-
ஆதியாகமம் 48:17பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
17 எப்பிராயீமின் தலையில் தன்னுடைய அப்பா வலது கையை வைத்தது யோசேப்புக்குப் பிடிக்கவில்லை. அதனால், அவருடைய கையை எப்பிராயீமின் தலையிலிருந்து எடுத்து மனாசேயின் தலையில் வைக்கப் போனார்.
-
-
எண்ணாகமம் 1:32, 33பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
32 யோசேப்பின் மகனான எப்பிராயீமின் மகன்கள்+ பெயர் பெயராக, வம்சம் வம்சமாக, தந்தைவழிக் குடும்பம் குடும்பமாகப் பதிவு செய்யப்பட்டார்கள். படையில் சேவை செய்யத் தகுதியுள்ள ஆண்களில் 20 வயதும் அதற்கு அதிகமான வயதுமுள்ள எல்லாரும் எண்ணப்பட்டார்கள். 33 எப்பிராயீம் கோத்திரத்தில் பெயர்ப்பதிவு செய்யப்பட்டவர்கள் 40,500 பேர்.
-
-
உபாகமம் 33:17பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
17 அவனுடைய கம்பீரம் காளையின் முதல் கன்றைப் போன்றது.
அவனுடைய கொம்புகள் காட்டு எருதின் கொம்புகள் போன்றவை.
அவற்றால் ஜனங்களை அவன் முட்டி மோதுவான்,
அவர்கள் எல்லாரையும் பூமியெங்கும் விரட்டியடிப்பான்.
அந்தக் கொம்புகள்தான் எப்பிராயீமின் பத்தாயிரக்கணக்கான வீரர்கள்.+
அந்தக் கொம்புகள்தான் மனாசேயின் ஆயிரக்கணக்கான வீரர்கள்” என்று சொன்னார்.
-