-
ஆதியாகமம் 41:51, 52பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
51 மூத்த மகன் பிறந்தபோது யோசேப்பு, “என்னுடைய எல்லா பிரச்சினைகளையும் என் அப்பாவின் குடும்பத்தையும் நான் மறக்கும்படி கடவுள் செய்தார்” என்று சொல்லி அவனுக்கு மனாசே*+ என்று பெயர் வைத்தார். 52 இரண்டாவது மகன் பிறந்தபோது, “நான் கஷ்டங்கள் அனுபவித்த இந்தத் தேசத்தில் கடவுள் என் வம்சத்தைத் தழைக்க வைத்தார்”+ என்று சொல்லி அவனுக்கு எப்பிராயீம்*+ என்று பெயர் வைத்தார்.
-
-
ஆதியாகமம் 48:17-19பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
17 எப்பிராயீமின் தலையில் தன்னுடைய அப்பா வலது கையை வைத்தது யோசேப்புக்குப் பிடிக்கவில்லை. அதனால், அவருடைய கையை எப்பிராயீமின் தலையிலிருந்து எடுத்து மனாசேயின் தலையில் வைக்கப் போனார். 18 அப்போது தன் அப்பாவிடம், “அப்பா, நீங்கள் கையை மாற்றி வைத்திருக்கிறீர்கள். இவன்தான் மூத்த மகன்.+ உங்களுடைய வலது கையை இவனுடைய தலையில் வையுங்கள்” என்றார். 19 ஆனால் அவருடைய அப்பா கொஞ்சமும் சம்மதிக்காமல், “தெரியும் மகனே, எனக்குத் தெரியும். இவனும் ஒரு பெரிய ஜனக்கூட்டமாக ஆவான், இவனும் பலம்படைத்தவனாக ஆவான். ஆனால், இவனுடைய தம்பி இவனைவிட அதிக பலம்படைத்தவனாக ஆவான்.+ இவனுடைய தம்பியின் சந்ததி மாபெரும் தேசங்களைப் போலப் பெருகும்”+ என்றார்.
-