13 அப்போது நோவாவிடம் கடவுள், “எல்லா உயிர்களையும் அழிக்க வேண்டுமென்று நான் முடிவுசெய்துவிட்டேன். ஏனென்றால், இந்தப் பூமியில் எங்கு பார்த்தாலும் மனுஷர்கள் வன்முறையில் இறங்குகிறார்கள். அதனால், அவர்களையும் இந்தப் பூமியையும் நான் நாசமாக்கப்போகிறேன்.+
17 வானத்தின் கீழிருக்கிற எல்லா உயிர்களையும்* அழிப்பதற்கு பூமியின் மேல் நான் பெரிய வெள்ளத்தைக்+ கொண்டுவரப்போகிறேன். அப்போது, பூமியிலுள்ள எல்லா உயிர்களும் இறந்துபோகும்.+