12 அதோடு, கடவுள் இதையும் சொன்னார்: “உங்களோடும், உங்களோடு இருக்கிற எல்லா உயிரினங்களோடும், தலைமுறை தலைமுறைக்கும் நான் செய்யும் ஒப்பந்தத்துக்கு அடையாளம் இதுதான். 13 நான் ஒரு வானவில்லை மேகத்தில் வர வைக்கிறேன். இந்தப் பூமியில் வாழ்கிற எல்லாருடனும் நான் செய்கிற ஒப்பந்தத்துக்கு இதுதான் அடையாளம்.