26 ஆபிரகாமின் காலத்தில் பஞ்சம் உண்டானது போலவே,+ மறுபடியும் ஒரு பஞ்சம் தேசத்தில் உண்டானது. அதனால், கேராரிலிருந்த பெலிஸ்திய ராஜாவான அபிமெலேக்கிடம் ஈசாக்கு போனார். 2 அப்போது யெகோவா அவர்முன் தோன்றி, “நீ எகிப்துக்குப் போகாதே. நான் சொல்கிற இடத்துக்குப் போய்க் குடியிரு.