34 அதற்கு அவர், “நான் ஆபிரகாமின் ஊழியன்.+ 35 யெகோவா என் எஜமானை அளவில்லாமல் ஆசீர்வதித்திருக்கிறார். அவருக்கு ஆடுமாடுகள், ஒட்டகங்கள், கழுதைகள், வெள்ளி, தங்கம், வேலைக்காரர்கள், வேலைக்காரிகள் எல்லாவற்றையும் கொடுத்து அவரைப் பெரிய பணக்காரராக ஆக்கியிருக்கிறார்.+