7 விசுவாசத்தால்தான் நோவா,+ பார்க்காதவற்றைப் பற்றிக் கடவுளிடமிருந்து எச்சரிப்பு கிடைத்தபோது+ கடவுள்பயத்தைக் காட்டினார். தன்னுடைய குடும்பத்தைக் காப்பாற்ற ஒரு பேழையைக் கட்டினார்;+ இந்த விசுவாசத்தால்தான் உலகத்தை அவர் கண்டனம் செய்தார்,+ அதே விசுவாசத்தால்தான் நீதிமான்களில் ஒருவரானார்.