படிப்பு 17)

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

பாட்டு 76

7. குடும்ப வழிபாட்டை நடத்த சில ஐடியாக்கள்

(15 நிமி.) கலந்துபேசுங்கள்.

முன்பு காட்டப்பட்ட குடும்பத்தார் எழுந்து நின்று ஒரு ராஜ்ய பாடலைப் பாடிப் பழகுகிறார்கள்.
அந்தக் குடும்பத்தார் JW பிராட்காஸ்டிங் நிகழ்ச்சியைப் பார்க்கிறார்கள்.
குடும்ப வழிபாட்டில் ஒத்திகை செய்யும்போது ஒரு மகள் தன் அம்மாவுக்குப் பதில் சொல்கிறாள்.

‘யெகோவா சொல்கிற விதத்தில் கண்டித்து, அவர் தருகிற புத்திமதியை’ பிள்ளைகளுக்குக் கற்றுக்கொடுக்க குடும்ப வழிபாடு ஒரு அருமையான நேரம். (எபே 6:4) கற்றுக்கொள்வதற்கு முயற்சி தேவை. அதேசமயம், அதில் சந்தோஷம் கிடைக்கும். அதுவும், பிள்ளைகள் பைபிள் உண்மைகளைக் கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆசையை வளர்த்துக்கொள்ளும்போது கண்டிப்பாக சந்தோஷம் கிடைக்கும். (யோவா 6:27; 1பே 2:2) “குடும்ப வழிபாட்டுக்கு ஐடியாக்கள்” என்ற பெட்டியில் இருக்கும் குறிப்புகளைக் கலந்துபேசுங்கள். குடும்ப வழிபாட்டைப் பிரயோஜனமாகவும் சந்தோஷமாகவும் நடத்த இந்தக் குறிப்புகள் பெற்றோர்களுக்கு உதவி செய்யும். பிறகு, இந்தக் கேள்விகளைக் கேளுங்கள்:

  • இதில் எந்தக் குறிப்பை நீங்கள் பயன்படுத்த ஆசைப்படுகிறீர்கள்?

  • வேறு ஏதாவது ஐடியா உங்களுக்குப் பிரயோஜனமாக இருந்திருக்கிறதா?

குடும்ப வழிபாட்டுக்கு ஐடியாக்கள்

பைபிள்:

  • அந்தந்த வாரத்துக்கான பைபிள் வாசிப்பு பகுதியை ஆடியோவில் கேளுங்கள் அல்லது எல்லாரும் மாறி மாறி சத்தமாக வாசியுங்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு பைபிள் கதாபாத்திரம் சொன்னதை வாசிக்கலாம்

  • பைபிள் வாசிப்பு பகுதியைப் பயன்படுத்தி கேள்விகளைத் தயாரியுங்கள். ஒவ்வொருவரும் ஒரு கேள்வியை ஆராய்ச்சி செய்துவிட்டு, கற்றுக்கொண்ட விஷயங்களைச் சொல்லலாம்

  • ஒரு கேள்வியைக் கேளுங்கள் அல்லது ஒரு சூழ்நிலையை விவரியுங்கள். அதற்குப் பொருந்தும் பைபிள் நியமங்களை, வாழ்க்கைக்கு வழிகாட்டும் வசனங்கள் புத்தகத்தில் கண்டுபிடியுங்கள்

  • பைபிளில் இருக்கும் ஒரு பதிவை நடித்துப் பாருங்கள்

  • ஒவ்வொரு வாரமும் ஒரு பைபிள் வசனத்தை ஒரு அட்டையில் எழுதுங்கள். உதாரணத்துக்கு, அன்பு காட்டுங்கள்—சீஷராக்குங்கள் சிற்றேட்டின் இணைப்பு A-ல் இருக்கும் ஒரு வசனத்தை எழுதுங்கள். அதை மனப்பாடம் செய்யுங்கள். முந்தின வாரங்களில் எழுதிய வசனங்களை மறுபடியும் எடுத்துப் பாருங்கள்

  • இன்றும் என்றும் சந்தோஷம்! புத்தகத்திலிருந்து ஒரு பகுதியைப் படியுங்கள்

  • jw.org-ல் பைபிள் போதனைகள் என்ற பகுதியில் “பைபிள் கேள்விகளுக்கான பதில்கள்” அல்லது “பைபிள் வசனங்களின் விளக்கம்” என்ற பக்கத்திலுள்ள ஒரு கட்டுரையைப் பற்றி ஒருவர் விளக்கலாம். அதை யார் விளக்க வேண்டும் என்று முன்பே சொல்லிவிடுங்கள்

கூட்டங்கள்:

  • சபைக் கூட்டத்தில் படிக்கப்போகும் ஒரு பகுதியைத் தயாரியுங்கள்

  • பதில்களைத் தயாரித்து அதைச் சொல்லிப் பாருங்கள். நேரத்துக்குள் சொல்ல முடிகிறதா என்று பாருங்கள்

  • பாடல்களைப் பாடிப் பழகுங்கள்

  • அடுத்து வரும் கூட்டத்துக்கு முன்பு அல்லது பின்பு யாராவது ஒருவரை எப்படி உற்சாகப்படுத்தலாம் என்று முன்பே கலந்துபேசுங்கள், அதைப் பேசிப் பழகுங்கள்

  • நீங்கள் செய்யப்போகும் மாணவர் நியமிப்பை உங்கள் குடும்பத்துக்கு முன் செய்து காட்டுங்கள்

ஊழியம்:

  • வீட்டுக்கு வீடு ஊழியத்துக்குத் தயாரியுங்கள்

  • மறுசந்திப்புகளுக்குத் தயாரியுங்கள்

  • சந்தர்ப்ப சாட்சி கொடுப்பதுபோல் கற்பனை செய்துகொண்டு நட்பாக எப்படிப் பேச்சை ஆரம்பிக்கலாம் என்று பழகிப் பாருங்கள்

  • ஸ்கூலிலோ ஆபீஸிலோ விடுமுறை கிடைக்கும் சமயத்தில் அல்லது நினைவுநாள் சமயத்தில் அதிகமாக ஊழியம் செய்ய என்னென்ன குறிக்கோள்களை வைக்கலாம் என்று கலந்துபேசுங்கள்

குடும்பத்தின் தேவைகள்:

  • குடும்பத்தில் இருப்பவர்களுக்கு இதுவரை வந்திருக்கிற அல்லது இனி வர வாய்ப்பிருக்கிற சில பிரச்சினைகளை, உதாரணத்துக்கு நடுநிலையாக இருப்பது, வம்பு பண்ணுகிறவர்களைச் சமாளிப்பது, காதலிப்பது, அல்லது கொண்டாட்டங்களில் கலந்துகொள்வது சம்பந்தமான பிரச்சினைகளை, எப்படிக் கையாளலாம் என்று ஒத்திகை பாருங்கள்

  • தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு விஷயத்தைப் பற்றி பிள்ளைகள் ஆராய்ச்சி செய்து அதைப் பெற்றோர்களுக்கு விளக்கலாம். அப்போது பிள்ளைகள் பெற்றோர்களாகவும் பெற்றோர்கள் பிள்ளைகளாகவும் நடிக்கலாம்

இன்னும் சில ஐடியாக்கள்:

  • JW பிராட்காஸ்டிங் நிகழ்ச்சியைப் பார்த்து அதைப் பற்றிக் கலந்துபேசுங்கள்

  • jw.org-ல் இருக்கும் ஒரு கட்டுரையைப் படித்துவிட்டு அல்லது ஒரு வீடியோவைப் பார்த்துவிட்டு கலந்துபேசுங்கள்

  • jw.org-ல் பைபிள் போதனைகள் என்ற பகுதியில் இருக்கும் “டீனேஜர்கள், இளைஞர்கள்” அல்லது “பிள்ளைகள்” என்ற பக்கத்திலுள்ள ஒரு பயிற்சியை அல்லது வேறு ஏதாவது ஒன்றைப் பயன்படுத்துங்கள்

  • மாநாட்டில் எடுத்த குறிப்புகளை மறுபார்வை செய்யுங்கள்

  • படைப்பில் இருக்கும் ஏதாவது ஒரு விஷயத்தைக் கவனியுங்கள் அல்லது ஆராய்ச்சி செய்யுங்கள். அதிலிருந்து யெகோவாவைப் பற்றி என்ன கற்றுக்கொண்டீர்கள் என்று கலந்துபேசுங்கள்

  • உங்கள் குடும்ப வழிபாட்டுக்கு அவ்வப்போது வேறு ஒருவரையும் அழைத்து, அவரைப் பேட்டி எடுங்கள்

  • யெகோவாவோடு இருக்கும் பந்தத்தைப் பலப்படுத்த சில குறிக்கோள்களை வையுங்கள், அதை எப்படி அடையலாம் என்று கலந்துபேசுங்கள்

  • சில வரைபடங்களையோ, மாதிரிகளையோ, அட்டவணைகளையோ சேர்ந்து தயாரியுங்கள்

உங்கள் குடும்ப வழிபாட்டைத் தொடர்ந்து அழகாக்குங்கள் என்ற வீடியோவைக் காட்டுங்கள். பிறகு இப்படிக் கேளுங்கள்:

  • பிள்ளைகள் இல்லாத வீட்டில், குடும்ப வழிபாட்டை மனைவி சந்தோஷமாக அனுபவிக்கிற விதத்தில் கணவர் எப்படி நடத்தலாம்?

8. சபை பைபிள் படிப்பு

(30 நிமி.) bt அதி. 13 பாரா. 17-24

முடிவான குறிப்புகள் (3 நிமி.) | பாட்டு 123; ஜெபம்

    தமிழ் (பேச்சு வழக்கு) பிரசுரங்கள் (2022-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • Tamil (Spoken)
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்