கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
“ஏதாவது சேமித்து வையுங்கள்”
மனமுவந்து நன்கொடை கொடுக்கும் விஷயத்தில் ‘இருக்கும்போது பார்த்துக்கொள்ளலாம்’ என்று நாம் நினைக்கக் கூடாது. அதற்காக நாம் ‘ஏதாவது சேமித்து வைப்பதை’ வழக்கமாக்கிக்கொள்ள வேண்டும் என்று அப்போஸ்தலன் பவுல் உற்சாகப்படுத்தினார். (1 கொ. 16:2) இந்த அறிவுரையை நாம் பின்பற்றினால் தூய வணக்கத்தை ஆதரிக்க முடியும், இது நமக்கு ரொம்ப சந்தோஷத்தைக் கொடுக்கும். ‘நான் கொடுக்கிற நன்கொடை ரொம்ப கம்மியாக இருக்கிறதே’ என்று நாம் நினைக்கலாம். ஆனால், நம்முடைய மதிப்புமிக்க பொருள்களால் யெகோவாவை மகிமைப்படுத்த வேண்டும் என்ற நம் ஆசையை அவர் உயர்வாக மதிக்கிறார்.—நீதி. 3:9.
ஏதாவது சேமித்து வைத்ததற்கு நன்றி என்ற வீடியோவைப் பார்த்துவிட்டு இந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்லுங்கள்:
திட்டமிட்டு நன்கொடை கொடுப்பதால் கிடைக்கும் நன்மைகள் என்ன?
‘ஏதாவது சேமித்து வைப்பதற்காக’ சிலர் என்ன செய்கிறார்கள்?