டிசம்பர் 8-14
ஏசாயா 6-8
பாட்டு 75; ஜெபம் | ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)
1. “இதோ, நான் இருக்கிறேன்! என்னை அனுப்புங்கள்!”
(10 நிமி.)
யெகோவாவின் தீர்க்கதரிசியாக சேவை செய்ய, ஏசாயா கொஞ்சம்கூட தயங்காமல் உடனே முன்வந்தார் (ஏசா 6:8; ip-1 பக். 94-95 பாரா. 13-14)
ரொம்ப கஷ்டமான ஒரு நியமிப்பு ஏசாயாவுக்குக் கிடைத்தது (ஏசா 6:9, 10; ip-1 பக். 95-96 பாரா. 15-16)
ஏசாயா சொன்னதை நிறைய பேர் கேட்காதது போலவே, இயேசு சொன்னதையும் நிறைய பேர் கேட்கவில்லை (மத் 13:13-15; ip-1 பக். 99 பாரா 23)
யோசித்துப் பாருங்கள்: ஏசாயாவைப் போலவே நான் எப்படி முன்வந்து மனப்பூர்வமாக சேவை செய்யலாம்?
2. புதையல்களைத் தோண்டி எடுங்கள்
(10 நிமி.)
ஏசா 7:3, 4—கெட்ட ராஜாவான ஆகாஸை யெகோவா ஏன் காப்பாற்றினார்? (w06 12/1 பக். 9 பாரா 4)
இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?
3. பைபிள் வாசிப்பு
(4 நிமி.) ஏசா 8:1-13 (th படிப்பு 5)
4. பேச ஆரம்பிப்பது
(3 நிமி.) வீட்டுக்கு வீடு ஊழியம். அன்பு காட்டுங்கள் சிற்றேட்டின் இணைப்பு A-ல் இருக்கும் ஏதாவது ஒரு உண்மையைப் பற்றிப் பேசுங்கள். (lmd பாடம் 4 குறிப்பு 5)
5. மறுபடியும் சந்திப்பது
(4 நிமி.) வீட்டுக்கு வீடு ஊழியம். வீட்டுக்கு வீடு ஊழியத்தில் பார்த்த ஒருவரை மறுபடியும் சந்தித்து, பைபிள் படிப்பைப் பற்றிச் சொல்லுங்கள். (lmd பாடம் 9 குறிப்பு 3)
6. மறுபடியும் சந்திப்பது
(5 நிமி.) வீட்டுக்கு வீடு ஊழியம். வீட்டுக்கு வீடு ஊழியத்தில் பார்த்த ஒருவரை மறுபடியும் சந்தித்து, பைபிள் படிப்பு எப்படி இருக்கும் என்று நடத்திக் காட்டுங்கள். (lmd பாடம் 9 குறிப்பு 5)
பாட்டு 83
7. வீட்டுக்கு வீடு ஊழியம்—நம் அடையாளம்
(15 நிமி.) கலந்துபேசுங்கள்.
இயேசுவையும் முதல் நூற்றாண்டு கிறிஸ்தவர்களையும் போலவே, நாமும் வீட்டுக்கு வீடு ஊழியம் செய்கிறோம். (லூ 10:5; அப் 5:42) இதுதான் நம் அடையாளம்!
கோவிட் பெருந்தொற்று சமயத்தில் நம்மால் வீட்டுக்கு வீடு ஊழியம் செய்ய முடியவில்லை. ஆனாலும், மக்களுக்கு நல்ல செய்தியைச் சொல்வதற்காக நாம் சந்தர்ப்ப சாட்சி கொடுத்தோம், கடிதம் மூலமாகவும் தொலைபேசி மூலமாகவும் ஊழியம் செய்தோம். அந்த சமயத்தில், இந்த மாதிரி ஊழியம் செய்வதில் நமக்கு இருக்கும் திறமைகளை இன்னும் நன்றாக வளர்த்துக்கொள்ள முடிந்தது. இருந்தாலும், நல்ல செய்தியைச் சொல்வதற்கு நமக்கு இருக்கும் முக்கியமான வழி வீட்டுக்கு வீடு ஊழியம்தான்! அதனால், வீட்டுக்கு வீடு ஊழியத்தில் உங்களால் தவறாமல் கலந்துகொள்ள முடிகிறதா?
கீழே கொடுக்கப்பட்டிருக்கும் விஷயங்களை செய்ய வீட்டுக்கு வீடு ஊழியம் நமக்கு எப்படி உதவும்?
நம் ஊழியப் பகுதியில் இருக்கும் எல்லாரிடமும் பேச...
கற்றுக்கொடுக்கும் திறமையை வளர்க்க... தைரியம், பாரபட்சம் பார்க்காமல் இருப்பது, தியாகம் செய்வது போன்ற குணங்களை வளர்க்க...
பைபிள் படிப்புகளை ஆரம்பிக்க...
எல்லா வானிலையிலும் பிரசங்கிக்கிறார்கள் என்ற வீடியோவைக் காட்டுங்கள். பிறகு இப்படிக் கேளுங்கள்:
ஃபெரோ தீவுகளில் ஊழியம் செய்கிறவர்களிடமிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொண்டீர்கள்?
8. சபை பைபிள் படிப்பு
(30 நிமி.) lfb பாடங்கள் 42-43