மே 26–ஜூன் 1
நீதிமொழிகள் 15
பாட்டு 102; ஜெபம் | ஆரம்பக் குறிப்புகள் (1 நிமி.)
1. சந்தோஷமாக இருக்க மற்றவர்களுக்கு உதவுங்கள்
(10 நிமி.)
பெரிய சோதனைகள் வரும்போது எல்லா நாட்களுமே திண்டாட்டமாக இருப்பதாக நம் சகோதர சகோதரிகள் நினைக்கலாம் (நீதி 15:15)
கஷ்டத்தில் தவிக்கிறவர்களை உபசரியுங்கள் (நீதி 15:17; w10 11/15 பக். 31 பாரா 16)
‘ஒருவரின் சந்தோஷப் பார்வையும்,’ அவர் சொல்லும் உற்சாகமான ஒருசில வார்த்தைகளும் அவர்களுக்கு ரொம்பவே ஆறுதலாக இருக்கும் (நீதி 15:23, 30, அடிக்குறிப்பு; w18.04 பக். 23-24 பாரா. 16-18)
உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘என்னுடைய சபையில் யாருக்கு உற்சாகம் தேவைப்படுகிறது? அவருக்கு நான் எப்படி உதவலாம்?’
2. புதையல்களைத் தோண்டி எடுங்கள்
(10 நிமி.)
நீதி 15:22—மருத்துவ சிகிச்சைகள் சம்பந்தமாக சரியான முடிவுகளை எடுக்க இந்த பைபிள் வசனம் எப்படி உதவி செய்யும்? (ijwbq கட்டுரை 39 பாரா 3)
இந்த வார பைபிள் வாசிப்பிலிருந்து என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?
3. பைபிள் வாசிப்பு
(4 நிமி.) நீதி 15:1-21 (th படிப்பு 2)
4. பேச ஆரம்பிப்பது
(3 நிமி.) வீட்டுக்கு வீடு ஊழியம். (lmd பாடம் 1 குறிப்பு 5)
5. பேச ஆரம்பிப்பது
(4 நிமி.) சந்தர்ப்ப சாட்சி. பைபிள் படிப்பைப் பற்றிச் சொல்லுங்கள். (lmd பாடம் 2 குறிப்பு 4)
6. சீஷர்களை உருவாக்குவது
(5 நிமி.) குடும்பத்தாருடைய எதிர்ப்பைச் சமாளிக்கப் போராடும் மாணவரை உற்சாகப்படுத்துங்கள். (th படிப்பு 4)
பாட்டு 155
7. சோதனைகள் வந்தாலும் நம்மால் சந்தோஷமாக இருக்க முடியும்
(15 நிமி.) கலந்துபேசுங்கள்.
நம்மால் சந்தோஷமாக இருக்க முடியும்—வேதனையிலும், பசியிலும், நிர்வாணத்திலும் என்ற வீடியோவைக் காட்டுங்கள். பிறகு இப்படிக் கேளுங்கள்:
இந்த அனுபவங்களிலிருந்து நீங்கள் என்ன கற்றுக்கொண்டீர்கள்?
8. சபை பைபிள் படிப்பு
(30 நிமி.) bt அதி. 27 பாரா. 1-9