உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
Tamil (Spoken)
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • இந்த வாரம்
மே 19-25
கிறிஸ்தவ வாழ்க்கையும் ஊழியமும் பயிற்சி புத்தகம்—2025 | மே

மே 19-25

நீதிமொழிகள் 14

பாட்டு 89; ஜெபம் | ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)

பைபிளில் இருக்கும் புதையல்கள்

1. பேரழிவு தாக்கும்போது ஜாக்கிரதையாக நடந்துகொள்ளுங்கள்

(10 நிமி.)

“யார் எதைச் சொன்னாலும்” நம்பிவிடாதீர்கள்(நீதி 14:15; w23.02 பக். 23 பாரா. 10-12)

உங்களுக்குத் தோன்றுவதையெல்லாம் பட்டென்று செய்துவிடாதீர்கள்; முன் அனுபவத்தை மட்டுமே நம்பியிருக்காதீர்கள் (நீதி 14:12)

யெகோவாவின் அமைப்பு தரும் ஆலோசனைகள்படி நடக்காதவர்களின் பேச்சைக் கேட்காதீர்கள் (நீதி 14:7)

JW பிராட்காஸ்டிங் நிகழ்ச்சியை ஒரு குடும்பம் பார்க்கிறது.

யோசித்துப் பாருங்கள்: மூப்பர்களே, பேரழிவு தாக்கும்போது ஆலோசனைகளுக்குக் கீழ்ப்படியவும் யெகோவாவை நம்பியிருக்கவும் தயாராக இருக்கிறீர்களா?—w24.07 பக். 5 பாரா 11.

2. புதையல்களைத் தோண்டி எடுங்கள்

(10 நிமி.)

  • நீதி 14:17—“எதையும் யோசித்து செய்கிறவன்” என்ன விதங்களில் வெறுக்கப்படுகிறான்? (it-2 பக். 1094)

  • இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?

3. பைபிள் வாசிப்பு

(4 நிமி.) நீதி 14:1-21 (th படிப்பு 11)

ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்

4. பேச ஆரம்பிப்பது

(3 நிமி.) பொது ஊழியம். செலவுகளை எப்படிச் சமாளிப்பது என்று நினைத்துக் கவலைப்படும் ஒருவருக்குப் பொருத்தமான குறிப்பை பைபிளிலிருந்து காட்டுங்கள். (lmd பாடம் 3 குறிப்பு 3)

5. மறுபடியும் சந்திப்பது

(4 நிமி.) வீட்டுக்கு வீடு ஊழியத்தில் பார்த்த ஒருவரை மறுபடியும் சந்தியுங்கள். போன சந்திப்பில் அவர் எந்த விஷயத்தில் ஆர்வம் காட்டியிருந்தாரோ அது சம்பந்தமான ஒரு பத்திரிகையைக் கொடுங்கள். (lmd பாடம் 9 குறிப்பு 4)

6. சீஷர்களை உருவாக்குவது

(5 நிமி.) தினமும் பைபிளை வாசிக்க மாணவரை உற்சாகப்படுத்துங்கள், அந்தக் குறிக்கோளை எப்படி அடையலாம் என்று விளக்குங்கள். (th படிப்பு 19)

கிறிஸ்தவர்களாக வாழுங்கள்

பாட்டு 126

7. பேரழிவைச் சந்திக்கத் தயாராக இருங்கள்

(15 நிமி.) கலந்துபேசுங்கள்.

ஒரு மூப்பர் நடத்த வேண்டும். கிளை அலுவலகத்திடமிருந்தும் மூப்பர் குழுவிடமிருந்தும் நினைப்பூட்டுதல்கள் கிடைத்திருந்தால் அதையும் சொல்லுங்கள்.

நாம் “கடைசி நாட்களில்” வாழ்வதால், கஷ்டங்கள் அதிகமாகிக்கொண்டே போகும் என்று நமக்குத் தெரியும். (2தீ 3:1; மத் 24:8-க்கான ஆராய்ச்சிக் குறிப்பு, nwtsty) பேரழிவுக்கு முன்பும், பேரழிவு சமயத்திலும் நம்முடைய உயிரைக் காப்பாற்றிக்கொள்வதற்குத் தேவையான ஆலோசனைகளை யெகோவா நமக்குக் கொடுக்கிறார். நாம் உயிர் பிழைப்போமா இல்லையா என்பது அந்த ஆலோசனைகளுக்குக் கீழ்ப்படிகிறோமா என்பதைப் பொறுத்துதான் இருக்கிறது. அதாவது, இப்போதே நம் விசுவாசத்தைப் பலப்படுத்துகிறோமா, நமக்குத் தேவையானதையெல்லாம் தயாராக வைத்திருக்கிறோமா என்பதைப் பொறுத்துதான் இருக்கிறது.—நீதி 14:6, 8.

  • விசுவாசத்தைப் பலப்படுத்துங்கள்: பைபிளையும் பைபிள் பிரசுரங்களையும் படிப்பதற்குத் தவறாமல் நேரம் ஒதுக்குங்கள். வித்தியாசமான விதங்களில் ஊழியம் செய்வதற்குத் தேவையான திறமைகளை வளர்த்துக்கொள்ளுங்கள். பேரழிவினால் சபையில் இருக்கும் மற்றவர்களைக் கொஞ்ச நாட்களுக்குத் தொடர்புகொள்ள முடியாமல் இருந்தால் பதட்டப்படாதீர்கள். (நீதி 14:30) யெகோவாவிடமிருந்தும் இயேசுவிடமிருந்தும் யாராலும் உங்களைப் பிரிக்கவே முடியாது.—od பக். 176 பாரா. 15-17

  • தேவையானவற்றை எடுத்து வையுங்கள்: அவசர காலத்துக்குத் தேவையானதையெல்லாம் ஒரு பையில் தயாராக எடுத்து வையுங்கள். அதுமட்டுமல்ல, ரொம்ப நாளைக்கு வீட்டைவிட்டு வெளியே போக முடியாத சூழ்நிலைகூட வரலாம். அதனால், உணவுப் பொருள்களும், தண்ணீரும், மருந்துகளும், அவசியமான மற்ற பொருள்களும் போதுமான அளவு இருக்கின்றனவா என்பதை ஒவ்வொரு குடும்பமும் உறுதிசெய்துகொள்ள வேண்டும்.—நீதி 22:3; g17.5 பக். 4

முந்தின படத்தில் பார்த்த குடும்பத்தினர், அவசர காலத்தில் தேவைப்படும் பொருள்களைத் தயாராக எடுத்து வைக்கிறார்கள்.

பேரழிவை சமாளிக்க நீங்கள் தயாராக இருக்கிறீர்களா? என்ற வீடியோவைக் காட்டுங்கள். பிறகு இப்படிக் கேளுங்கள்:

  • பேரழிவு சமயங்களில் யெகோவா எப்படி நமக்கு உதவி செய்வார்?

  • பேரழிவைச் சமாளிப்பதற்கு இப்போதே நாம் எப்படியெல்லாம் தயாராகலாம்?

  • பேரழிவுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நாம் எப்படியெல்லாம் உதவி செய்யலாம்?

உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்:

‘சமீபத்தில் நடந்த இயற்கைப் பேரழிவுகளிலிருந்து அல்லது மனிதர்கள் ஏற்படுத்திய பேரழிவுகளிலிருந்து, தயாராக இருப்பது சம்பந்தமாக நான் என்ன பாடங்களைக் கற்றுக்கொண்டேன்?’

8. சபை பைபிள் படிப்பு

(30 நிமி.) bt அதி. 26 பாரா. 18-22, பக். 209-ன் பெட்டி

முடிவான குறிப்புகள் (3 நிமி.) | பாட்டு 116; ஜெபம்

பொருளடக்கம்
காவற்கோபுரம் (படிப்பு)—2025 | மார்ச்

படிப்புக் கட்டுரை 11: மே 19-25, 2025

14 இயேசுவைப் போல் ஆர்வத்துடிப்போடு ஊழியம் செய்யுங்கள்

கூடுதலாக படிக்க

மற்ற கட்டுரைகள்

தமிழ் (பேச்சு வழக்கு) பிரசுரங்கள் (2022-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • Tamil (Spoken)
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்